Friday, April 30, 2021
std7/maths/worksheet3/part2/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்3/பகுதி2 வினாக்கள் 17 முதல் 20 முடிய
std7/maths/worksheet3/part2/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்3/பகுதி2 வினாக்கள் 17 முதல் 20 முடிய ...
View on YouTube
Thursday, April 29, 2021
std8/maths/worksheet4/8ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்4
std8/maths/worksheet4/8ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்4 ...
View on YouTube
Wednesday, April 28, 2021
std7/maths/worksheet3/part1/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்3/பகுதி1
std7/maths/worksheet3/part1/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்3/பகுதி1 வினாக்கள் 1 முதல் 16 முடிய
View on YouTube
std7/maths/worksheet3/part1/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்3/பகுதி1
std7/maths/worksheet3/part1/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்3/பகுதி1 வினாக்கள் 1 முதல் 16 முடிய
View on YouTube
Tuesday, April 27, 2021
7th maths/worksheet3/part3/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்2/பகுதி3
std7/maths/worksheet3/part3/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்2/பகுதி3 வினாக்கள் 15 முதல் 20 முடிய
View on YouTube
Monday, April 26, 2021
std8/maths/worksheet3/8ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்3
std8/maths/worksheet3/8ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்3 அனைத்து வினாக்கள்...
View on YouTube
Sunday, April 25, 2021
std7/maths/worksheet2/part1/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்2/பகுதி1
std7/maths/worksheet2/part1/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்2/பகுதி2 வினாக்கள் 1 முதல் 8 முடிய
View on YouTube
std7/maths/worksheet2/part2/Q9 to Q13/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்2/பகுதி2
std7/maths/worksheet2/part2/Q9 to Q13/7ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்2/பகுதி2 வினாக்கள் 9 முதல் 13 முடிய
View on YouTube
Friday, April 23, 2021
std8/maths/worksheet2/part2/8ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்2/பகுதி2
std8/maths/worksheet2/part2/8ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்2/பகுதி2 வினாக்கள் 12 முதல் 15 முடிய
View on YouTube
std8/maths/worksheet2/part1/8ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்2/பகுதி1
std8/maths/worksheet2/part1/8ம்வகுப்பு/கணிதம்/பயிற்சித்தாள்2/பகுதி1 வினாக்கள் 1முதல் 11முடிய
View on YouTube
std7/maths/worksheet-1/7ஆம் வகுப்பு கணிதம் பயிற்சித்தாள் -1/வினாக்கள் 1 முதல் 20 முடிய
std7/maths/worksheet-1/ 7ஆம் வகுப்பு கணிதம் பயிற்சித்தாள் -1/வினாக்கள் 1 முதல் 20 முடிய
View on YouTube
Thursday, April 22, 2021
8th std /maths/worksheet1/8ம் வகுப்பு -கணிதம் -பயிற்சித்தாள்-1
8ம் வகுப்பு -பயிற்சித்தாள்/ கணக்குகள் 1 முதல் 26 முடிய..
View on YouTube
Tuesday, April 20, 2021
Monday, April 19, 2021
அடுக்குக்குறி விதிகள் / Rules of exponents
அடுக்குக்குறி விதிகள் / Rules of exponents
View on YouTube
Sunday, April 18, 2021
பிதாகரஸ் தேற்றம் / Pythagorean theorem
பிதாகரஸ் தேற்றம் - விளக்கம் Pythagorean theorem Explanation
View on YouTube
Sunday, April 11, 2021
Monday, April 5, 2021
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் எழிய வழிகாட்டி!! *( UPDATED )*
✍️✍️தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் எழிய வழிகாட்டி!! *( UPDATED )*
*🎯🎯தேர்தல் பணியை சிறப்பாக ஆற்றிட உதவும் அருமையான தொகுப்பு!!*👇
📍Election Notes
📍P.O PLAN BOOKLET
📍P.O DIARY
📍PO 1 to PO 3 Tips
*💻அனைத்து பயிற்சி Videos மற்றும் Documents 📘Handbook Materials, Seals,Tally Sheets Etc...*
👉இவை அனைத்தும் ஒரே இடத்தில்...👇
Sunday, April 4, 2021
வாக்குப்பதிவு மைய தலைமை அலுவலர்களாக (PRO) நியமிக்கப்பட்டுள்ளீர்களா...
வாக்குப்பதிவு மைய தலைமை அலுவலர்களாக (PRO) நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கானப் பதிவு இது.
