தங்களுக்கு ஆசிரியர்கள் மேல் அப்படி என்ன தீராத வன்மம்? தொடர்ச்சியான தாக்குதல்களை ஏன் தொடுக்கிறீர்கள்? ஓர் ஆசிரியரின் ஊதியத்தை மருத்துவர்களின் ஊதியத்துடன் எப்படி உங்களால் Compare செய்ய முடிகின்றது. தயவுசெய்து ஆசிரியர்களை மற்ற ஊழியர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். ஓர் ஆசிரியரால் யாரை வேண்டுமானாலும் உருவாக்க முடியும். ஏன் உங்களை கூட ஓர் ஆசிரியர் தான் உருவாக்கியிருப்பார். ஆனால் ஒரு ஆசிரியரை உங்களால் உருவாக்க முடியுமா? நீங்கள் Compare செய்த ஊதிய பிரச்சினைக்கு வருவோம். ஒரு ஆசிரியர் எப்பொழுது 80000 ஊதியம் வாங்குகிறார்? 30 வருடம் பணி செய்த பிறகு, ஆனால் மருத்துவர் பணியில் சேரும்போது 58000. ஒரு இடைநிலை ஆசிரியரின் முதல் சம்பளம் 20600 என்பதை நீங்கள் அறியவில்லை என்றே நினைக்கின்றோம். இன்னும் சொல்லப்போனால் இந்த மாநிலத்தில்தான் ஒரே பணிக்கு எங்கள் இடைநிலை ஆசிரியர்கள் இரண்டுநிலையில் ஊதியம் வாங்குகிறார்கள். அதற்கும் நாங்கள் உங்களிடம் வந்தோம் இன்னும் எங்களுக்கு தீர்வில்லை. தயவுசெய்து உண்மைநிலை அறியாமல் எங்களை சீண்டி பார்க்காதீர்கள். நாங்கள் நீதிக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனால் அநீதி எது? நீதி எது? என 1 ம் வகுப்பிலேயே நீதி கதைகள் மூலம் மாணர்களுக்கு சொல்லி கொடுப்பவர்கள். அநீதியை கண்டு ஆசிரியர்கள் போராடக்கூடியவர்கள் என்பதால்தான் அரசும் நீதிமன்றமும் எங்களை ஒடுக்க நினைக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். தயவுசெய்து எங்கள் சாபத்திற்கு ஆளாகாதீர்கள். ஆசிரியர்களுக்காக போராடுவோம் என்ற எங்கள் சங்கங்கள் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது தெரியவில்லை. குட்டக்குட்ட குனிவோம் என நினைத்து விடாதீர்கள். பொறுத்தவர்கள் பொங்கி எழுந்தால் தாங்க மாட்டீர்கள். மாண்புமிகு நீதிபதி இது போன்ற விமர்சனங்களை வைக்குமுன் உங்கள் ஆசானை நினைத்துப் பாருங்கள். நாங்கள் "அச்சமில்லை அச்சமில்லை" என கற்று கொடுத்தவர்கள், நக்கீரன் வாழ்ந்த தமிழ் மண்ணில் பிறந்தவர்கள். எனவே எனக்கு இந்த பதிவை வெளியிடுவதில் பயமில்லை. எங்கள் ஆசிரியர்களுக்கும் அனைத்து சங்கத்தினருக்கும் அன்பு வேண்டுகோள் முடிந்தவரை அனைத்து ஊடகங்களிலும் பகிருங்கள். எந்த பாதிப்பு வந்தாலும் தனி ஒரு மனிதனாக நமது ஆசிரிய சமுதாயத்திற்காக தாங்கி கொள்ள தயாராக உள்ளேன்.
இவண் உங்கள் துரை.பிரபாகர், மாவட்டச்செயலாளர், தமிழகத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, புதுக்கோட்டை மாவட்டம்.
பகிர்வு:. WhatsApp.
No comments:
Post a Comment