Monday, September 16, 2019

அதிரடியாகக் குறையும் மின்சார வாகனங்களின் விலை... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க தமிழக அரசின் கொள்கையை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன் படி மின்சார வாகனங்களின் விலை
குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக அரசின் வரி விலக்கு மற்றும் முதலீட்டு மானியம் காரணமாக மின்சார வாகங்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100% வரிவிலக்கு.

அதேபோல் மின்சார வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 15 சத விகித மானியமும் வழங்கப்படும் என முதலவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கான இலக்குகளை இந்தியா வகுத்துள்ளது.
இந்திய நிதியமைச்சர் சமீபத்தில் சமர்ப்பித்த பட்ஜெட்டில், மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு சலுகைகளை அறிவித்துள்ளார். இந்நிலையில் மின்சார வாகனங்களுக்கான தமிழக அரசின் கொள்கை முடிவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த முடிவால் மின்சார வாகனங்களின் விலை கணிசமாக குறையும் எனக் கூறப்படுகிறது.

back to top

Back To Top