Sunday, March 15, 2020

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பத்திரிக்கை செய்தி.

செய்தி வெளியீடு எண். 213

நாள்: 15.03.2020



தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பத்திரிக்கை செய்தி*

கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார

அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார

நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய் தொற்றாக (Pandemig அறிவித்துள்ளது.

மாண்புமிகு அம்மாவின் அரசு எடு தீவிர பாதுகா நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாண்புமிகு

முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள் :

தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய நான்கு விமான நிலையங்களிலும் வெளிநாட்டிலிருந்து பயணிகள் வருகின்றனர். மத்திய அரசு சில வெளிநாட்டு பயணிகள் வருகையை தடை செய்துள்ளது.

எனினும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை இயன்றவரை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே
ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். கண்காணிப்புப் பணிகள் மற்றும் மற்றும் சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் (LKG & UKG), துவக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை) 31.3.2020 வரை விடுமுறை அளிக்கவும், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் (Taluk) உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் (Malls) 31.3.2020 வரை மூடவும்,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடிக்கிவிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநில பேரிடர் நிதியிலிருந்து ரூ.30 கோடி, போக்குவரத்துத்துறைக்கு ரூ.5 கோடி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.4 கோடி, நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.6 கோடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு ரூ 5 கோடி, பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ.2 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.3 கோடி, பள்ளிக் கல்வி மற்றும் உயர்க்கல்வித்துறைக்கு ரூ.2 கோடி மையங்களுக்கு ரூ.0.5 கோடி மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு ரூ.2.5 கோடி ஆக மொத்தம் ரூ.60 கோடி உடனடியாக வழங்க ஆணையிட்டார்கள். சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கு அங்கன்வாடி

மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டார்.

பொது இடங்களில் குறிப்பாக, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல்
உள்ளவர்களைக்

கண்டறிந்து, அத்தகையோரை மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதைத் தடுக்க தகுந்த தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அதிகாரிகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார். இந்து சமய அறநிலையத்துறை

மேற்கூறிய பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சி இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பு தலைவர்கள் மற்றும் மூத்த

அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும், தேசிய நலவாழ்வு குழும நிதியிலிருந்தும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் போர்க்கால அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மூலம், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த வருவாய் நிருவாக ஆணையருக்கு உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வருவாய் நிருவாக ஆணையருக்கு தினந்தோறும் அனுப்ப வேண்டும்
என்றும், வருவாய் நிருவாக ஆணையர் அந்த அறிக்கைகளைத் தொகுத்து, மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களுக்கு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க மாண்புமிகு சுகாதாரத் துறை அமைச்சர் அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார் : | பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும் அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும்,

* கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும், • பொதுமக்கள் பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,
கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொட வேண்டாம்
என்றும்
அணுகவும்
வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

• பெற்றோர்கள் குழந்தைகளை விடுமுறை நாட்களின் பொழுது  குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும், கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற இயலும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் நோய்க்கான அறிகுறி உள்ளவர்களை  உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகவும்.

 மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

back to top

Back To Top