Tuesday, December 3, 2019

கணினி ஆசிரியர் பணி சான்றிதழ் பதிவு

முதுநிலை கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.இது குறித்து, வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் நிலையில், கணினி பயிற்றுனர் பணியிடங்களை நிரப்ப, ஜூன், 23 மற்றும் 24ம் தேதிகளில் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள், நவ.,25ல் வெளியிடப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டவர் பட்டியல், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், நவ., 28ல் வெளியிடப்பட்டது.இந்த பட்டியலில் உள்ளவர்கள், உரிய சான்றிதழ்கள் மற்றும் பிற விபரங்களை, நாளை மறுநாள் மாலை, 5:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அவகாசம் நீட்டிக்கப்படாது.

No comments:

Post a Comment

back to top

Back To Top