Friday, September 13, 2019

ஆசிரியர்களுக்கு பயிற்சியா....?!

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடை பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை! 

 

                     மத்திய மனிதவள மேம் பாட்டு அமைச்சகம் சார்பில் தொடக்க மற்றும் உயர் தொடக்க
நிலைப் பள்ளி (நடுநிலைப் பள்ளி) ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தேசிய கருத்தாளர்கள் குழு மாநில கருத்தாளர்களுக்கு 6 நாட்கள் பயிற்சி அளிப்பர். இந்த மாநில கருத்தாளர்கள் மூலம் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டம்மற்றும் ஒன்றிய அளவில் பயிற்சி அளிக்கப்படும்.இதற்காக மாநில அளவில் 6 பேர் கொண்ட கருத்தாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள் ளன.

 இதில் சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்கு செப்.16 முதல் 21-ம் தேதி வரையும், மதுரை உட்பட இதர 16 மாவட்டங்களுக்கு 23 முதல் 28-ம் தேதி வரையும் 2 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும். அதன்பின் அக்டோபர் மாதம் மாநில கருத்தாளர்கள் மூலம் ஒன்றிய அளவில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரப்படும்.

No comments:

Post a Comment

back to top

Back To Top