அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு இம் மாதம்முதல் கட்டாயம்ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம்சம்பள பட்டியல் அனுப்பஅறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால், சர்வர் பிரச்னைஉள்ளிட்ட காரணங்களால்உரிய நேரத்தில் சம்பளம்கிடைக்குமா என்ற சந்தேகம்எழுந்துள்ளது. தமிழகம்முழுவதும் பணிபுரிந்து வரும்அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மற்றும்ஓய்வூதியம்பெறுபவர்களுக்கு அந்தந்ததுறை மூலம் சம்பள பட்டியல்பெறப்பட்டு, மாவட்டகருவூலம் மூலம் சம்பளம்வழங்கப்படுகிறது. இதுதற்போது முற்றிலும்ஆன்லைனுக்குமாற்றப்பட்டது. இதற்கெனஐஎப்எச்ஆர்எம்எஸ்சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு,மாநிலம் முழுவதும் உள்ளபணம் பெற்று வழங்கும்அலுவலர்களுக்கு பயிற்சிஅளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஐஎப்எச்ஆர்எம்எஸ்நடைமுறை வரும் ஏப்ரல்முதல் முழுமையாகஅமல்படுத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டது.இதனிடையே, சேலம்,ஈரோடு, நெல்லை உள்படசில மாவட்டங்களில் நடப்புமாதம் முதலே,ஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம்மட்டுமே சம்பள பட்டியல்அனுப்பஉத்தரவிடப்பட்டுள்ளது. பலஇடங்களில் சர்வர் பிரச்னைஉள்ளிட்ட காரணங்களால்,பட்டியல் அனுப்புவதுதடைபட்டுள்ளது. இதனால்,நடப்பு மாதம் உரியநேரத்தில் சம்பளம்கிடைக்குமா என்ற கேள்விஎழுந்துள்ளது.
இது குறித்து பணம் பெற்றுவழங்கும் அலுவலர்கள்கூறியதாவது: தற்போது,அளிக்கப்பட்டுள்ளசாப்ட்வேரில் அரசுஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களின்விவரங்களை பதிவுசெய்தால், சர்வர்தாமதமாவதுடன்,ஏற்றுக்கொள்ளாமல் டெலிட்ஆகிறது. பல துறையில்உள்ள அலுவலர்களுக்குஐஎப்எச்ஆர்எம்எஸ்பதிவேற்றம் குறித்துஎந்தவித பயிற்சியும்முழுமையாகஅளிக்கப்படவில்லை. மாவட்ட கருவூலத்தில் நேரில்சென்று கேட்டால், அங்குள்ளவிப்ரோ பணியாளர்கள்,இதை இங்கு சரிசெய்யமுடியாதுஎன சாதாரணமாககூறுகின்றனர். இதுபோன்றபல்வேறு பிரச்னைகள்இருக்கும் போது, சம்பளபட்டியலைஐஎப்எச்ஆர்எம்எஸ் மூலம்போட்டவர்களுக்கு மட்டுமேஏற்றுக்கொள்ளப்படும்என்பது வேதனைஅளிக்கிறது. ஒவ்வொருமாதமும் அதிகபட்சம் 25ம்தேதிக்குள் சம்பள பட்டியல்அனுப்பப்பட்டு விடும்.
சர்வர் பிரச்னையால், நடப்புமாதத்திற்கு இதுவரைபட்டியல் முழுமையாகதயாராகவில்லை. இதனால்,ஆயிரக்கணக்கான அரசுஊழியர்கள், ஆசிரியர்கள்மற்றும் ஓய்வூதியதாரர்கள்உரிய நாளில் சம்பளம்பெறமுடியாத நிலைஏற்பட்டுள்ளது. எனவே,இதுகுறித்து உடனடியாகநடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment