சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எப்போது? என்பது தொடர்பான, திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
2020ம் ஆண்டு
மார்ச் 27ம் தேதி தேர்வு தொடங்குகிறது, ஏப்ரல் 13ம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. மே 4ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 27ம் தேதி தேர்வு தொடங்குகிறது, ஏப்ரல் 13ம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. மே 4ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிப்பாடம், ஆங்கிலபாடத்திற்கான இரு தாள்கள், ஒரே தாளாக மாற்றப்பட்டதால், புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அட்டவணையில் குறிப்பிட்டு இருப்பதாவது:
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை
மார்ச் 27 - மொழிப்பாடம்
மார்ச் 28 - விருப்பப்பாடம்
மார்ச் 31 - ஆங்கிலம்
ஏப்.3 - சமூக அறிவியல்
ஏப்.7 - அறிவியல்
ஏப். 13 - கணிதம்
மே 4ம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்