நீங்கள் 2 அல்லது 3 பயிற்சிக்கூட்டங்களிலே இதுவரை கலந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கானப் பணிகளைத் தமிழில் வரிசைக்கிரமமாக எளிமைப்படுத்தித் தருகிறேன்.
இதன்படி, உங்கள் பணிகளை வரிசையாக மேற்கொண்டால் பதட்டமின்றியும் வெற்றிகரமாகவும் அமையும்.
1) உங்களுக்கென்று தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகள் இருந்தாலும், அதை மறந்து ஒரு தேர்தல் அலுவலராக நடுநிலையாக நடந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நேர்மையாகப் பணியாற்றுவது மிக முக்கியம்.. அதேபோல் நீங்கள் நேர்மையாகத்தான் நடந்து கொள்கிறீர்கள் என்ற தோற்றம் பிறர் பார்வையில் எழும்புவது அதைவிட மிக முக்கியம்.
2) உங்களுக்கான வாக்குப்பதிவு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உடன், உங்கள் சக குழுவினரை அடையாளம் கண்டு கொண்டு, அந்த நொடியிலிருந்து ஒரே குழுவாக இயங்க ஆரம்பியுங்கள்.
3) தேர்தலுக்கு முதல்நாள் 1 மணிக்குள் முக மலர்ச்சியுடன் வாக்குப்பதிவு மையத்தைச் சென்றடைந்து, உங்கள் தொலைபேசி எண்ணிலிருந்து தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள App ல் உங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள்..
4) 05.04.21 அன்று 2 மணிக்கு எல்லா அலுவலர்களும் உங்கள் மையத்திற்கு வந்து சேர்ந்துவிட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்டு, Appல் செய்தி அனுப்புங்கள்.
5) உங்கள் மையத்திற்குள் அரசியல் அடையாளங்கள், தலைவர்களின் படங்கள், வாசகங்கள் இல்லாமல் இருக்கிறதா என்பதைப் பாருங்கள்.
6) மையத்திலிருந்து 100 அடி மற்றும் 200 அடித் தொலைவில் அடையாளம் குறிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.
7) சக அலுவலர்களுடன் இணைந்து வாக்குப்பதிவு மையத்தை வாக்காளர்கள் எளிதாக வந்து செல்லும் வண்ணம் வடிவமையுங்கள். அலுவலர்கள், ஏஜெண்டுகள் அமர வேண்டிய இடத்தை முடிவு செய்யுங்கள்.
8 ) வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெற்றுக் கொண்டு, அதனைச் சரி பாருங்கள். பேட்டரியை On செய்தும் Off செய்தும் இயக்கிப் பாருங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களை #எப்படிஇணைப்பதுஎன்பதைஇத்துடன்இணைக்கப்பட்டுள்ள_வீடியோவைப் பார்த்து தெளிவடைந்து கொள்ளுங்கள்..
VVPAT என்ற வாக்களிப்பதை உறுதி செய்யும் அச்சு எந்திரத்தின் மீது நேரிடையாக ஒளி எதுவும் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். VVPAT - பின்பக்க பட்டன் Off position ல் இருக்கிறதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
9) உங்களுக்கான மெட்டல் சீலைத் தனியாக எடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
தேர்தலுக்குப் பிறகு வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்க வேண்டிய படிவம் 17 C போதுமான அளவில் இருக்கிறதா என்பதைச் சரிபாருங்கள்..
உங்கள் தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்களோ அத்தனை எண்ணிக்கையில் அந்தப் படிவம் கைவசம் இருப்பது மிக முக்கியம்.
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அந்தப் படிவம் போதுமான அளவில் நிச்சயம் வழங்கப்படாது.
எனவே இப்பொழுதே போதுமான அளவில் ஜெராக்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். படிவ நகல் இத்துடன் இணைத்திருக்கின்றேன்.
10) உங்கள் மையத்திற்கான ஏஜெண்டுகளுக்கான நியமனக்கடிதம் வந்திருக்கிறதா என்பதைச் சரிபார்த்து, அவர்களுக்கான அடையாள அட்டைகளைத் தயார் செய்து, இரண்டையும் ஒரு கவரிலிட்டு தனியாக வையுங்கள். அவர்களைத் தொடர்பு கொண்டு, மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கே மாதிரி வாக்குப்பதிவிற்கு வரச் சொல்லி நினைவுபடுத்திவிடுங்கள்..
