Saturday, February 29, 2020

MICE TEST - FEBRUARY 2020

அன்பு மாணவச் செல்வங்களே........
       இம்மாதத்திற்கான் தேர்வு இதோ...... தேர்வினை முடிக்க நாளை வரை அவகாசம் உள்ளது. எனவே உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்....


கீழுள்ள link ஐ சொடுக்கி அதில் உள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும்.
தேர்வு எப்படி இருந்தது என்பதை 8870986722 என்ற எண்ணிற்கு அழைத்து தங்களின் கருத்துகளை கூறலாம்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLScAsNvw-NQp-Ddx3nBVlBI6WDW1bZezFh7C8kDo6-xwavbOnA/viewform?usp=sf_link

நன்றியும் .... வாழ்த்துகளும்


from covaiwomenict https://ift.tt/32DI3Nu

EMIS U-DISE PLUS இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள்.

EMIS U-DISE PLUS DCF பூர்த்தி செய்கிற பொழுது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள்.



கீழ்க்கண்ட தலைப்புகளில் save கொடுக்கும் பொழுது எந்தக் கட்டத்தில் பூர்த்தி செய்யாமல் இருக்கிறதோ அந்த இடத்தில் field is required சிவப்பு நிறத்தில் நட்சத்திர குறியுடன் வரும் அதில் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் நம் பள்ளியில் அதில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகவல் இல்லை என்றால் பூஜ்ஜியம் கொடுத்துவிட வேண்டும் அப்போதுதான் save ஆகும். ஒவ்வொரு தலைப்பிலும் இதுபோன்ற நடைமுறையை பின்பற்றினால் இடர்பாடு ஏற்படவில்லை.
(இரண்டு தலைப்புகளை தவிர)

1) Download DCF:
இந்தத் தலைப்பில் Form download இடர்பாடு இல்லை

2) Basic Info :

இந்தத் தலைப்பில் முழுவதுமாகவே பூர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது தேவையானவற்றை நாம் பூர்த்தி செய்து save கொடுத்துவிடலாம் இடர்பாடு இல்லை save ஆகிறது.


3) School Details:

இந்த தலைப்பிலும் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து save கொடுத்துவிடலாம் இதிலும் எந்தவித இடர்பாடும் இல்லை save ஆகிறது.


4) Training Details:

இந்த தலைப்பிலும் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து save  செய்யலாம் எந்தவித இடர்பாடும் இல்லை.
Save ஆகிறது.

5) Committee Details:

இந்தத் தலைப்பில்
1.49) school inspection during last and current academic year.
Inspections/visits done by*என்ற பகுதியில்
பூர்த்தி செய்து save செய்தாலும் field is required* என்று  வருகிறது இந்த தலைப்பில் தான் இடர்பாடு உள்ளது இது சரி செய்யப்பட வேண்டும் EMIS TEAMக்கு தகவல் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கம் மட்டும் save ஆகவில்லை.

6) Land Details:

இந்தத் தலைப்பில் ground land 200sq மேல் பதிவு செய்திருந்தால் field is required என்று வருகிறது அதனால் 200sq மேல் கொடுத்து இருந்தால் அதுவும் save ஆகவில்லை இதிலும் இடர்பாடு உள்ளது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7) School Inventory:

இந்தத் தலைப்பில் சரியான தகவல் பூர்த்தி செய்து இருந்தால் எந்தவித இடர்பாடு இல்லை save ஆகிறது.

8) Funds:

இந்தத் தலைப்பில் சரியான தகவல்கள் பூர்த்தி செய்திருந்தால் எந்தவித இடர்பாடும் இல்லை.save ஆகிறது.

ஆக 7 தலைப்புகளில் 2 தலைப்பில் மட்டும் இடர்பாடு ஏற்படுகிறது.
மற்ற தலைப்புகள் அனைத்தும் save ஆகிறது.

Friday, February 28, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.02.20

திருக்குறள்


அதிகாரம்:கல்வி

திருக்குறள்:393

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

விளக்கம்:

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.

பழமொழி

Yourself first ,others afterwards.

 தனக்கு மிஞ்சித் தான் தானமும் தருமமும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

எதை செய்யும் முன்னரும் நான்கு முறை உன் மூளையை திரட்டி சிந்தனை செய்வாயானால் நிச்சயம் தெளிவு பிறக்கும்....

பொது அறிவு

1.உலகிலேயே அதிக எரிமலைகள் கொண்ட நாடு எது?

 இந்தோனேஷியா

2.உலக சிட்டுக் குருவிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 மார்ச் 20.

English words & meanings

Envelope - the paper cover for a letter. Noun. கடிதத்திற்கான காகித உறை.

Envelop -to cover or surround somebody. Verb. ஒருவரை மூடுதல்.

ஆரோக்ய வாழ்வு

நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Some important  abbreviations for students

GG - Good Game

GJ - Good Job

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

ஆப்பைப் பிடுங்கிய குரங்கு

மகத நாட்டில் சிவா எனும் தச்சன் வாழ்ந்து வந்தான். அவன் அவ்வூர் கோயில் வேலைக்காக மரங்களை அறுத்து கொண்டிருந்தான்.

மாலை வேளை நெருங்கவும் சிவா தான் பாதியில் அறுத்து கொண்டிருந்த மரத்தில் ஆப்பு ஒன்றை சொருகி வைத்து விட்டு வீட்டிற்கு சென்றான்.

அருகில் இருந்த மரத்தில் ஏராளமான குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு குரங்கு சிவா பாதி அறுத்து விட்டு சென்ற மரத்தின் மீது விளையாடியது.

சும்மா இல்லாமல் அம்மரத்தின் மீதே அமர்ந்து கொண்டு அங்கே சொருகி வைத்திருந்த ஆப்பை அசைத்து ஆட்டிப் பிடுங்கியது.

அச்சமயத்தில் அக்குரங்கின் கால்கள் ஆப்பு வைத்திருந்த பிளவில் மாட்டிக் கொண்டது. இரவு நெருங்கும் நேரம் ஆகவே ஒருவரும் உதவி செய்ய இல்லாமல் மாட்டிகொண்டு இறந்துபோனது.

நீதி :
தனக்கு தகாத காரியங்களை செய்தல் ஆகாது!

இன்றைய செய்திகள்

29.02.20

★தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் இரு ஷிப்டுகளாக இருந்த வகுப்புகள் தற்போது ஒரே ஷிப்டாக மாற்றப்பட உள்ளன. இதற்கான அடிப்படை வசதிகள் என்னென்ன வேண்டும் எனக் கேட்டு உயர் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

★2019-2020 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுத சிறப்புச் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.

★அரசு மருத்துவர்களுக்குப் போராட்டம் நடத்த உரிமையில்லை எனத் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களைப் பணிமாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

★மகாராஷ்டிர மாநிலத்தில், பிறக்கும்போதே 2 லட்சம் குழந்தைகளுக்கு எடை குறைவு, ஆரோக்கியக் குறைவு காணப்பட்ட நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் 12 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் 22,179 பேர் மும்பையில் பிறந்தவர்கள்.

★பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பிளாக்ஹோல் அதாவது கருந்துளையிலிருந்து மிகப்பெரிய வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

★தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் ஆட்டத்தில் 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.

Today's Headlines

🌸Two shifts in Government Arts and Science Colleges in Tamil Nadu are now going to be merged into single shift so the Department of Higher Education has sent a circular asking what are the basic amenities they need for the single shift.

🌸 With the commencement of public examination for the 2019-2020 academic year , special privileges have been granted for the  differently abled students.

 🌸The Madras High Court has ruled that the government doctors have no right to protest, and have cancelled the transfer orders given by the government for the protesting doctors.

 🌸In the state of Maharashtra, more than 2 lakh babies born with low weight and less health . In the last year alone more than 12,000 children died says the Maharashtra state government report.  Of these, 22,179 were born in Mumbai.

 🌸Astronomers have discovered that the largest eruption took place in the  largest black hole of the universe.

 🌸Australia won the series and the trophy by 2-1 in the third T20 cricket match against South Africa by 97 runs.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2w9OtrH

MICE TEST - 28.02.20

மைத்துளி வணக்கம்


**MICE TEST:77*

1. வெட்டுக்கிளிகளால் அதிக பாதிப்புக்குள்ளான பாகிஸ்தான் நாட்டிற்கு, அவைகளைக் கொல்லும் பொருட்டு வாத்துக்களை அனுப்பும் நாடு எது?

a) நேபாளம்
b)சீனா
c) இந்தியா
d) பங்களாதேஷ்

2.HAL (Hindustan Aeronautics Ltd) ன் தலைமையகம் எங்குள்ளது?

a) டெல்லி
b)பஞ்சாப்
c)சென்னை
d)பெங்களூரு

3.சேகர் சி மாண்டே என்பவர் எதன் இயக்குநர்?

a) ISRO
b) CSIR
c)BHEL
d)NTPC


4.உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முதல்  பெண்
இந்திய காட்டுயிர் ஒளிப்படக்கலைஞர் யார்?

a) ராதிகா ராமசாமி
b) ராதிகா வெங்கடாச்சலம்
c)ஷோபா டே
d) லட்சுமி ராய்

5.பூவரசம் பீப்பீ,சில்லுக் கருப்பட்டி ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் யார்?

a) சமுத்திரக்கனி
b) ஹலிதா ஷமீம்
c) லட்சுமி ராமகிருஷ்ணன்
d)மாரி.செல்வராஜ்

6.இந்திய கடலோர பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்ட அதி நவீன ரோந்து கப்பலின் பெயர் என்ன?

 a) விக்டோரியா
b) ஆதித்யா
c)விக்ரம்
d) வஜ்ரா

நேற்றைய சரியான விடைகள்

Answers for **MICE TEST:76**

1. c) மரியா ஷரபோவா ( Russian Tennis player)

2. a) சங்கரன் கோயில்

3. c) கோவை

4. d)Children of Heaven

5.a) ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலிய)

6. a) நெதர்லாந்து

நேற்று சரியான விடைகள் பதிவிட்டவர்கள்

1. S.பிரியங்கா, 5-ஆம் வகுப்பு
2. S.நிகிதா, 5-ஆம் வகுப்பு
    ஊ.ஒ.ந.பள்ளி, பெரியவரிகம், திருப்பத்தூர்

3.  R. சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
4. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
5. S.விசாலினி, 8-ஆம் வகுப்பு
6. S. பூஜாஸ்ரீ, 10-- ஆம் வகுப்பு
ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

அனைவருக்கும் வாழ்த்துகள்...... நாளை மாதத்தேர்வு...... 


from covaiwomenict https://ift.tt/32yHRz5

Thursday, February 27, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.02.20

திருக்குறள்


அதிகாரம்:கல்வி

திருக்குறள்:392

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

விளக்கம்:

எண்,  எழுத்து என்று சொல்லப்படும் இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.

