Friday, September 6, 2019

`பின்லாந்தில் கல்விமுறை எப்படி இருக்கிறது தெரியுமா!' - சிலாகித்த அமைச்சர் செங்கோட்டையன்

போட்டித் தேர்வுகள் மற்றும் திறன் தேர்வுகளுக்காக மாநில அளவில், முதுநிலை ஆசிரியர்களுக்கான கருத்தாளர்கள் பயிற்சி முகாம் ஈரோட்டில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்துகொண்டு இந்தப் பயிற்சி முகாமினைத் தொடங்கி வைத்தனர். 

இந்தப் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்தபின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ``பின்லாந்து போன்ற வெளிநாடுகளில் தொழில்சார்ந்த கல்வி மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. 2 வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர். ஆனால், 6 வயது ஆன பிறகுதான் கல்வியைக் கற்றுத் தருகின்றனர். அதுவரை அந்த மாணவர்களுக்கு உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள், நல்ல நெறிமுறைகள் போன்றவற்றைக் கற்றுத் தருகின்றனர்.




பள்ளிக்கு வர வேண்டும் எனச் சிறு குழந்தைகள்கூட விரும்பும் சூழ்நிலை அங்கு உள்ளது. அங்கு அரசே பள்ளிகளை முழுமையாக நடத்துகிறது. 9-ம்வகுப்பு படிக்கும்போதே மாணவர்களுக்கு தொழில் திறன்சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 18 வயதுக்குப் பிறகு தங்கள் பெற்றோர் உதவி இல்லாமலே, வாழ்க்கை நடத்துமளவுக்கு அங்கு கல்வி முறைகள் நடைமுறையில் உள்ளன. முதல்வரின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்று, வெளிநாடுகளின் பாணியில் தமிழக கல்விமுறையிலும் மேலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

back to top

Back To Top