Monday, December 16, 2019

மாணவர் பட்டியல்: திருத்தம் செய்ய அவகாசம்

இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை
:வரும், 2020 மார்ச்சில் துவங்க உள்ள, 10ம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்பும் மாணவர்களின் பெயர், முகவரி மற்றும் சுய விபரங்கள், &'எமிஸ்&' என்ற, கல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன.அதைத் தொடர்ந்து, பள்ளி கள் அனைத்தும், இன்று முதல், 30ம் தேதி வரை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில், பள்ளியின் பெயர் குறிப்பிடப்படும் என்பதால், பள்ளியின் பெயரை ஆங்கிலத்திலும், தமிழிலும் சரியாக குறிப்பிட வேண்டும்.பள்ளியின் வகையையும் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் என்பதால், அந்த விபரங்களையும் சரியாக குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு தேர்வு முடிவை அறிவிக்கும் வகையில், அவர்களின், மொபைல் போன் எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

back to top

Back To Top