பழமொழி

The finest lawn soonest stains

 காய்ந்த மரமே கல்லடி படும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

உள்ளதை உள்ளபடி பார்ப்பதும் கேட்பதும் உரைப்பதும் தான் கல்வி....
         
                                      பெரியார்

பொது அறிவு

1.தேசிய அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 பிப்ரவரி 28

2.தேசிய அறிவியல் தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது?

 சர் சி.வி. இராமன் அவர்கள் இந்நாளிலேதான் இராமன் விளைவை கண்டறிந்தார். அதனை  நினைவு கூறும் வகையில் கொண்டாடப்டுகிறது.

3. தேசிய அறிவியல் தினம் - 2020 ன் மையக்கருத்து என்ன?

அறிவியலில் பெண்கள்
Women in Science

English words & meanings

Dear - a way of addressing the people who are closed to us, அன்பானவர்களை அழைக்கும் ஒரு வார்த்தை.

Deer - a beautiful wild animal which runs very fast. மான்

ஆரோக்ய வாழ்வு

செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு .எனவே எடையை குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழை காலையில் உட்கொண்டு வந்தால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

Some important  abbreviations for students

TBA - To be announced

TBC - To be continued

நீதிக்கதை

பஞ்சதந்திரக் கதைகள்

முரசு சத்தம்

ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியோடு இருந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்ற போது திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. ஏதோ ஒரு பெரிய விலங்கிற்கு நாம் இன்று இரையாகப் போகிறோம் என்று எண்ணி பயந்து கொண்டிருந்தது. ஆனால் சற்று நேரம் கழித்து அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தது.

பிறகு தான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல சென்று சுற்றிப் பார்த்தது. பசியில் இருந்த நரி அந்த முரசினுள் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிந்து கொண்டது. அந்த முரசினுள் ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருந்து கொண்டு தான் ஒலி எழுப்புகிறது என்று எண்ணி தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணியது. உள்ளே சென்று பார்த்தால் முரசுக்குள் ஒன்றும் இல்லை. ஏமாற்றம் அடைந்த நரி உடல் சோர்வால் மயக்கமுற்று கீழே விழுந்தது.

நீதி :
ஆசையே துன்பத்திற்குக் காரணம்.

வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு

 *ஆனைமுடி தென்இந்தியாவிலேயே
மிகவும் உயரமான சிகரம் ஆகும்..



*  தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இம்மலை முகடு  ஏலக்காய் மலைகள், ஆனை மலைகள், பழனி மலைகள் கூடுமிடத்தில் உள்ளது.
*ஆனைமுடிமலை கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

பாரம்பரிய விளையாட்டு

குலை குலையாய் முந்திரிக் காய்:
 குழந்தைகளை வட்டமாக அமர வைத்து ஒருவர் மட்டும் அவர்களைச் சுற்றி பாட்டும் பதிலுமாக சுற்றி வந்து , தன் கையிலுள்ள கைக்குட்டையை வட்டத்திலுள்ள ஒருவரின் மேல் போட, அவர் துரத்த விளையாட்டு களைகட்டும். காணொளி அடுத்த வாரம்!!
  பாடல் மட்டும் இதோ!!

🦊குலை குலையா முந்திரிக்கா
🙂நரியே நரியே சுத்தி வா

🦊தீப்பெட்டிய காணோம்
🙂தேடித்தேடி பாரு

🦊மாங்காய் மரத்துல மாங்காய்
🙂உன் வாயில ஊறுகாய்

🦊பச்சரிசிய 🙂தின்பேன்
பல்லை உடைப்பேன்

🦊ஓட்டு மேலே ஏறுவேன்
🙂காலை உடைப்பேன்

🦊கொள்ளையடித்தவன் எங்கிருக்கான்?
🙂கூட்டத்திலிருக்கான் கண்டுபிடி!!!

🦊குருவிகளெல்லாம் கூட்டில் அடையுங்கள்.....

இன்றைய செய்திகள்

28.02.20

★ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. அவர் கண்டுபிடித்த ராமன் விளைவு கோட்பாட்டை உலகுக்கு அறிவித்த நாள் பிப்ரவரி 28. அதனால்தான் அன்றைக்கு தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது.

★தமிழ்நாட்டிலேயே அதிக மாணவர்கள் பயிலும் நடுநிலைப்பள்ளி என்ற பெயரை திருப்பூர், வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி பெற்றுள்ளது.

★பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

★டெல்லி வன்முறையின் எதிரொலியாக அதன் வடகிழக்குப் பகுதிகளில் நடைபெற்று வந்த சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

★ஜப்பான் கப்பலிலிருந்து சுமார் 119 இந்தியர்கள் மற்றும் 5 வெளிநாட்டுப் பயணிகள் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.

★ஷபாலி வர்மாவின் அதிரடியான ஆட்டத்தால், மெல்போர்னில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய மகளிர் அணி.

★5 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட வீராங்கனை என்ற பெயரெடுத்த ரஷ்ய வீராங்கனையுமான மரிய ஷரபோவா டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Today's Headlines

🌸🌸Each year February 28th is celebrating as National Science Day. This is to honour the memory of Sir. C.V. Raman who discovered the Raman's Effect and declared it to the world.

 🌸The Velampalayam Corporation Middle School got the name as the school where most students are studying

🌸 The government News report said that the government employees are required to wear identity cards during work hours, .  In addition, action will be taken against those who violate it.

 🌸The CBSE public exam in the northeastern regions have been postponed as an echo of the Delhi violence.

 🌸About 119 Indians and 5 foreign passengers were brought to India from Japan by the Air India flight.

 🌸With Shabali Verma's stunning performance, the Indian women's team advanced to the semifinals by defeating New Zealand by 4 runs in the league match of yesterday's T20 World Cup in Melbourne.

 🌸Maria Sharapova, a five-time Grand Slam winner and world-renowned Russian star player, has announced her retirement from tennis.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2PrM1U3

MICE TEST - 27.02.20

மைத்துளி வணக்கம்


**MICE TEST:76**

1. சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளவர் யார்?

a) செரீனா வில்லியம்ஸ்
b) வீனஸ் வில்லியம்ஸ்
c) மரியா ஷரபோவா
d) சானியா மிர்சா


2. தென்னிந்தியாவில் முதன் முதலாக 100அடி உயர உலக அமைதிக்கான புத்த கோபுரம் அமைந்துள்ள இடம் எது?

a) சங்கரன் கோயில்
b) சிறுவாணி
c) திருவேற்காடு
d) காட்டுமன்னார்கோயில்

3. தென்னிந்தியாவில் முதன் முதலாக தங்க நகைக்கென தொழிற் பூங்கா எங்கு அமைக்கப்பட உள்ளது?

a) திருச்சி
b) மலப்புரம்
c) கோவை
d) சென்னை

4. தமிழில் "அக்கா குருவி" என தயாராகும்,மஜீத் மஜிதி இயக்கிய உலகப் புகழ் பெற்ற ஈரானியத் திரைப்படம் எது?

a) Way to Home
 b) Parasite
c) Karatae kids
d)Children of Heaven

5.
சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தர வரிசையில் முதலிடம் யார்?

a) ஸ்டீவ் ஸ்மித்(ஆஸ்திரேலிய)
b)விராட் கோலி(இந்தியா)
c) கேன் வில்லியம்ஸ்(நியூஸிலாந்து)
d) மார்னஸ் லாபுஷேன்(ஆஸ்திரேலிய)

6. TVS நிறுவன தலைவர் கோபால் சீனிவாசன்,தமிழகத்திற்கான ...........நாட்டின் கௌரவ துணைத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

a) நெதர்லாந்து
b) தாய்லாந்து
c) நேபாளம்
d) பங்களாதேஷ்


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. b) கே.வி.ஜெயஸ்ரீ
2. c) 34
3. c)சுனில்குமார்
4. d)உலகில். காற்று மாசுள்ள நாடுகளில் இந்தியா 5-வது இடம்.... முதலிடம் அல்ல
5.d)ரஷ்யாவில் நடைபெற்று வரும்சதுரங்க போட்டியில் இந்தியாவின் வைபவ் சூரி தோல்வி 
6. c) Microsoft

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. B.சாரதி, 5-ஆம் வகுப்பு
    ஊ.ஒ.ந.பள்ளி, பெரியவரிகம், திருப்பத்தூர்

2. S.ஆஷா, 8-ஆம் வகுப்பு
3. D.முகமது, 8-ஆம் வகுப்பு
4. தனுஸ்ரீ, 5-ஆம் வகுப்பு
5. A.மொஹமது அப்துல்லா, 5-ஆம் வகுப்பு
6.A.சாபிரா பேகம், 5-ஆம் வகுபு
7. ரிஷானா, 5-ஆம் வகுப்பு
8. A.தனுஜா பேகம், 7-ஆம் வகுப்பு
M.ஆஷ்மிதா, 7- ஆம் வகுப்பு
    மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோவை

9.R.சந்தியா ஜோசப்பின், 8- ஆம் வகுப்பு
10. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
      ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , திருச்சி

அனைவருக்கும் வாழ்த்துகள்......


from covaiwomenict https://ift.tt/2HXZYVZ

Wednesday, February 26, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.02.20

திருக்குறள்


அதிகாரம்:கல்வி

திருக்குறள்:391

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம்:

கற்கத் தகும் நூல்களைப் பிழை இல்லாமல் கற்கவேண்டும். கற்ற பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நடக்கவேண்டும்.

