Wednesday, September 18, 2019

கதைகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி









ஈரோடு: கதைகள் மூலம் மாணவர்களுக்கு நற்பண்புகளை சொல்லி 
 கொடுப்பது குறித்து, ஆசிரியர்களுக்கான பயிற்சி ஈரோட்டில் துவங்கியது.தொடக்க கல்வி துறை சார்பில், அரசு பள்ளிகளில் கதை மையங்களை ஏற்படுத்துவதன் மூலம், குழந்தைகளிடம் நற்பண்புகளை வலுப்படுத்துவது குறித்து தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, மூன்று நாள் பயிற்சி, ஈரோட்டில் நேற்று துவங்கியது. ஒரு பள்ளிக்கு ஐந்து ஆசிரியர் வீதம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 16 பேர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 14 பேர் பங்கேற்றுள்ளனர். ஐந்து கருத்தாளர்கள் பயிற்சி அளிக்கின்றனர். தொடக்க கல்வி துறை இயக்குனர் கருப்புசாமி துவக்கி வைத்தார். முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி பங்கேற்றார்.*அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர்களுக்கு, புதிய பாடப்புத்தக பயிற்சி, கோபியில் நேற்று துவங்கியது.

இரு நாட்கள் நடக்கும் பயிற்சியை, ஆசிரியர் பயிற்றுனர் கணேசன் துவக்கி வைத்தார். கருத்தாளர்கள் குணசேகரன், இளவரசி, சந்திரசேகரன் பயிற்சி அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில், 14 யூனியன்களை சேர்ந்த, 29 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

back to top

Back To Top