தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் பணிக்கு நியமிப்பதற்காக ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மாவட்ட கல்வி அலுவலர் மூலம் கேட்கப்பட்டுள்ளது.
படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கும் பொழுது, தேர்தல் பணிகளுக்கு விலக்களிக்கபட்டவர்களுக்கு படிவம் கொடுக்க வேண்டாம்.
குறிப்பாக
1. மாற்றுத்திறனாளிகள்
2. கர்ப்பிணி பெண்கள்
3. பாலூட்டும் தாய்மார்கள்
4. சிறுநீரகக் கோளாறு, இதய கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள்
5. புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
போன்றோர் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டாம்.
படிவம் பூர்த்தி செய்து கொடுக்கச் சொன்னால் வேண்டாம் என்று கூறுங்கள். அதற்கான ஆதாரத்தை தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பியுங்கள்.
எனவே தேர்தல் பணி இருந்து விலக்கு பெறுவோர் உரிய ஆவணத்தை கொடுத்து படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்காமல் விலகிக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment