Tuesday, December 10, 2019

தெனாலிராமன் கதைகள்- காளியிடம் வரம் பெற்ற கதை

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தார். தெனாலிராமன் இளமையிலேயே தன் தந்தையை இழந்தார். அதனால் அவரும், அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்தனர், அவருடைய தாய் மாமன் ஆதரவில் தான் வாழ்ந்து வந்தார்கள்.

தெனாலி ராமனுக்குப் படிப்பு என்பது வேப்பங்காயாக காசந்தது. இருந்தாலும், அவர் மிகவும் புத்திசாலியானவர், நல்ல நகைச்சுவையாகப் பேசக்கூடியவர். அவர் தந்தை இறந்ததால் தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தெனாலிராமனைக் காண ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு மிகவும் வருந்தினார். அதன் பிறகு அவருக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்னமாவாள் என்றார்.

அதன்படியே இராமனும் கோயிலுக்குச் சென்று தன் கண்களை மூடி முனிவர் சொன்ன மந்திரத்தை ஜெபிக்கத் தொடங்கினார். இரவு, பகல் பாரமல் ஜெபித்ததால் உடனே காளி அவர் எதிரே தோன்றினாள். உனக்கு என்ன வேண்டும்? என கோபமாகக் கேட்டாள் காளி. அவளை வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான். தாயே என் வறுமை அகலும் வழியும், எனக்கு நல்லறிவும் தர வேண்டுகிறேன்.

உடனே காளி உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும், செல்வமும் வேண்டுமா? என்றாள். ஆம் தாயே... ! புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து அருள் செய்ய வேண்டும் தாயே, என்றான். பிறகு காளி இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தாள். அதை இராமனிடம் தந்தாள் காளி. இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது.

ஆனால் நீ ஏதவாது ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தான் குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்த பாலை மட்டும் குடி என்றாள் புன்னகையுடன். என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன் என்றான். நான் எதை அருந்துவது தெரியவில்லையே, என்று சிறிது நேரம் யோசித்து விட்டு, பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் ஊற்றி, அந்த கிண்ணத்துப் பாலை குடித்து விட்டுச் சிரித்தான். காளி திகைத்து நின்றாள்.

நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்! ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன். என்றான். ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்? கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே! என்றான். உடனே காளி மகிழ்ந்து இராமானுக்கு! வரம் தந்தால், ராமா நீ புலவன் என்று பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய் என்று கூறி மறைந்தாள். இராமன் விகடகவி என்ற பெயரை திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ச்சி அடைந்தான்.

நீதி :
மதியால் எதையும் வெல்லாம். புத்தியுள்ளவர்கள் எங்கு சென்றாலும் தன் திறமையினால் தனக்கு சாதகமாகக் மாற்றிக் கொள்வார்கள்.


*இனிய காலை வணக்கம்*

No comments:

Post a Comment

back to top

Back To Top