தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு "மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்' என தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் முக்கிய நோக்கம், படித்த இளைஞர்களின் கல்வித் தகுதியை பதிவு செய்தல், வேலைவாய்ப்பு மற்றும் அரசுப் பணிகளுக்கு வேலையில்லா இளைஞர்களின் கல்வித் தகுதி விவரங்களை வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குதல் ஆகியவை ஆகும்.
தற்போது, இத்துறையின் மூலம் திறன்பயிற்சி, போட்டித் தேர்வுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு குறித்து ஊக்கப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்படும் போட்டித் தேர்வுகளுக்கு கல்லூரி பேராசிரியர்கள், துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு தன்னார்வ பயிலும் வட்டத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. கண்காட்சி மற்றும் கருத்தரங்குகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதலும் மேற்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் இளைஞர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி வழங்கப்படுவது குறித்து, பொதுமக்கள் அதிகளவில் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் என்பதை "மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்' என தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட இளைஞர்கள் இம்மையத்தை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment