Wednesday, August 4, 2021

std 8 / maths / ex 1.4 / Q9 to Q15 / 8ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.4 வினாக்கள் 9 முதல் 15 முடிய..

std 8 / maths / ex 1.4 / Q9 to Q15 / 8ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.4 வினாக்கள் 9 முதல் 15 முடிய..
8ம் வகுப்பு கணிதம் பயிற்சி 1.4 வினாக்கள் 9 முதல் 15 முடிய..


View on YouTube

ஆசிரியர்களுக்கு on duty யில் தேர்வு எழுத அனுமதிக்கலாமா ?

 துறைத்தேர்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு on duty ல் தேர்வு எழுத அனுமதிக்கலாமா ? TNPSC RTI விளக்கம் .

தகவல் அறியும் உரிமைச்சட்டம் , 2005 - ன் கீழ் தகவல்கள் கோரியுள்ள கடிதத்திற்கு தனியாளர் , திரும் , சயாவல் , கரூர் மாவட்டம் அவர்களுக்கு இதன் மூலம் தெரிவிப்பதாவது , அடிப்படை விதிகளில் விதி 9(6) (b) (iii) - ன் படி நகல் இணைக்கப்பட்டுள்ளது அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் எந்த ஒரு தேர்விற்கும் செல்வதை பணிக்காலமாக (on Duty ) கருதி துய்த்துக்கொள்ளலாம் . மேலும் அதே விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார் . !




Tuesday, August 3, 2021

கோவிட் 19 சிறப்பு விடுப்பு

கோவிட் 19 சிறப்பு தற்செயல் விடுப்பு அரசாணை


ஒரு அரசு ஊழியரோ அல்லது  அவரது குடும்பத்தினரோ, கோவிட் 19 பாதித்து

சிகிச்சையில் இருந்தாலோ, தனிமைபடுத்துதலில் இருந்தாலோ, அல்லது அவர்களின் குடியிருப்பு Containment zone பகுதியில் இருந்தாலோ இவர்கள் பணிக்கு வராத முழு நாட்களும் சிறப்பு தற்செயல் விடுப்பாக (Special Casual Leave) கருதப்படும்.

See Government Order para, 5 (vi)

G.O.304 Download here 

Monday, August 2, 2021

உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு .

 ஆகஸ்ட் 3 - தீரன் சின்னமலை நினைவு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு . 

ஈரோடு மாவட்டம் , சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18.

 03.08.2021 செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்படுவதால் அரசாணையின்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆணையிடப்படுகிறது . உள்ளூர் விடுமுறை நாளான 03.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்பட வேண்டியது எனவும் ஆணையிடப்படுகிறது .



கல்வி டிவி நிகழ்ச்சி நிரல் ஆகஸ்ட் முதல் வாரம்..

ஆகஸ்ட் 2 முதல் ஒளிபரப்ப உள்ள கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நிரல் முன்னறிவிப்பு...

நிகழ்ச்சி தகவல் அட்டவணை பார்க்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..


Pdf Download Here... 

back to top

Back To Top