Thursday, September 5, 2019

ஆசிரியர் தினவிழா 2019

தமிழகத்தின் முன்னோடி ... 
          ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன் பாளையம் ஒன்றிய ஆசிரியர்களால் நடத்தப்படும்
 ஆசிரியர் நலச்சங்கம்1983 ல் தொடங்கப்பட்டது.ஆசிரியர் நலனுக்காக சங்கபேதம் இன்றி அனைத்து ஆசிரியப்பெருமக்கள் ஒன்றிணைந்த, இச்சங்கம் மூலம் ஆண்டுதோறும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. 
        36ஆம் ஆண்டாக இன்றும் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பணிநிறைவு பெற்ற ஆசிரியருக்குப் பணமுடிப்பு மற்றும் பாராட்டு விழா மற்றும் நல்லாசிரியர் விருதுபெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு இனிதே நடைபெற்றது.



          நட்பை வளர்க்கும் விதமாக  இருபால் ஆசிரியர்களுக்கிடையே தனித்தனியே விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
      அனைத்து ஆசிரியர்களுக்கும் உணவுகள் பரிமாறி, அனுபவமிக்க ஆசான்களின் சிறந்த அனுபவக் கருத்துகளைப் பகிர்ந்த இந்நிகழ்வு உண்மையில் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது, இந்நிகழ்ச்சியை திறம்பட நிகழ்த்திய ஆசிரியர் நலச்சங்க நிர்வாகிகளை கல்விக்களஞ்சியம் வாஞ்சையுடன் பாராட்டுகிறது...


No comments:

Post a Comment

back to top

Back To Top