11) அடையாளமிடப்பட்ட வாக்காளர் பட்டியல், சரிபார்ப்பு வாக்காளர்பட்டியல் பெறப்பட்டிருக்கிறதா என்பதைச் சரி பார்த்து எத்தனை வாக்காளர்கள்? ஆண்.. பெண்.. எத்தனை பேர் என்பதை தனியாகக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். (பெரும்பாலான பேர் இதைச் சரிபார்க்க தவறிவிடுவர். வாக்காளர் பட்டியலில் எல்லா பக்கங்களும் வரிசைக்கிரமமாக இருக்கிறதா என்பதைக் கண்டிப்பாகப் பார்க்கவேண்டும். பின் அடிக்கிறபொழுது ஏதேனும் ஒரு தாள் தவறுதலாக விடப்பட்டிருந்தால்.. மறுநாள் மிகவும் சிரமப்படுவீர்கள்)
உங்கள் நிலையப் பகுதிக்குள் பிரபலமானவர்கள் எவரும் வாக்காளர்களாக இருக்கின்றார்களா என்பதை வாக்காளர் பட்டியலைப் பார்த்து வாசித்து தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்..
ஏனெனில் பிரபலஸ்தர்கள் வாக்களிக்க வரும் பொழுது பின்னாலேயே மீடியாக்கள்மீடியாக்கள் வரும் என்பதால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.. அவர்கள் யாருக்கு வாக்களிக்கின்றார்கள் என்பதை எவரும் புகைப்படம் எடுக்க அனுமதித்துவிடாதீர்கள்..
12) Tender votes (கள்ள வாக்கு)
Challenged votes (ஐயத்திற்குரிய வாக்கு) என்பது பற்றி தெளிவாகிக் கொள்ளுங்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை.. ஆனால் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டையைக் கையில் கொண்டு வந்திருக்கின்றார் என்பதற்காக அவரை வாக்களிக்க அனுமதிக்கவேகூடாது. அது தண்டனைக்குரிய குற்றம்.
13) தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள போஸ்டர்களை உரிய இடத்தில் ஒட்டி வையுங்கள்.
14) தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அலுவலரை மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கலாம். அவர்களும் வாக்காளர்கள் எந்தக்கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை.
15) 06.04.21 அன்று காலை 5 மணிக்கே ஆயத்தமாகுங்கள். வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தயார் செய்து, ஏஜெண்டுகளை உள்ளே அனுமதித்து, அடையாள வில்லை அவர்களுக்கு வழங்கி, 6.30 மணிக்குள் மாதிரி வாக்குப்பதிவை நடத்திக் காட்டுங்கள்.
Clear
Ballot
Close
Total
Result
Clear
என்ற வரிசையில் இயந்திரத்தை இயக்குங்கள்.
குறைந்தபட்சம் 50 மாதிரி வாக்குகளைப் பதியச் செய்யுங்கள்.. அதற்கான நேரமிருக்குமா என்று பலரும் கவலைப்படுவதைப் பார்க்கிறேன்..
ஒரு வாக்குப்பதிவிற்கு 10 நொடிகள்தான்.. எனில் 50 பதிவிற்கு 500 நொடிகள்.. அதாவது கிட்டத்தட்ட 8 முதல் 10 நிமிடங்கள் வரைதான் ஆகும்..
அதன் பிறகு சீல் வைப்பதற்கு தனியே 10 நிமிடங்களே அதிகம்..
உங்களுக்கோ 1 மணி நேர அவகாசம் இருக்கிறது..
எனவே அது பற்றி கவலைப்படாதிருங்கள்.. பதட்டமும் அடையாதீர்கள்..
VVPAT டிரேயில் உள்ள சிலிப்புகளை வெளியே எடுத்து அதில் Mock poll ballot sheet என்ற ரப்பர் முத்திரையைப் பதிவு செய்து, அதையும் சீலிட்டு அதற்குரிய பையில் பத்திரப்படுத்தி.. அதை ஒரு டப்பாவில் அடைத்து சீல் வைத்து, முகவர்களிடம் கையெழுத்து பெற்று, பத்திரமாக வைத்திடுங்கள்..
#மிகமுக்கியம்..
