Wednesday, January 1, 2020

நாளை வாக்குகள் எண்ணிக்கை மீண்டும் நினைவுக்காக

நாளை வாக்குகள் எண்ணிக்கை மீண்டும் நினைவுக்காக    

        
 

1.காலை 6.30 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை  பணியாளர்கள் மையத்தில் இருக்க அறிவுறுத்தவும்.          
2. வகைப் பிரிப்பு அறைக்கு  reservation list ல் உள்ள பணியாளர்களையும் உடன் வைத்தும் கொன்டால் முதல் சுற்று வகைப் பிரிப்பு விரைவாக முடித்து வாக்கு எண்ணும் அறைக்கு அனுப்பலாம்.
3. வகைப் பிரிப்பு மற்றும் வாக்கு எண்ணுகை பணியாளர்கள் காலை 7.30 மணிக்குள் சிற்றுண்டி முடித்துக் கொள்ள வேண்டும்.        
4. வகை பிரிப்பு மேசையிலிருந்து அனுப்பும் போது வாக்கு எண்ணும் அறை மேசை எண் ஆகியன குறித்த விவரச் சீட்டு கொடுத்தனுப்ப வேண்டும்.                          
5. வாக்குகள் எண்ணும் போது நடுநிலையாக எந்த வேட்பாளருக்கும் சாதக பாதகமின்றி திடமான முடிவுகள், எடுக்க வேண்டும்.            
6. முடிந்த வரை மறுவாக்கு எண்ணிக்கை அனுமதிக்க கூடாது.      
7. வாக்கு எண்ணுகை மையத்தில் முடிந்த வரை பேச்சுகள் கூடாது.
8.வரப்பெறும் தேர்தல் முடிவுகள் நொடிகள் தாமதமின்றி அறிவிப்பது பிரச்னைகளைக் குறைக்கும்
9.வாக்கு எண்ணும் அறையில் காத்திருப்பு பணியாளர்கள் ஒரு அறைக்கு ஒருவர் வீதம் வைத்திருக்கும் பட்சத்தில் எண்ணி முடிக்கப்பட்ட வாக்குச் சீட்டு மற்றும் ஆவணங்கள் அவர்தம் மூலமாக R.0. அறைக்கு கொடுத்தனுப்ப வசதியாக இருக்கும் இதனால் அடுத்த சுற்று தடையின்றி நடைபெறும்.

10.முடிவு அறிவிக்க R0. அறைக்கு வரும் எண்ணப்பட்ட வாக்குச் சீட்டுகளை நிறம் வாரியாகவும்,மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் வார்டு வாரியாகவும்,ஊரர்ட்சி தலைவர் வாக்குச் சீட்டுகளை வாக்குசாவடி எண் / ஊராட்சி வாரியாகவும், PU.  மற்றும் DPவார்டுகளின் வாக்குச் சீட்டுகளை வாக்குச்சாவடி/ வார்டு வாரியாக ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு பணியாளரை பொறுப்பாககி அடுக்கி கட்டி வைத்தல் நலம் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்க சிறந்த முறையாகும்
எண்ணி முடிக்கப்பட்டு முடிவு அறிவிக்க்கப்பட்ட வாக்க  சீட்டுகளை தனித்தனியே  முகவரி அட்டைகள் தயாரித்து மூடு தாள்களில் மூடிசிப்பமிட்டு முகவரி அட்டைகள் ஒட்டி டிரங்க் பெட்டிகளிலும் முகவரியிட்டு பாதுகாப்பது மிகவும் சிறந்தது
11.வாக்கு எண்ணுகை முடிவுற்றவுடன் வெற்றி பெற்றவருக்கு அதற்கான சான்று வழங்கிய பின்னர் தான் அது பற்றிய விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் மேலும் அப்போதே முதல் கூட்டத்திற்கான அறிவிப்பு, மறைமுகத் தேர்தலுக்கான அறிவிப்பும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வழங்கி ஒப்புதல் பெற வேண்டும்

சிறந்த முறையில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிக்க வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

back to top

Back To Top