ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு, ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்டவற்றின் அடிப்படையில், உலக அளவில் உள்ள முன்னணி உயர் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, &'டைம்ஸ்&' நிறுவனம்&' ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இதில், 2020க்கான தரவரிசை பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு, இந்தியாவைச் சேர்ந்த, 49 பல்கலைக்கழகங்கள், இப்பட்டியலில் இடம் பெற்று இருந்தன. இந்த ஆண்டு, அந்த எண்ணிக்கை, 56ஆக உயர்ந்துள்ளது.ஏமாற்றம்:ஆனால், சர்வதேச அளவில், &'டாப்&' 300 கல்வி நிறுவனங்களில், இந்தியாவைச் சேர்ந்த ஒரு பல்கலை கூட இடம் பெறாதது, ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்நிலை, 2012ல் இருந்து தொடர்ந்து வருகிறது. இந்த தரவரிசை பட்டியலில், ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, ஆக்ஸ்போர்டு பல்கலை முதலிடத்தையும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.ஐ.ஐ.டி., கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, ஐ.ஐ.எஸ்., எனப்படும், இந்திய அறிவியல் கழகம் மற்றும் மத்திய பிரதேச மாநிலம், இந்துாரைச் சேர்ந்த, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கழகம், 300 - 400 இடங்களில் இடம் பிடித்து உள்ளன. மும்பை, ஐ.ஐ.டி., கோரக்பூர், ஐ.ஐ.டி., மற்றும் டில்லி, ஐ.ஐ.டி., 400 - 500 இடங்களிலும், காந்திநகர், ஐ.ஐ.டி., ரூர்கி, ஐ.ஐ.டி., 500 --- 600 இடங்களிலும் இடம் பிடித்து உள்ளன. இதேபோல், சென்னை, ஐ.ஐ.டி., கோவையின் அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், 600 - 800 இடங்களில் உள்ளன.56 நிறுவனங்கள்:இதுவரை பட்டியலில் இடம் பெறாமல் இருந்த, சென்னை, அண்ணா பல்கலைக்கழகம், கோவை, வேளாண் பல்கலைக்கழகம், திருச்சி, என்.ஐ.டி., எனப்படும் தேசிய தொழில்நுட்ப நிறுவனம். வேலுார், வி.ஐ.டி., தஞ்சாவூர், சாஸ்த்ரா பல்கலைக்கழகம், கோவை, பி.எஸ்.ஜி., பல்கலைக்கழகம், சென்னை, எஸ்.ஆர்.எம்., உள்ளிட்ட 56 கல்வி நிறுவனங்கள், இந்த பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ளன. இந்த தரவரிசை பட்டியலில், இந்தியா, உலக அளவில் ஐந்தாவது இடத்திலும், ஆசிய அளவில், மூன்றாவது இடத்திலும் உள்ளது.

No comments:
Post a Comment