Thursday, October 10, 2019

தமிழக அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு எப்போது

மத்திய அரசு ஊழியர்களுக்கு 01.07.2019 முதல் 5% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப் பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட
அகவிலைப்படி, ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் மாதம் முதல் ஊதியத்துடன் வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இதற்கான அரசாணை இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் வெளிவரும் எனத் தெரிகிறது.
மத்திய அரசின் ஆணை வெளிவந்த பின், அதனைப் பின்பற்றி மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்குவது வழக்கம்.
விரைவில் வரவுள்ள தீபாவளிப் பண்டிகையையொட்டி, தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை, ஒன்றிரண்டு  வாரங்களில் வெளியிட அதிக வாய்ப்புள்ளது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், 5% அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பை தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


No comments:

Post a Comment

back to top

Back To Top