30.11.2019 அன்று நடைபெற்ற CEO அவர்களின் கூட்ட அறிவுரைகள்
*இத்தகவல்களை உதவி ஆசிரியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி கையொப்பம் பெற்று வைக்கப்பட வேண்டும். கீழ்க்கண்ட அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
*1. காலை இறைவணக்கக் கூட்டத்திற்கு முன்பு 15 நிமி. மற்றும் பள்ளி நேரம் முடிந்த பின்பு 45 நிமிடங்கள் மாணவர்களுக்கு கூட்டு உடற்பயிற்சி, Sports, இசை, பாட்டு, நடனம், விளையாட்டு போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.
*2.காலை மாலை இடைவேளையின்போது 1 நிமி. ஆசிரியர்களின் மேற்பார்வையில் மாணவர்கள் அனைவரும் தண்ணீர் அருந்த வேண்டும் (1 நிமி). தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னரே Restroom அனுப்ப வேண்டும்.(இடைவேளை 10 நிமிடம் தான்)
*3.இரண்டு வாரத்திற்கு ஒரு முறையேனும் CRC ஒருங்கிணைப்பாளர்கள் (HS/HSS, HMs) பள்ளியைப் பார்வையிட்டு வருகை, தரம் சோதிக்க வேண்டும். ஒரே வளாகத்தில் இயங்கும் பள்ளிகளில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பின் Acting Teacher அனுப்பவேண்டும்.
*4.2.12.2019 முதல் EMIS மூலம் Student Attendence, Staff attendence முழுமையாக பதிவு செய்யாதவர்கள் பெயர்ப் பட்டியல் அனுப்பப்பட்டு, அன்று மாலை முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களை நேரில் சந்திக்க வேண்டும்.
(Partially Marked, Not Marked வரவே கூடாது).
*5.சத்துணவு SMS கட்டாயம் அனுப்பப்பட வேண்டும்.
*6. EMIS -ல் Time Table வாரந்தோறும் update செய்ய வேண்டும்.
*7.EMIS ONE App - ல் உள்ள TNTP கட்டாயம் பயன்படுத்தி Videos, Pictures, TLM பயன்படுத்தி கற்பிக்க வேண்டும். அதேபோல் DIKSHA app பயன்படுத்தியும் கற்பிக்க வேண்டும். மாணவர்களையும் பயன்படுத்தச் சொல்லவும். (எந்த ஆசிரியர் எத்தனை முறை பயன்படுத்தியுள்ளார் என்ற விபரம் கண்காணிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்).
*9.சமுதாய பங்களிப்பு நிதி CSR portal மூலம் பள்ளியின் தேவைகளை upload செய்தால் Donors நிதியளிக்கவுள்ளனர். தேவைகளைப் பதிவிடவும். (IT-80G பிரிவின்கீழ் வரிச்சலுகைப் பெறலாம்).
*10.ஆதார் இல்லாத குழந்தைகளுக்கு BRC யைத் தொடர்பு கொண்டு எடுக்கவும்.
*11.அனைத்து ஆசிரியர்களுக்கும் Smart Card வழங்கப்படவுள்ளதால் EMIS - ல் உள்ள ஆசிரியர் விவரங்களை சரிபார்க்கவும். புதிய photo பதிவேற்ற வேண்டும்.
*12.தினமும் தேர்வு 30 மதிப்பெண்களுக்கு வைத்து, திருத்தி, பெற்றோர் கையொப்பம் பெறப்படவேண்டும். இதில் சுணக்கம் இருக்கக் கூடாது.
*பள்ளிப் பார்வையின்போது சில பள்ளிகளில் த.ஆ.கூட்டத் தகவல்கள் மற்றும் HM WhatsApp Group செய்திகள் உதவி ஆசிரியர்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை எனத் தெரியவருகிறது.
இது தவிர்க்கப்பட வேண்டும்.
*EMIS ONE app இன்னும் install செய்யாமல் இருந்தால் நாளைக்குள் செய்து, திங்கள் முதல் நமது ஒன்றியம் 100% Staff attendence, Student attendenc, Noon Meal SMS முடித்துவிட வேண்டும் என அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.
*த.ஆ.மற்றும் உ. ஆ. இருவரும் install செய்து பதிவு செய்யவும். இதில் யாருக்காவது ஒத்துழைப்பு இல்லை எனில் சார்ந்த வ.க.அலுவலரைத் தொடர்புகொள்ளவும்.
No comments:
Post a Comment