பழமொழி

What the heart thinketh the tongue speaketh

 உள்ளத்தின் நிறைவினால் வாய் பேசும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவது வாழ்க்கை என்று நினைப்பவன் வாழ்கிறான் முள் என்று நினைப்பவன் வீழ்கிறான்....

பொது அறிவு

1.ஒட்டகச்சிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் உள்ளன?

ஏழு

2.மனித கண்களின் எடை எவ்வளவு?

1.5 அவுன்சு.

English words & meanings

Camara - chamber, a separate room. தனி அறை.

Camera - an instrument used to take photos. புகைப்படக் கருவி

ஆரோக்ய வாழ்வு

செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது சிறுநீரகக் கற்கள் உருவாவது ,இதயநோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலை தடுக்கும்.

Some important  abbreviations for students

 rpm - revolutions per minute

qt - quart

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

ஜூடோ பயிற்சியும் ஒற்றைக் கை சிறுவனும்

குறள் :
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

விளக்கம் :
தனது துன்பத்தைப் பற்றி அதனை அறியாமல் இருக்கும் நண்பர்களிடம் சொல்லக்கூடாது. தனது பலவீனத்தைப் பகைவரிடம் வெளிப்படுத்திவிடக் கூடாது.

கதை :
சிறுவன் ஒருவன் ஜூடோ பயில விரும்பினான். அவனுக்கோ ஒரு விபத்தினால் இடது கை போய்விட்டது. எனினும் இந்தக் குறையைப் பொருட்படுத்தாமல், குரு ஒருவர் அவனுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக் கொண்டார்.

தினமும் பயிற்சி அளித்தார் குரு. ஆனால் ஒரே ஒரு குத்து வித்தை தான் சொல்லிக் கொடுத்தார். நான்கைந்து மாதங்கள் சென்றன. அப்போதும் அதே பயிற்சிதான். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டான்.

ஒரு நாள் சிறுவன் குருவைக் கேட்டே விட்டான். இந்த ஒரு குத்து போதும் உனக்கு என்று சொல்லிவிட்டார். நாட்கள் கடந்தன. குரு சிறுவனைப் போட்டிக்கு அனுப்பினார். ஒரு கையுடன் வந்த சிறுவனைப் பார்த்து பலரும் அற்பமாய் எண்ணினர். ஆனால் அவர்கள் நினைத்ததுதான் தவறு. வெற்றி சிறுவனுக்கே. தன்னை விட பலசாலிகளை எல்லாம் ஆக்ரோஷமாய் எதிர் கொண்டு வீழ்த்தி விட்டான். சிறுவனுக்கும், அங்கிருந்த எல்லோருக்கும் ஆச்சர்யம்.

எப்படி குருவே என்னால் ஒரு கையை வைத்துக் கொண்டு, ஒரே ஒரு குத்துப் பயிற்சியை மட்டும் கற்று வெற்றி பெற முடிந்தது? என்று கேட்டான்.

குரு சொன்னார், இரண்டே காரணங்கள் தான். ஒன்று, நீ பயிற்சி செய்தது ஜூடோவிலேயே மிகவும் கடினமான குத்து. இரண்டு, இந்தக் குத்தை தடுக்க வேண்டும் என்றால் குத்துபவனின் இடது கையை மடக்க வேண்டும். உன்னிடம் அது இல்லை. குருவுக்கு ஆத்மார்த்தமாக நன்றி சொன்னான் சிறுவன்.

நீதி :
நம்மிடம் உள்ள குறையை நிறையாக்குவது மிகப் பெரிய திறமைசாலிக்கான அடையாளம் ஆகும்.

வியாழன்
அறிவியல் & கணினி

அறிவியல் அதிசயங்கள்:

  1. எறும்பு குழுவாக மிக கட்டுப்பாடுடன் வாழும் ஒரு உயிரி.

2. இது புவியின் தென் முனையில் மட்டும் காணப்படுவதில்லை.

3. இவைகள் தங்கள் உடல் எடையை காட்டிலும் 50 மடங்கு எடையை தூக்க வல்லது.

இன்றைய செய்திகள்

27.02.20

★அடையாறு ஆற்றில் கழிவுநீரை கலந்து மாசுபடுத்துபவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, இழப்பீடு வசூலிக்குமாறு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு உத்தரவிட்டுள்ளது.

★இந்தி மொழி தெரியாத மாணவர், ஆள்மாறாட்டம் செய்து, இந்தியில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மாணவரையும், அவருக்கு உதவிய அவரது தந்தையையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

★டெல்லியில் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸார் தவறிவிட்டனர். அவர்கள் கடமையைச் செய்வதற்கு மத்திய அரசு ஏன் அனுமதிக்கயளிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

★தில்லி நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

★தில்லியில் கடந்த 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்  போட்டியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு கிரேக்கோ-ரோமன் பிரிவில்  இந்திய வீரா் சுனில் குமாா் தங்கம் வென்றுள்ளார்.

★சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 புள்ளிகளில் முதலிடத்தை இழந்து இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

Today's Headlines

🌸The Southern Zone of National Green Tribunal ordered to put case on those who flow in the sewage water into Adyar and also asked for the compensation from the same party

 🌸Investigation revealed that a student who is not fluent in Hindi impersonated and passed the NEET exam in Hindi and studied at the Madras Medical College.  Subsequently, the student and his father, who assisted him, have been arrested by the CBCID police.

 🌸 "In Delhi the police did not do their duty and also why the Central Government did not allow the police to perform their duties?" the Supreme Court asked in annoyance.

 🌸The United Nation organisation said that they are closely watching the situation in Delhi. 

 🌸 Sunil Kumar wins gold in the Greco-Roman division after 27 years in the the wrestling championship tournament which was held in Delhi from 18 to 23

 🌸India's  Virat Kohli has lost the first place by  five points in the ICC Test rankings which is released today by the International Cricket Council (ICC).

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/3c4FB7j

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு இம்மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல்! ஏன்?

அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்களுக்கு இம் மாதம்முதல் கட்டாயம்ஐஎப்எச்ஆர்எம்எஸ்

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசுப்பள்ளி ஆசிரியர்களின் 01-01-2020 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/அரசுப்பள்ளி ஆசிரியர்களின் 01-01-2020 நிலவரப்படி பதவி உயர்வுக்குத் தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் மற்றும் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.




MICE TEST - 26.02.20

*75*75*75*75*75*75*75*

மைத்துளி வணக்கம்.

**MICE TEST:75**

1. **நிலம் பூத்து மலர்ந்த நாள்** என்ற மலையாள நாவலை அதே பெயரில் தமிழில் மொழி பெயர்த்ததற்காக,
தமிழில்  சிறந்த மொழி பெயர்புக்கான  சாகித்ய அகடமி விருதைப் பெறுபவர் யார்?

 a) சோ.தருமன்
b) கே.வி.ஜெயஸ்ரீ
c) எஸ்.இராமகிருஷ்ணன்
d) சு.வெங்கடேசன்

2.தமிழகத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வெற்றி பெற எத்தனை MLA க்களின் ஆதரவு வேண்டும்?

a) 32
b) 33
c) 34
d)36

3.டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஸிப் போட்டியில் "கிரேக்கோ-ரோமன் பிரிவில்(கால்களைப் பயன் படுத்தி எதிராளியை மடக்கித் தள்ளி வீழ்த்தக் கூடாது என்ற விதி உள்ள பிரிவு) தங்கம் வென்றவர் யார்?

a) பப்பு யாதவ்
b) அஸ்வினி குமார்
c) சுனில் குமார்
d)ஆஸாத் சாலிதினோ

4.உலக காற்று தர ஆய்வு-2019 ன் கூற்றுப்படி பின் வரும் தகவல்களில் எது தவறு?

a) உலகின் காற்று மாசுள்ள நகரத்தில் முதலிடம்:காசியாபாத்(உ.பி,இந்தியா)

b)உலகில் காற்று மாசுள்ள நாடுகளில் முதலிடம்: பங்களாதேஷ்

c) உலகில் காற்று மாசுள்ள தலைநகரங்களில் முதலிடம்: டெல்லி

d) உலகில் காற்று மாசுள்ள நாடுகளில் முதலிடம்:இந்தியா

5. பின்வருவனவற்றுள் எது தவறு?

a)  கொரோனா காய்ச்சல் காரணமாக தென் கொரியாவில் நடைபெற இருந்த சர்வதேச டேபிள் டென்னிஸ் ஒத்திவைக்கப்பட்டது.

b) இனி,ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளிலும் DRS(Decision Review System) முறை அமுல்படுத்தப்படும்

c) GSLV-  F 10  என்ற ராக்கெட் G SAT -1 என்ற செயற்கைக்கோளை மார்ச்5 ல் விண்ணில் ஏவுகிறது

d) ரஷ்யாவில் நடைபெற்று வரும் சதுரங்கப் போட்டியில் இந்தியாவின் வைபவ் சூரி வெற்றி.

6. சத்ய நாதெள்ளா (Satya Nadellaa),எந்த நிறுவனத்தின் CEO?

a) AMAZON
b)GOOGLE Alphabet
c) Microsoft
d)Infosys



இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

1. b) P.V. சிந்து
2. c) Yes,we can ( written by Barack Obama)
3. c) பா.சிவந்தி ஆதித்தனார் ( தினத்தந்தி நாளிதழின் நிறுவனர்)
4. d) மலேசியா
5. c) a & b

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. D.முகமது, 8-ஆம் வகுப்பு
2. S.ஆஷா, 8-ஆம் வகுப்பு
3. A.N.ஷிஹாப், 6-ஆம் வகுப்பு
4. H.M.ஹாபிலா, 5-ஆம் வகுப்பு
5. A.தனுஜா பேகம், 7-ஆம் வகுப்பு
6. H. முகம்மது ஹர்ஷத், 6-ஆம் வகுப்பு
7. M.ஆஷ்மிதா, 7-ஆம் வகுப்பு
8. தனுஸ்ரீ, 5-ஆம் வகுப்பு
   மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோவை

9. B.சாரதி, 5- ஆம் வகுப்பு
    ஊ.ஒ.ந.பள்ளி, பெரியவரிகம், திருப்பத்தூர்

10. S. கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
11.R. சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
12. S.பூஜாஸ்ரீ, ,10- ஆம் வகுப்பு

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

அனைவருக்கும் வாழ்த்துகள்..... வரும் சனிக்கிழமை இம்மாதத்திற்குரிய தேர்வு...... தயாராகுங்கள்....... 


from covaiwomenict https://ift.tt/2HVINEn

Tuesday, February 25, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.02.20

திருக்குறள்


அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:390

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.

