இந்தப் பள்ளியில் மாணவர்களுக்குச் செய்துகொடுக்கப்பட்டுள்ள
அடிப்படை வசதிகளையும் பள்ளியின் தூய்மையையும் பார்க்கும்போது பூரிப்படையச் செய்கிறது.
தனியார் தொடக்கப் பள்ளிகளெல்லாம், குருவிமலை அரசுப் பள்ளிக்கு ஈடுகொடுக்கவே முடியாது.
அந்த அளவிற்கு உள்கட்டமைப்பு, கல்வி நடைமுறைகள், மாணவர்களின் வகுப்பறைத் தோற்றம், சுவர் சித்திரம், வகுப்பறையில் மின்னும் மாணவர்களே வரைந்த ஓவியங்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட நூலகம், தூய்மையான கழிவறைகள், தரம் பிரிக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என ஒவ்வொரு அசைவிலும் ஆச்சர்யப்படவைக்கிறது.
No comments:
Post a Comment