Sunday, December 1, 2019

சத்துணவு அமைப்பாளர் பணி: விண்ணப்பிக்க மகளிருக்கு அழைப்பு

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, டவுன் துவக்கப்பள்ளி,
அம்பலதாடி துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி காலியாக உள்ளது. இனசுழற்சி முறையில் மகளிர் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களுக்கு, 7,700 முதல், 24 ஆயிரத்து, 200 ரூபாய் என்ற ஊதியத்தில் பணி வழங்கப்படும். நகராட்சி அலுவலகத்தில், நாளை முதல், 16க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பழங்குடியினர் எட்டாம் வகுப்பு தோல்வி அல்லது தேர்ச்சி. பள்ளிக்கும், விண்ணப்பதாரர்கள் உள்ள இடத்துக்கும், 3 கி.மீ., தூரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன், கல்வித்தகுதி, இருப்பிடம், இனம், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி உள்ளிட்ட சான்றுகளின் நகல்களுடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது dharmapuri.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

back to top

Back To Top