விளக்கம்:

தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.

பழமொழி

where there is anger, there will be excellent qualities .

 கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

நமக்கு மிகவும் பிடித்த ஒன்றை வேண்டாம் என விலகி இருப்பதே மனப் பக்குவத்தின் வெளிப்பாடு....

பொது அறிவு

1. மரியன்னா தீவுகள் எங்கு அமைந்துள்ளது?

பசிபிக் பெருங்கடலில்

2. உலகின் ஆழமான அகழி எது?

மரியன்னா அகழி

English words & meanings

Bale - a large quantity of something pressed tightly together and tied up. ஒரு பொருளின் பெருங்கட்டு.

Bail - money paid to make some one go free for certain period. கைதிக்கு கொடுக்க படும் பிணைய தொகை.

ஆரோக்ய வாழ்வு

தினமும் ஒரு செவ்வாழை பழத்தை உண்டு வந்தால் ரத்தசோகை ,ரத்த குறைபாடு போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.

Some important  abbreviations for students

POV - Point of view

BTW - By the way

நீதிக்கதை

விடா முயற்சி

குறள் :
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

விளக்கம் :
செயலைத் தொடங்கிக் குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும். ஆகையால், செயலில் முயற்சி இல்லாது இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.

கதை :
ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே.

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி :
எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிபாக பலன் கிடைக்கும்.

புதன்
கணிதம் & கையெழுத்து

ஒரு பாக்கெட்டில் 132 மிட்டாய்கள் இருந்தன.

அதனை ஒரு குழுவில் உள்ள டஜன்  குழந்தைகளுக்கு சமமாக வழங்க ஒரு நபரை நியமித்தார் குழுத்தலைவர்....

கேள்வி:
ஒரு குழந்தைக்கு எத்தனை மிட்டாய்கள்  வழங்கப்படும்???

விடை:
டஜன் என்பது 12
எனவே 132/12 =11
ஒவ்வொரு குழந்தைக்கும் 11 மிட்டாய்கள் என சமமாக வழங்கினார்.

கையெழுத்துப் பயிற்சி - 29





இன்றைய செய்திகள்

26.02.20

◆ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் மறைமுகத் தேர்தலின்போது நிறுத்தப்பட்ட 105 இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 4-ல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

◆தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகடாமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஶ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனோஜ் குரூர் எழுதிய மலையாள நாவலை நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற தலைப்பில் மொழிபெயர்த்ததற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.

 ◆ இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ள அமெரிக்க அதிபரின் மனைவி மெலானியா ட்ரம்ப், டெல்லி அரசுப் பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மகிழ்ச்சியான பாடத்திட்டம் குறித்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

◆இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில் கடுமையான மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

◆குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மோட்டேரா ஸ்டேடியம்
உலகிலேயே மிகப்பெரிய ஸ்டேடியம் என்ற புகழை அடைந்துள்ளது. இந்த ஸ்டேடியம் 4 ஆண்டுகளில் அதிநவீனமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

◆பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற கேன்ஸ் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச் சுற்றில் உள்ளூா் வீரா் ஹருடியுனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றாா் இந்தியாவின் 13 வயது கிராண்ட்ஸ் மாஸ்டா் டி.குகேஷ்.

Today's Headlines

🌸🌸Tamilnadu Election Commission said that the stopped indirect election for 105 seats will be held on March 4th.

 🌸Sakitya Academy Award for Best Translation in Tamil has been announced to the writer K. V .Jayasri . The award is given for the  translation of the Malayalam novel by Manoj Kurur titled " Nilam Poothu malarntha  naal"

  🌸Melania Trump, wife of US President who is on a visit to India, visited Delhi Government School.  She discussed with the school students about the happy curriculum.

 🌸Flooding has caused heavy rainfall in the Indonesian capital of Jakarta.  Officials said thousands of people were affected by the floods.

 🌸Modera Stadium, built in Ahmedabad, Gujarat is the largest in the world.  The stadium has been built with ultra modern technology with in 4 years.

🌸 India's 13-year-old Grand Master Mukesh Dukesh won the championship in the final of the Cannes Open chess tournament in Cannes, France.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2HUN2Ac

MICE TEST - 25.02.20

,மைத்துளி வணக்கம்.

MICE TEST:74

1. ESPN வழங்கும் "ஆண்டின் சிறந்த  வீராங்கனைக்கான விருதை" தொடர்ந்து 3ஆண்டுகளாக பெற்றுவருபவர் யார்?

a) மேரி கோம்
b) பி.வி.சிந்து
c) சாய்னா நெஹ்வால்
d)சானியா மிர்ஸா

2. பின்வரும் நூல்களில் ஒன்று மட்டும் டோனால்ட் டிரம்ப் அவர்களால் எழுதப்பட்டது அல்ல.அது எது?

a)Think big
b) Crippled America
c) Yes,we can
d)How to get rich

3.வீரபாண்டியன் பட்டணத்தில் யாருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது?

 a) கட்டபொம்மன்
b)தில்லையாடி வள்ளியம்மை
c பா.சிவந்தி ஆதித்தனார்
d)காமராசர்

4.உலகிலேயே 94 வயதில் பிரதமராக இருந்த சாதனையாளரான மகாதீர் முகமது தீடீரென அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.அவர் எந்த நாட்டின் பிரதமராக இருந்தார்,?

a)ஜப்பான்
b)சிங்கப்பூர்
c) நார்வே
d)மலேசியா

5.2022 ல் காமன் வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.ஆனால் அதில் 2 போட்டிகள் மட்டும்  இந்தியாவின் சண்டிகரில் நடத்தப்படும் .அவை எவை?

a)துப்பாக்கி சுடுதல்
b) வில்வித்தை
c) a) & b)
d)மல்யுத்தம்,கபடி

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

Answers for MICE TEST:73

1.  c) Amitabh bachan

2. b) ஜக்கி வாசுதேவ்


3.b) ஜூலை 1 முதல் ஜூன் 30 ( May change to April to March from 2020-21)


4.b) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நத்தையின் பெயர்


5. c) 7ஆவது ( 1.Dwight D Eisenhower, 2.Richard Nixon, 3.Jimmy Carter 4.Bill Clinton 5.George W.Bush 6. Barack Obama )


6 a) கட்டக்(ஒடிஸா)

7.c)...(ஹங்கேரி ஓபன் **டேபிள்* டென்னிஸ் என்பதே சரி)

8. a) cut ,copy, paste ( Larry Tesler)

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுபபு
     ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சி

வாழ்த்துகள் சந்தியா,....
.. 


from covaiwomenict https://ift.tt/2PnpSGG

Monday, February 24, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.02.20

திருக்குறள்


அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:389

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.

விளக்கம்:

காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.

பழமொழி

we can take a horse to water but can't
it make it drink.

  தானாக கனியாத பழத்தைத் தடிகொண்டு அடித்தால்  கனியுமா?

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

அதிகம் பேசுவதையும், அமைதி காப்பதையும் விட,  செயற்படுவதே வாழ்வின் முன்னேற்றத்துக்கு வழி.

பொது அறிவு


1.தங்க நூலிழைப் புரட்சி என்பது எதைக் குறிக்கிறது?

சணல் உற்பத்தி அதிகரிப்பை குறிக்கிறது.

2.வெள்ளி இழைப் புரட்சி என்பது எதைக் குறிக்கிறது?

 பருத்தி உற்பத்தி அதிகரிப்பை குறிக்கிறது.

English words & meanings

Advice - an opinion that you give somebody about what they should do. A noun. ஒருவருக்கு வழங்கப் படும் அறிவுரை.

 Advise - to tell somebody what you think they should do. A verb. அறிவுரை வழங்கு.

 Amorphous - having no definite shape or structure. An adjective ஒழுங்கான வடிவமற்ற.

ஆரோக்ய வாழ்வு

கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும் .கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

Some important  abbreviations for students

NP - No Problem

ISO - In search of

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

ராஜவர்மனின் நேர்மை

குறள் :
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

விளக்கம் :
தன் உடலிலிருந்து ஒரு ரோமம் உதிர்ந்தாலும் உயிர் துறக்கும் கவரிமானைப் போல, தன் பெயருக்கு இழுக்கு நேர்ந்தால் சாண்றோர்கள் தன்னுயிரையே மாய்த்துக் கொள்வார்கள்.

கதை :
மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன். தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றான்.

ஆனால் அந்த வேடனோ, அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை என கதறினான். கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

வேடனே, நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது பட்டிருக்கலாம் அல்லவா? எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான்.

இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது என்றார்.

இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான்.

நீதி :
எப்பொழுதும் நேர்மையாக செயல்பட வேண்டும்.

செவ்வாய்
English&Art



இன்றைய செய்திகள்

25.02.20

◆ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மார்ச் 9-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

◆சந்திரயான்-2 தோல்வியால் சூரியனை ஆராயும் 'ஆதித்யா' செயற்கைக்கோளின் பணிகள் தாமதமாகியுள்ளதாக, இஸ்ரோ முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

◆அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். பிரதமர் மோடி நேரில் வரவேற்றார். அகமதாபாத் நகரில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

◆ஹங்கேரியில் நடைபெற்று வரும் ஐடிடிஎப் உலக டூர் ஹங்கேரியன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அசந்தா சரத் கமல்- ஞானசேகரன் சத்யன்ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது.

◆டி20 உலகக் கோப்பை: 4 சிக்ஸர்கள் அடித்து அசத்திய 16 வயது ,  இந்திய வீராங்கனை  ஷஃபாலி.

