போக்கட்டும்.... பொங்கட்டும்....
அயுத்தம் போக்கட்டும்
அன்பு பொங்கட்டும்
ஆணவம் போக்கட்டும்
ஆக்கல் பொங்கட்டும்
இக்கட்டு போக்கட்டும்
இக்கு பொங்கட்டும்
ஈதை போக்கட்டும்
ஈதல் பொங்கட்டும்
உடன்றல் போக்கட்டும்
உட்கண் பொங்கட்டும்
ஊனம் போக்கட்டும்
ஊழியம் பொங்கட்டும்
எதிரிடை போக்கட்டும்
எண்ணுதல்பொங்கட்டும்
ஏதம் போக்கட்டும் ஏகத்துவம் பொங்கட்டும்
ஐயம் போக்கட்டும்
ஐயுணர்வு பொங்கட்டும்
ஒல்லார் போக்கட்டும்
ஒழுக்கம் பொங்கட்டும்
ஓசரி போக்கட்டும்
ஓச்சம் பொங்கட்டும்
ஒளவியம் போக்கட்டும்
ஒளவை சொல் பொங்கட்டும்
போக்குதல் எல்லாமும் போக்கட்டும்
பொங்குதல் எல்லாமும் பொங்கட்டும்
எல்லோருக்கும் இன்ப வாழ்வு தங்கட்டும்...
போகித்திருநாள்....
பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்......
சொ. உமாபதி,
பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
ஆதியூர்.
No comments:
Post a Comment