சந்திரனில் கடும் குளிர்காலம் நாளை முதல் ஆரம்பம் ஆவதால் சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் முடிகிறது. உறை பணியில் விக்ரம் லேண்டரால் வேலை செய்ய முடியாது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக
இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரயான் 2 விண்கலம் மூலம் விக்ரம் லேண்டரை அனுப்பியது. ஆனால் தரையிறங்க சுமார் 2 கிலோமீட்டர் தூரம் இருக்கும் போது கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை விக்ரம் லேண்டர் இழந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை மீண்டும் தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்தனர்.

விக்ரம் லேண்டர் வேகமாக வந்து மோதி நிலவின் தரையில் விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
இன்றுடன் நிலவில் 14 புவி பகல்கள் முடிகிறது. நாளை முதல் நிலவின் தென் பகுதியில் 14 நாள்கள் புவி இரவுகள் ஏற்பட்டும். அந்த சமயத்தில் நிலவில் உறை வெப்பநிலை மைனஸ் 240 டிகிரி செல்சியசிற்கும் அதிகமாக மாறிவிடும். இத்தகைய அதீத குளிர் வெப்பநிலையில் எலக்ட்ரானிக் பொருட்களான லேண்டர் விக்ரம் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றால் வேலை செய்ய இயலாது. எனவே விக்ரமின் இயந்திர பாகங்கள் சேதமடைந்து, அதன் சோலார் திறன் இழக்கும். எனவே பிரக்யான் ரோவரும் வேலை செய்யாது. எனவே விக்ரம் லேண்டரின் ஆயுள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதனால் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தும் விஞ்ஞானிகளின் முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. எனினும் மனம் தளராத விஞ்ஞானிகள் ஆர்பிட்டரை வைத்து நிலவை ஆராய்ச்சி செய்யும் பணியில் இறங்கி உள்ளனர்.
வியாழக்கிழமை மாலை இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், சந்திரயான்-2 திட்டத்தில் விண்ணில் ஏவப்பட்ட ஆர்பிட்டர் திட்டமிட்டபடி பணியை தொடர்கிறது. விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு இழந்தது எப்படி என தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறது என பதிவிட்டுள்ளது. இதன் மூலம் இன்றுடன் விக்ரம் லேண்டர் விடை பெறுவது உறுதியாகியுள்ளது. கூண்டுக்குள் வைக்கப்பட்ட பிரக்யானும் நாளை முதல் வேலை செய்யாது.
No comments:
Post a Comment