◆மகளிர் T20 உலகக்கோப்பை போட்டியில் பங்ளாதேஷை வீழ்த்தி இந்தியா இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது.

Today's Headlines

🌸 The Chennai high court warned the District Collectors to give detailed report on the precautionary measures taken to avoid the death of drowning in pond and lakes.

🌸Due to the failure of Chandrayaan-2 the work of "Athithya" which is assigned to do the research on Sun is delayed said the ISRO's farmer Director Mayilsamy Annadurai.

🌸 American President Donald Trump came to India for two days visit. Our PM Modi welcomed him in person. In the city of Ahmedabad a great welcome is given.

🌸In the ITTF World Tour Hungaria Open Table Tennis held at Hungary for Men's doubles India's Asantha Sarath Kamal - Gnanasekaran team won the silver medal.

🌸In T-20 World Cricket Indian Player Shaffali won the match gloriously by four sixers.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2veezcR

MICE TEST - 24.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:73

1.  சமூக ஆர்வலர் திரு."பாலம்"கல்யாணசுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிப்பவர் யார்?

 a) ரஜினிகாந்த்
b) மம்முட்டி
c) அமிதாப் பச்சன்
d) மோகன்லால்

2. DEATH;An inside story என்ற நூலை எழுதியவர் யார்?

 a) ரவி சங்கர்ஜி
b) ஜக்கி வாசுதேவ்
c) அமிர்தானந்த மயி
d)வேதாத்திரி மகரிஷி

3.RBI ன் நிதி ஆண்டுக் காலம் எது?

a) ஏப்ரல் 1  முதல்
 மார்ச் 31
b) ஜூலை 1 முதல் ஜூன் 30
c)பிப்ரவரி.1 முதல் மார்ச் 31
d)ஜனவரி 1 முதல் டிசம்பர் 31

4.Craspedotropsis gretathunbergae என்பது .......

 a)ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் போராளி
b) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நத்தையின் பெயர்
c) புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஸ்வீடன் நாட்டு மலரின் பெயர்
d)  புவி வெப்பமாதலின் அறிவியல் பெயர்

5. டோனால்டு ட்ரம்ப்,இந்தியாவிற்கு வருகை தரும் எத்தனையாவது அமெரிக்க அதிபர்?

a) 5 ஆவது
b) 6ஆவது
c) 7ஆவது
d) 8ஆவது

6.முதலாவது  KHELO INDIA University Games- 2020 போட்டிகள் நடைபெறும் இடம் எது?.

 a) கட்டக்(ஒடிஸா)
b) காந்தி நகர்(குஜராத்)
c) கவுகாத்தி(அஸ்ஸாம்)
d) புது டெல்லி

7.பின்வருவனவற்றுள் எது தவறான தகவல்?

a) உலக ஹெவி வெயிட் குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை டைசன் பியூரி வென்றுள்ளார்

b) தனது 1000ஆவது கால்பந்து ஆட்டத்தில் பங்கேற்று சாதனை புரிந்துள்கார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

c) இந்தியாவின் சரத் கமல் -சத்யன் ஞான சேகரன் ஜோடி ஹங்கேரி ஓபன் டென்னிஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்கள்

 d)ஆசிய மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் ரவி தாஹியா

8. கணினியில் கீழ்காணும் எந்த அம்சங்களைக் கண்டுபிடித்த லேரி டெய்லர் தனது 74 ஆவது வயதில் காலமானார்?

a) cut ,copy, paste
b) Auto spelling checking
c) Sleep mode
d) Auto shutdown


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



from covaiwomenict https://ift.tt/2STww9K

Sunday, February 23, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.02.20

திருக்குறள்


அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

விளக்கம்:

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.

பழமொழி

Love thy neighbours  as thyself

 உன்னைப்போல் பிறரையும் நேசி.

இரண்டொழுக்க பண்புகள்

1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.

2. இயற்கையை இரசிப்பது மட்டும் அல்ல அவற்றில் இருந்து பாடமும் கற்றுக் கொள்வேன்.

பொன்மொழி

மனிதன் எப்பொழுதும் தான் வந்த பாதையை திரும்பிப் பார்ப்பது இல்லை .ஆனால் அவனது கீழ்தர செயல்கள் தொடங்கிய இடத்திற்கே இட்டுச்செல்கிறது........

                  - சாரதா தேவி்

பொது அறிவு

1.மத்திய கலால் நாள் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

 பிப்ரவரி 24

2.கலால் வரி என்றால் என்ன?

நம் நாட்டிற்குள் தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி மீது விதிக்கப்படும் வரி.

English words & meanings

Zoopathology – study of animal diseases. விலங்குகள் நோய் குறித்த படிப்பு.

 Zebra-Wood - lined wooden pieces, பட்டைக் கோடுகள்  உடைய மரக் கட்டைகள்

ஆரோக்ய வாழ்வு

செவ்வாழையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன .மேலும் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ, புரதம், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற பலவித சத்துக்களும் நிறைந்துள்ளன.

Some important  abbreviations for students

OMW -- On my way

OMC --  On my cash

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

முயற்சியே வெற்றியைத் தேடி தரும்

குறள் :
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

விளக்கம் :
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.

கதை :
ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார்.

கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது.

தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது. தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது.

மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்துவிட்டது.

தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம்.

நீதி :
தம்மை நோக்கி அளவுக் கடந்த பிரச்சனைகள் வந்தாலும் அதனை கடந்து முன்வர வேண்டும்.

திங்கள்
தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

யாகம்  -  வேள்வி
யுத்தம் - போர்   
ரகசியம்  -  மறைபொருள்,  குட்டு         
ருசி   -   சுவை     
லாபம்- மிகை ஊதியம்

இன்றைய செய்திகள்

22.02.20

◆நாசா சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லும் நாமக்கல்லை சேர்ந்த மாணவி அபிநயாவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

◆விக்கிப்பீடியா அமைப்பினால் நடத்தப்பட்ட வேங்கை கட்டுரைப் போட்டியில் இந்திய அளவில் 331 பயனர்கள் பங்கேற்று 16 மொழிகளில் 13,490 கட்டுரைகள் எழுதினர். அதில் தமிழ் மொழி 62 பயனர்கள் எழுதிய 2959 கட்டுரைகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

◆நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களையும் இணையவழியில் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்று  தில்லியில் நடைபெற்ற சா்வதேச நீதித்துறை மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

◆ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமாா் தாஹியா தங்கம் வென்றாா். மேலும் பஜ்ரங் புனியா, கௌரவ் பாலியான், சத்யவிரத் கடியன் ஆகியோா் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

◆ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மகளிருக்கான உள்ளரங்க தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டிரிப்பிள் ஜம்ப்பில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் 15.43 மீட்டர் நீளம் தாண்டி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Today's Headlines

🌸For the student Abinaya from Namakkal who is going to the NASA International research centre the government will give 2,00,000 rupees says CM Palanisamy.

🌸 In The Tiger Project Essay Competition from India 331 Participants wrote in 16 languages and wrote 13,490 essays.  In this 62 Tamil language participants took part and wrote 2959 essays and bagged first prize.

🌸 PM  Narendra Modi said in international Judiciary Meet that all courts throughout  India will be united through online and the central government is taking the steps for this.

🌸 In Asian Wrestling Championship India's Ravikumar Thahiya won gold medal. And also Pajrang Puniya, Gourav Paliyaan, Sathyavirath Kadiyan won silver medals.

🌸 In Spain's Madrid City there is inner stadium athletic competition for ladies is going on. In this in triple jump Yulimer Rojas from Venisula jumped 15.43 mts and form a new world record.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2uZPGlm

Friday, February 21, 2020

பள்ளி காலக வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.02.20

திருக்குறள்


அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:387

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.

விளக்கம்:

வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.

பழமொழி

Happiness depends upon ourselves.

மகிழ்ச்சி நம்மைச் சார்ந்தே இருக்கிறது.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.

பொன்மொழி

குறிக்கோள் இல்லாத முயற்சி என்பது ஓட்டைச் சட்டியில் போடும் உருப்படி போன்றது...

பொது அறிவு

1.பூச்சி இனங்களில் மிகவும் அறிவாற்றல் உடையது எது?

எறும்பு.

2.உலகிலேயே அதிகமாக சிலை வடிக்கப்பட்ட மனிதர் யார்?

லெனின்.

English words & meanings

Xylology – study of wood. மரப் பலகைகள் குறித்த படிப்பு.

 Xylophagous - worms which lives by eating wood. மரம் தின்று வாழ்கின்ற

ஆரோக்ய வாழ்வு

துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு நோய் நம்மை அண்டாது.

Some important  abbreviations for students

NC - No comment

NM - Not much

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

பொன் முட்டையிடும் வாத்து

குறள் :
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

விளக்கம் :
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

கதை :
கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது. தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்? இது இப்படியே நீடித்தால் வறுமை தாங்காது, நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும் அதை விற்று அன்றாடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார். வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனத் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒரு முட்டை இருந்தது. அதன் வயிற்றில் மற்ற வாத்துகள்போல் வெறும் குடலே இருந்ததை கண்டு ஏங்கினர். தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

நீதி :
அதிக ஆசை ஆபத்தானது

இன்றைய செய்திகள்

21.02.20

★தேர்வுகளில் மாணவ, மாணவியர் காப்பி அடிப்பதைக் கண்காணிக்கும் பறக்கும் படையில் உள்ள ஆண் ஆசிரியர்கள் மாணவிகளைப் பரிசோதிக்க தேர்வுத்துறை தடை விதித்துள்ளது.

★திருநெல்வேலி மாவட்டத்தில் நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  தெரிவித்தார்.

★குஜராத் வருகை தரும் அமெரிக்க அதிபரை ஒரு லட்சம் பேர் திரண்டு வரவேற்பு அளிப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

★அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

★ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ள டி20 மகளிர் உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளது இந்திய அணி.

★ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 3 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

Today's Headlines

🌸The Selection Department has banned male teachers in the flying squad to track the malpractice in the examination by the girl student

 🌸In the Farmer's grievance meeting held at Tirunelveli the District Revenue Officer told that a mobile paddy purchasing centre will be opened soon, the arrangements are under progress for the same.

 🌸Officials said the US President will be welcomed by one lakh people while he visit India

🌸 Sri Srinivasan who is an Indian Origin is appointed as a Chief Justice in the US Court of Appeal.

 🌸The Indian team had beaten Australia in the first match of the T20 Women's World Cup cricket in Australia.

 🌸India bags 3 gold and 1 silver medal in the Asian Wrestling Championships.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2wErm97

MICE TEST Holiday


வணக்கம் நண்பர்களே....இன்று முதல் மூன்று நாட்களுக்கு முகாம் பணிகள் இருப்பதால்.....உங்கள் MICE TEST நிகழ்விற்கு...3 நாட்கள் விடுமுறை.எதிர்வரும் திங்கள் கிழமை சந்திப்போம்.நன்றி

நேற்றைய விடைகள்

1. d)அனைத்தும்

2.c) தவில்

3. c) சிங்கங்களின் கணக்கெடுப்பு 8ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் என்பது தவறு. ( lion census is taken once in 5 years )

4.b)ஆஸ்திரேலியா

5.d) சீமைக் கருவேலா மரம்

6. b) உ.வே.சா. ( உ. வே. சாமிநாதையர் )

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. B.சாரதி, 5-ஆம் வகுப்பு
2.S.பிரியதர்ஷினி, 5-ஆம் வகுப்பு
3. S.பூர்ணிமா, 5-ஆம் வகுப்பு
  ஊ.ஒ.ந.பள்ளி, பெரியவரிகம்,
   திருப்பத்தூர்

4. A.M.ஷிஹாத்,6-ஆம் வகுப்பு
5. A. தனுஜா பேகம், 7-ஆம் வகுப்பு
     மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்

6. M.மதன் வேணு, 7-ஆம் வகுப்பு
7. M.முரளி ஆனந்த், 5-ஆம் வகுப்பு
8. R.சந்தியா, 7-ஆம் வகுப்பு
    ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், போத்தனூர், கோவை

9. S. பானு, 7-ஆம் வகுப்பு
10. P.பாரதி, 7-ஆம் வகுப்பு
11. S.மேனகா, 7-ஆம் வகுப்பு
ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், பேரூர், கோவை

12. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
13. A.கனிஷ்கா, 8-ஆம். வகுப்பு
14. S.S.நந்தினி, 8- ஆம் வகுப்பு
15. R.சந்தியா ஜோசப்பின், 8- ஆம் வகுப்பு
16. S. பூஜாஸ்ரீ, 10- ஆம் வகுப்பு
ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி


அனைவருக்கும் வாழ்த்துகள்...... தினமும் நாளிதழ் படியுங்கள்...... 


from covaiwomenict https://ift.tt/2v28nEI

Thursday, February 20, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.02.20

திருக்குறள்


அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:386

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.

விளக்கம்:

காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.

பழமொழி

PREVENTION IS BETTER THEN CURE

     வெள்ளம் வருமுன்னே அணை போட வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.

பொன்மொழி

ஒரு செயலை செவ்வனே செய்வேன் என உறுதி கொண்டவரது உழைப்பு அவரை மிக உயரத்தில் வைத்து அழகு பார்க்கும்......

     அப்துல் கலாம்

பொது அறிவு

1. பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது?

சுவிட்சர்லாந்து

2. வாட்சுகளுக்கும் சாக்லேட்களுக்கும் பெயர் போன நாடு எது?

சுவிட்சர்லாந்து

English words & meanings

Vulcanology – study of volcanoes. எரிமலைகள் குறித்த படிப்பு. எரிமலையியல்.

Varicolored - consisting of different colours. வண்ணக் கதம்பம். வண்ணக் கலவை

ஆரோக்ய வாழ்வு

பேரீச்சம் பழத்தில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்து உடலில் இரத்த அணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகை வரும் அபாயத்தை குறைத்து, உடலில் ரத்தத்தின் அளவு சீராக இருக்க பயன்படுகிறது.

Some important  abbreviations for students

lat. - latitude

long.- longitude

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

பொறாமையால் ஏற்பட்ட இழப்பு

குறள் :
அழுக்காறென ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.

விளக்கம் :
மற்றவர்கள் மீது பொறாமை கொள்ளும் ஒருவன், தன் செல்வத்தையெல்லாம் இழந்து தீய வழிகளில் செயல்பட்டு சீர்குலைவான்.

கதை :
கந்தசாமி திருநின்றவூரில் பல ஆண்டுகளாக ஒரு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். கடைத்தெருவில் அவருடைய ஒரு ஜவுளிக்கடை மட்டுமே இருந்ததால், நகரத்து மக்கள் அவரது கடையிலிருந்தே துணிமணிகள் வாங்கி வந்தனர். கந்தசாமி வியாபாரத்தை சிறப்பாக செய்து ஏராளமாக செல்வம் சேர்த்தார்.

ஒருநாள் அதே கடைத்தெருவில் அவருக்குப் போட்டியாக மாணிக்கம் என்ற வெளியூர் இளைஞன் ஜவுளிக்கடையைத் திறந்தான். இளைஞர்களையும், பெண்களையும் கவரும் படி புதிய வகை துணிகளை அவன் விற்பனை செய்ததால், மக்கள் அங்கு குவிந்தனர். கந்தசாமியின் வியாபாரம் மந்தமாகியது.

மாணிக்கத்தின் மீது பொறாமை கொண்ட கந்தசாமி, அவன் வியாபாரத்தைத் தடுப்பதற்காக, விலை உயர்ந்த நவீன துணிமணிகளை இறக்குமதி செய்தார். கடையையும் பெரிதாக்கி, கண்கவரும் வகையில் அலங்காரம் செய்தார். சினிமா கலைஞர்களை வரவழைத்து தன் கடைக்கு விளம்பரம் செய்தார். இதனால் அவரது சொத்துக்கள் பெருமளவில் கரைந்தன. ஆனாலும் குறைந்த லாபத்தில் அதிக விற்பனை என்ற கொள்கையைக் கொண்டிருந்த மாணிக்கத்தின் கடையில் தான் அதிகமாக வியாபாரம் நடந்தது.

இதைக் கண்டு கொதித்த கந்தசாமி வேறு வழியின்றி மிகக் குறைந்த லாபத்துக்கு துணிகளை விற்க முன்வந்தார். பல லட்ச ரூபாய் செலவுகளோடு விற்பனையை கணக்கிட்டுப் பார்த்தால், கடைசியில் நஷ்டம் தான் மிஞ்சியது. உடனே மாணிக்கத்தின் மீது பொறாமை கண்மூடித்தனமாக அதிகரிக்க, அவர் தன் சிந்திக்கும் திறனை இழந்தார். மாணிக்கத்தின் கடைக்கு தீ வைக்க, ஒரு கூலிப் படையை ஏவினார்.

ஒருநாள் இரவு மாணிக்கத்தின் கடை தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த துணிமணிகள், பணம் என அனைத்தும் சாம்பலான பின்தான் கந்தசாமியின் மனது நிம்மதி அடைந்தது. ஆனால் மாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், தீ வைத்த கூலிப் படையினரை கைது செய்து விசாரித்தனர். அவர்கள் கந்தசாமியைக் காட்டிக் கொடுத்ததால், அவர் சிறையிலடைக்கப்பட்டார். கந்தசாமியின் கடை சீல் வைக்கப்பட்டது.

மாணிக்கம் தன் கடையை காப்பீடு செய்திருந்ததால், இழப்புத் தொகை கிடைத்தது, மீண்டும் வியாபாரத்தைத் தொடர்ந்தான். பொறாமையால் அறிவுக்கண் மூடப்பட்டு தீய வழியில் சென்று வெற்றி பெற நினைத்தால், கடைசியில் பெரும் துன்பத்தையே சந்திக்க நேரிடும்.

நீதி :
பொறாமை தன்னிடம் உள்ள சொத்தையும் சேர்த்து அழித்துவிடும்.

வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு

*சாத்பூராமலைத்தொடர் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும்.

*இது கிழக்குக் குஜராத்தில் அரபிக் கடலுக்கு அருகில் தொடங்கி
கிழக்குநோக்கி, மகாராஷ்டிரா,
 மத்தியப்பிரதேசம் ஆகிய
மாநிலங்களூடாகச்சென்று
 சட்டிஸ்கரில் முடிவடைகிறது.

*நூறு மலைகள் என்ற பொருள் கொண்ட சமசுகிருத சொல்லான சாத்பூரா என்ற சொல்லில் இருந்து சாத்பூரா மலைத்தொடர் என்ற பெயர் வருவிக்கப்பட்டுள்ளது.

*இக்காடுகள்  அழிவின் விளிம்பில் உள்ள விலங்கினங்களுக்கு உறைவிடமாக உள்ளது.

* சாத்பூரா மலைத்தொடரில் எண்ணற்ற புலிகள் காப்பகங்களும் இடம்பெற்றுள்ளன.

பாரம்பரிய விளையாட்டு - 8

இன்றைய செய்திகள்

21.02.20

◆தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

◆காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பான சட்ட மசோதா இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

◆சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி உட்பட 11 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

◆புதுச்சேரியில் 3 நாள் சர்வதேச ஆவண, குறும்படத் திருவிழா மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்குகிறது. ஆஸ்கர் விருது வென்ற 'அமெரிக்கன் ஃபேக்டரி' ஆவணப் படம் தொடக்க நாளில் திரையிடப்படுகிறது.


புது தில்லியில் நடைபெற்று வரும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக புதன்கிழமை நடைபெற்ற கிரேக்கோ ரோமன் 67 கிலோ எடைப்பிரிவில் சிரியாவின் அப்துல் கரீம் முகமதை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார் இந்திய வீரா் அஷூ.

◆உலகின் மிகப்பெரிய மொட்டேரா கிரிக்கெட் மைதானத்தின் படத்தை வெளியிட்டது பிசிசிஐ. இது இந்தியாவில் உள்ள ஆமதாபாதில் உள்ளது என்பது சிறப்புச் செய்தியாகும்.

Today's Headlines

🌸The District Court and District Revenue Officers have been instructed to remove the encroachments on water bodies and state-owned lands throughout Tamil Nadu.

 🌸Legislative Bill had been passed to Transform the Cauvery Delta into a Protected Area of ​​Agriculture in Tamilnadu state legislative assembly

 🌸In the list of 100 best universities 11 Indian Institutes are there including the Chennai IIT

 🌸Puducherry 3 day International Documentary Short Film Festival starts tomorrow at Central University  .The Oscar-winning documentary film "American Factory" premieres on opening day.

 🌸Indian Warrior Ashu won the bronze medal after beating Syria's Abdul Karim Mohammed in the Greco-Roman 67kg category on Wednesday as part of the Asian Wrestling Championships in New Delhi.

 🌸BCCI unveils picture of world's largest Motera cricket ground . It's special  that it is located in Ahmedabad, India.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/38LOKiP

3rd std... Vaazhitam...

3rd std... Vaazhitam...
Animals living place....


View on YouTube

MICE TEST - 20.02.20

மைத்துளி வணக்கம்.

MICE TEST:72

1. தற்பொழுது,தமிழக அரசு  அகழ்வாராய்ச்சி யை கீழடியில் துவக்கியுள்ளது.  கீழடி யோடு சேர்த்து வேறு எந்த ஊரில் அகழ்வாராய்ச்சி நடைபெறுகிறது?

a)கொந்தகை
b)அகரம்
c)மணலூர்
d)மேலே உள்ள அனைத்தும்

2.மறைந்த  டி.எ.கலியமூர்த்தி என்பவர் எந்த இசைக் கலைஞர்?

 a) நாதஸ்வரம்
b) மிருதங்கம்
c) தவில்
d) புல்லாங்குழல்

3. பின்வரும் கூற்றுக்களில் தவறானது எது?

a) உலகிலேயே ஆசிய சிங்கங்களின் ஒரே வாழிடம்:கிர் தேசிய பூங்கா

b) கிர் தேசிய பூங்கா உள்ள மாநிலம்:குஹராத்

c) சிங்கங்களின் கணக்கெடுப்பு 8ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்

d)ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.

4. 7ஆவது ICC மகளிர் T.20 உலக்க் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ள நாடு் எது?

 a) இந்தியா
b)ஆஸ்திரேலியா
c) நியூஸிலாந்து
d)வங்க தேசம்

5.Prosopis juliflora என்பது எந்த தாவரத்தின்அறிவியல் பெயராகும்?

a) வெங்காயத் தாமரை
b) பார்த்தீனியம்
c) வெங்காயம்
d) சீமைக் கருவேலா மரம்

6. திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலூக்காவிலுள்ள உத்தமதானபுரத்தில் பிறந்தவர் யார்.?

 a) வ.ஊ.சி
b) உ.வே.சா.
c) ம.பொ.சி
d)ரா.கி.ரங்கராஜன்


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________


நேற்றைய விடைகள்

1. b) மனோகர் பாரிக்கர் ( Former defence Minister and Goa Chief minister )

2. a) Dennis

3. அனைத்தும்

4.b) ஐந்தாவது

5.a) B.Sai Praneeth

6. c) சச்சின்

7. c) both a & b ( Lewis Hamilton and Lionel Messi )

8. c) Simone Biles ( American artistic gymnast)

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.kanishka, 8 - ஆம் வகுப்பு
2. S.pooja sree, 10 - ஆம் வகுப்பு
3. S.Nandhini, 8 - ஆம் வகுப்பு
4. R. Santhiya josphine,8 - ஆம் வகுப்பு
5.M.januffiyaa ,8 - ஆம் வகுப்பு
Holy cross girls higher secondary school, Trichy

6. Dm.kevin andoss 5 - ஆம் வகுப்பு Little Flower matric.hr.sec.school Trichy

7. MOHAMMED.D 8 - ஆம் வகுப்பு
8.IMAM shameel.s 8 - ஆம் வகுப்பு
9.ANAS.M 8 - ஆம் வகுப்பு
10.RAHMAN. S 8 - ஆம் வகுப்பு
11.KAREN  KUMAR. V 8 - ஆம் வகுப்பு
12.Vinoth 7 - ஆம் வகுப்பு
13.A.N.SHIHAB 6- ஆம் வகுப்பு
14.H.Mohammed Harshath 6- ஆம் வகுப்பு
15.N.Jannathun Nasrin 8 - ஆம் வகுப்பு
16.M.Akil afran 6- ஆம் வகுப்பு
17.N.Nazir sharef 6- ஆம் வகுப்பு
18.S.Mohammed yunus 6- ஆம் வகுப்பு
19.T.F. mohamed Finoz khan 6- ஆம் வகுப்பு
20.S.Jansha 7 - ஆம் வகுப்பு
21.N.Logapriya 8 - ஆம் வகுப்பு
22.M.H.HAFILA 5 - ஆம் வகுப்பு
23.S.RISHANA 5 - ஆம் வகுப்பு
24.SABIRA BEGUM A 5 - ஆம் வகுப்பு
25.A.RSHIYA 5 - ஆம் வகுப்பு
26.DEEPIKA S. 5 - ஆம் வகுப்பு
27.DANUSHSRI J. 5 - ஆம் வகுப்பு
28.R.MOHAMMED  RAFIK 5 - ஆம் வகுப்பு
29.A.Mohamed abdulla 5 - ஆம் வகுப்பு
30.S.Asha 8 - ஆம் வகுப்பு
31.S.Mohamed Rinaf 5 - ஆம் வகுப்பு
32.A.Thanuja begum 7 - ஆம் வகுப்பு
33.M.Ashmitha 7 - ஆம் வகுப்பு
34.M.H.HAFILA 5 - ஆம் வகுப்பு
     Corporation middle school, Kottai
      Coimbatore

அனைவருக்கும் வாழ்த்துகள்.... 


from covaiwomenict https://ift.tt/2T5QAoq

Wednesday, February 19, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 20.02.20

திருக்குறள்


அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:385

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.

விளக்கம்:

முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.

பழமொழி

Little strokes fell great oaks.

 அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.

பொன்மொழி

நம் கண்முன் காணாத ஒன்றின் மீது ஆர்வம் கொள்ளாமல் பழகிய செயலைச் சிறப்பாக செய்தல் சிறப்பு.....

பொது அறிவு

பிப்ரவரி 20- இன்று உலக சமூக நீதி தினம்

 1. வறுமை ஒழிப்பிற்காக ஐக்கிய நாடுகள் சபையின் விருது பெற்ற முதல் இந்தியர் யார்?

நீதியரசர். எம்.பாத்திமா பீவி.

2. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் முதன் முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

1998

English words & meanings

Urology – study of urine; urinary tract. சிறுநீரக செயல்பாட்டை குறித்து படிக்கும் அறிவியல் துறை.

Uberous - fertile, able to give more milk, செழிப்பான, நன்கு பால் தருகின்ற

ஆரோக்ய வாழ்வு

தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வருகிறவர்களின் மூளையின் செயல்பாடும் மேம்படும் .அதாவது ஞாபகசக்தி ,ஒரு முகப்படுத்தும் தன்மை, கூர்மையான புத்தி, எதையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் போன்றவை அதிகரிக்கும்.

Some important  abbreviations for students

R.N - registered nurse

R.R - rail road

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

பாம்பின் பரிதாப நிலை

குறள் :
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

விளக்கம் :
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

கதை :
ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு. கண்களைத் திறந்து பார்த்தார். உனக்கு என்ன வேண்டும்? சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டது.

முனிவர், நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால், உனக்கு அடுத்த பிறவியில் உயர்ந்த பிறவி கிட்டும் என்று உபதேசித்து ஆசி கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி சென்றது. காட்டில் திரிந்த பாம்பு ஊருக்குள் வந்தது. நாம் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே. நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது.

அதனால் அந்தப் பாம்பு ஊரில் உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடியது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள். அந்த பாம்பு யாரையும் தொந்தரவு செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது. ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். அப்போது பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. பாம்பு இரவானதும் அந்த இடத்தை விட்டு விட்டு காட்டை நோக்கி சென்றது. அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயத்துடன சென்று முனிவர் முன் நின்றது.

அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர், என்னவாயிற்று? ஏன் இப்படி காயப்பட்டு வந்திருக்கிறாய்? என்று அன்போடு வினவினார். சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாட வந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்று கூறிக் கண்ணீர் விட்டது.

உன்னைக் கடிக்காதே என்று தானே சொன்னேன். நீ உன் பிறவி குணத்தைக் காட்டவேண்டியது தானே? பாம்புக்குப் புரியவில்லை. அது என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்று கேட்டது. ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன்.

உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள், சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே, அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக் கூவியவாறு ஓடினர். மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர். பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது. அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமைய வேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு. அதே போல் தனக்கு தீமை ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு.

நீதி :
தன்னிடம் உள்ள வலிமை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.

வியாழன்
அறிவியல் & கணினி

To see the experiment click here

Newton's disc experiment by PUMS, Periyakadambur students

இன்றைய செய்திகள்

20.02.20

◆தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி யில் 170 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட தமிழ் எண்களுடன் கூடிய மைல் கற்கள் கண்டறியப் பட்டுள்ளன.

◆இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றான ஜிப்மரில் எம்பிபிஎஸ் இடங்கள் 200-லிருந்து 249-ஆக உயர்கிறது. ஜிப்மர் நுழைவுத் தேர்வு தற்காலிக அட்டவணையில் இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

◆நள்ளிரவில் நடந்த ராணுவ ஆள் சேர்ப்புக்கான உடல் தகுதி தேர்வு: பகலில் வெயில் கடுமையாக இருப்பதால் நடவடிக்கை.

◆ஏப்ரல் 1-ம் தேதி முதல் உலகின் சுத்தமான பெட்ரோல், டீசல் விற்பனைக்கு இந்தியா மாறுகிறது. அதாவது யூரோ-4 ரக எரிபொருள்களில் இருந்து நேரடியாக யூரோ-6 ரக எரிபொருள்களுக்கு இந்தியா மாறுகிறது.

◆நீலகிரி மாவட்டம், குன்னூர், ஓட்டுப்பட்டறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் கிறிஸ்டோபர் லாரன்ஸ் (32) சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

◆ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் டி-20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணியை இந்திய மகளிா் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Today's Headlines

🌸Milestones with Tamil numbers planted 170 years ago have been found in Chengipatti in Thanjavur district.

 🌸 Number of MBBS seats in Jipmer Pondicherry Medical College is increased from 200 to 249. It is one of the best medical college of India

🌸 Due to severe heat in the day time the selection process of Military Services took place in the midnight

 🌸India is switching to the world's cleanest petrol and diesel market from April 1.  This means India is switching directly from Euro-4 fuels to Euro-6 fuels.

 🌸Christopher Lawrence (32), a youth from Nilgiri district, Coonoor, has been selected for the International Cricket Coaches' Examination.

 🌸The Indian women's team defeated West Indies team by 2 wickets in the T20 World Cup in Brisbane, Australia.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/38I2L1c

MICE TEST - 19.02.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:71

1. மத்திய பாதுகாப்பு  அமைச்சகத்தின் கீழ் செயல்படும் "இந்திய பாதுகாப்பு கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு (IDSA)யாருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது?

a) அருண் ஜெட்லி
b) மனோகர் பாரிக்கர்
c) சுஷ்மா ஸ்வராஜ்
d)வல்லபாய் பட்டேல்


2. சமீபத்தில்  பிரிட்டனைத் தாக்கிய புயலின் பெயர் என்ன?

a) Dennis
b) Habine
c) Kyar
d)Ciara

3."சிந்தனைச் சிற்பி்"என அழைக்கப்படும் திரு.சிங்கார வேலர் பற்றிய தகவல்களில் எது சரி?

a) இவர் தமிழகத்தை சார்ந்த தொழிற்சங்கவாதி
b) வழக்கறிஞர்
c) விடுதலைப் போராட்ட வீரர்
d) மேலே கூறப்பட்ட அனைத்தும்

4.உலக மக்கள் தொகை ஆய்வு மையம் என்ற தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், உலகின் எத்தனையாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது?

(a) மூன்றாவது
b) ஐந்தாவது
c)ஏழாவது
d) இரண்டாவது

5.சர்வதேச பாட்மிண்டன் கூட்டமைப்பு வெளியிட்ட  ஆடவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில்  முதன் முறையாக" TOP 10"பட்டியலில் இடம் பெற்ற  சாதனையாளர் யார்?

a) சாய் ப்ரணீஷ்
b)ஸ்ரீகாந்த்
c)காஷ்யப்
d)பிரன்னாய்

6. விளையாட்டின் சிறந்த தருணம்(2000- 2020) என்ற  Laureus விருதைப் பெற்றுள்ள முதல் இந்தியர் யார்?

a) கபில் தேவ்
b) MS தோனி
c) சச்சின்
d) கவாஸ்கர்

7. ஆண்கள் பிரிவில் கடந்த ஆண்டின் சிறந்த வீரராக  Laureus Award ஐ பெறுபவர் யார்?

 a) Lewis Hamilton
b)Lionel Messi
c) both a)& b)
d)Virot Kholi

8. பெண்கள் பிரிவில்
 கடந்த ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கான Laureus Award ஐ பெற்றவர் யார்?

a) ஆலிசன் ஃபெலிக்ஸ்(USA)

b) மேகன் ராபினோ(USA)

c)சிமோனோ பில்ஸ்(ஜிம்பாப்வே)

d)நவாமி ஒஸாக்கா(ஜப்பான்)



இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்



நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. Srinivasan , 6 th std
     Gov. Higher secondary school,
      Arulpuram, Tirupur

2. Madhan Venu, 7th Std, 
3. S.Banu , 7th std
    PUMS, Ganesapuram, 
     Coimbatore.


4. S.Poornima, 5th std
5. D.Kushmitha, 8th std
     PUMS, Periyavarigam
     Thirupathur

6. Mohammed, 8th std
7. Immam Shameel, 8th std
8. Kareenkumar, 8 th std
9. Dhanusri, 5th std
10. A.Shamil Ahamed , 5th std
11. A.N.Shihab, 6th std
12. A.Thanuja Begum, 7th std
13. M.Ashmitha, 7th std
14. M.H.Hafila, 5th std
15. R.Mohammed Rafek, 5th std
16. S.Rishana, 5th std
17. S.A. Syed Asma Zabi, 6th std
18. H.Mohammed Harshath, 6th std
19. Nazir Shared, 6th std
20. Thanseer, 6th std
      All these students are studying in Corporation Middle School, Kottai, 
   Coimbatore

21. E.Shiny Geneva, 8th std
22. M.Januffiya, 8th std
23. R.Santhiya Josephine, 8th std
24. K.Vishalini, 8th std
     They are studying in Holy cross girls higher secondary school, Trichy

அனைவருக்கும் வாழ்த்துகள்..... நேற்று அதிக பதிவுகள்.... அதிக வெற்றியாளர்கள்....... நேற்றைய வீடியோ வடிவ தேர்வு மாணவர்களுக்கு எளிதாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருந்திருக்கும் என நம்புகிறோம்..  அதிக பதிவுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன. ..... தொடர்ந்து முயற்சியுங்கள் .... அதிகம் வாசியுங்கள்....



from covaiwomenict https://ift.tt/2PlRLiv

Tuesday, February 18, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 19.02.20

திருக்குறள்



அதிகாரம்:இறைமாட்சி

திருக்குறள்:384

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

விளக்கம்:

அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.

பழமொழி

Beware of him that telleth tales.

 புறங்கூறி திரிபவனிடம் எச்சரிக்கையாக இரு .

இரண்டொழுக்க பண்புகள்

1. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

2. எனவே எனது அறிவை பாதிக்கும் வகையில் ஆத்திரம் அடைய மாட்டேன்.

பொன்மொழி

விளக்கு வெளிச்சத்தை நம்பும் ஈசல் போல் அல்லாமல் சூரியக் கதிரை நம்பும் சூரியகாந்திப் போல் இருக்க வேண்டும்....... விவேகானந்தர்

பொது அறிவு

1. இந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக ஒரு விமானம் வாங்கி இயக்கியவர் யார்?

 திரு.ஜே.ஆர். டி.டாடா(1932ஆம் ஆண்டு).

 2. கார்ட்டூன் படங்களை முதன்முதலில் தமிழ் இதழ்களில் வெளியிட்டவர் யார்?

 பாரதியார்.

English words & meanings

Trophology – study of nutrition. ஊட்ட சத்து பற்றிய அறிவியல் படிப்பு.

Terminate - to end or to make something end. முடி அல்லது முடிவுற செய்தல்

*ஆரோக்ய வாழ்வு*

உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.

Some important  abbreviations for students

 R.N - registered nurse

R.R - rail road

நீதிக்கதை

திருக்குறள் நீதிக்கதைகள்

பாட்டியின் புத்திசாலித்தனம்

குறள் :
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

விளக்கம் :
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்.

கதை :
ஒரு ஊர்ல ஒரு வயசாண பாட்டி தனியா வசித்து வந்தாள். அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது.

ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது.

அவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கனும்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தாள்.

அங்கிருந்த விளக்கு ஸ்டேண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை என்றாள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான்.

விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா? அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள்.

மீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என பாட்டி கேட்டாள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும் ஒன்னும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான்.

மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கம் வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நீதி :
காலம் அறிந்து ஒரு அந்த இடத்தில் புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

புதன்
கணக்கு & கையெழுத்து

ஒரு அரிசி ஆலையில் நெல் மூட்டையிலிருந்து நெல்லை காய வைக்க இடம் தேர்வு செய்தனர். அவ்விடமானது நான்கு பக்கமும் 13 அடி நீளம் அகலம் உடையது எனில்
கேள்வி: நெல் பரப்பிய இடத்தின் அளவு என்னவாக இருக்கலாம் ??

விடை: நீளத்தையும் அகலத்தையும் பெருக்க வேண்டும் .
எனவே
13 × 13 =169 சதுர அடி

கையெழுத்துப் பயிற்சி - 28



இன்றைய செய்திகள்

19.02.20

◆மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் (தட்கல் உட்பட) தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

◆மேற்குத்தொடர்ச்சி மலை காடுகளை காப்பாற்றும் தீத்தடுப்பு கோடு: கோடைக்கு முன்பே நவீன கருவிகளுடன் தயாராகும் வனத்துறை.

◆சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்டஅகழாய்வுப் பணியை சென்னையில் இருந்தவாறு முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.

◆கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய தொழில்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

◆20 ஆண்டுகால லாரியஸ் விருது வரலாற்றில் முதல் முறையாக சிறந்த விளையாட்டு வீரர் விருதை இரண்டு வீரர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். பார்முலா ஒன் வீரர் லூயிஸ் ஹாமில்டன், அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரும் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான மதிப்பு மிக்க லாரியஸ் விருதை பகிர்ந்து கொண்டனர்.

◆கெய்ன்ஸ் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.

Today's Headlines

🌸The State Examinations Directorate said that the candidates who applied for the March 2020 upper-level first-year / second-year general examinations (including Tatkal) can download the admission cards online.

🌸 Western Ghats Forest Reserve Fire Department   is getting ready for summer with modern equipment to save forest

 🌸 Chief Minister Pazhanisamy started the sixth phase excavation at Keezhadi near Tiruppuvanam in Sivagangai District by Video Conference from Chennai.

 🌸Union Finance Minister Nirmala Sitharaman said that the Central Government is investigating the impact of coronavirus on Indian industry.

 🌸Two players share the Best Athlete Award for the first time in the 20-year Laurius Award history.  Formula One player Luis Hamilton and Argentine footballer Lionel Messi have shared the prestigious Laurius Award for the best player in the world.

 🌸India's Koneru Hampi won the Cairns Cup championship in Chess Series.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2u9pXpX

back to top

Back To Top