Mock poll முடிந்த உடன் அனைத்தும் சரிபார்த்தல் முடிந்த பின்னர் மறுபடியும் Total பட்டனை அழுத்தவும். Total vote 0 என உள்ளதா என சரி பார்த்து விட்டு பின் polling ஆரம்பிக்கவும்.. இது மிக முக்கியம். ஏனெனில் நிறைய இடங்களில் mock poll ஓட்டை clear பண்ணாமல் polling ஆரம்பித்து விட்டு சிரமப்படுகின்றனர்.. (எக்காரணத்தை முன்னிட்டும் Close பட்டனை தொட்டுவிடாதீர்கள்)
Mock poll certificate ல் வந்திருக்கும் முகவர்களிடம் கையெழுத்து பெற்றுக் கொள்ளுங்கள்.
எந்திரத்தை சீல் செய்யுங்கள்.
Green seal
Special tag
Strip seal
Address tag
எல்லாவற்றிலும் நீங்களும் கையெழுத்திட்டு, முகவர்களிடமும் கையெழுத்து பெற்று அதன்பின்னர் பொருத்துங்கள்.
6.30 மணிக்கு Mock Poll Completed என App ல் பதிவு செய்யுங்கள்.
16) சரியாக 7 மணிக்கு வாக்காளர் ரகசியம் பேணுவது சார்ந்த உறுதிமொழி எடுத்து வாக்குப்பதிவைத் துவக்குங்கள். VVPAT மற்றும் Control unit யை On செய்து கொள்ளுங்கள்..
17) 7 மணிக்கு தேர்தல் துவங்கிவிட்டது என்பதை App ல் பதிவிடுங்கள்..
18) அதன்பிறகு கீழ்க்கண்ட நேரங்களில் எத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என பதிவு செய்யுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை Evm total மற்றும் வாக்காளர் பட்டியலில் tick செய்த மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையைச் சரிபார்க்க வேண்டும்
9 மணி : _ _ _
11மணி: _ _ _
1 மணி : _ _ _
3 மணி : _ _ _
3.30. : _ _ _
4. : _ _ _
4.30. : _ _ _
5. : _ _ _
5.30. : _ _ _
6. : _ _ _
6.30. : ___
7.00. : ___
வாக்குப்பதிவை முடிக்க வேண்டியநேரம் இது.
அவ்வப்பொழுது வாக்குப்பதிவு மையத்திற்கு வெளியே சூழ்நிலையைக் கவனியுங்கள்..
மாலை 7 மணிக்கு, வரிசையில் வாக்காளர்கள் நின்றால், வரிசையில் நிற்கும் கடைசி நபரிடமிருந்து வரிசை எண்ணிடப்பட்ட டோக்கனை வழங்குங்கள். அவர்களை மட்டும் வாக்களிக்க அனுமதித்து விட்டு வாக்குப்பதிவை நிறுத்துங்கள்.
இயந்திரத்தில் CLOSE பட்டனை அழுத்த மறந்துவிடாதீர்கள். முன்னதாக TOTAL சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
19) முதியோர்கள், கைக்குழந்தை வைத்திருக்கிறவர்கள், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வந்து வாக்களிக்க வசதி செய்து கொடுங்கள்.
20) BATTERY யை OFF செய்யுங்கள். சீல் வையுங்கள். இணைப்புகளைத் துண்டியுங்கள்.
21) Agent களுக்கு வாக்குப்பதிவு கணக்குச் சீட்டு வழங்குங்கள்.
22) எல்லா நிகழ்வுகளையும் PROCEEDING OFFICER DIARYல் அவ்வப்பொழுது பதிவு செய்து வாருங்கள். அதுதான் பின்னால் பிரச்சனைகள் எதுவும் எழும்பினால் உங்களைக் காப்பாற்றும்.
7.00 மணிக்கு கீழ்க்கண்ட பதிவுகளை அனுப்புங்கள்.
VM _ _ _
VF _ _ _
VT _ _ _
23) எல்லாப் படிவங்களையும் தயார் செய்துவிட்டு, மண்டல அலுவலர் வந்ததும் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, ரசீது பெற்றுக்கொள்ளுங்கள். (மெட்டல் சீல் மிக முக்கியம்)
24) உங்களோடு பணியாற்ற வந்திருக்கும் பெண் அலுவலர்களுக்கும் / பெண் காவலர்களுக்கும் நீங்கள்தான் மூத்த சகோதரர் என்பதை மனதில் கொண்டு, தேர்தலுக்குப் பிறகு அவர்கள் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் செல்ல போதுமான வசதிகளும் பாதுகாப்பும் இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்..
அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுங்கள்..
மாதவிடாய் காலத்தில் அவர்களில் எவரேனும் இருக்கலாம்..
அவர்களில் எவருக்கேனும் நீரிழிவு நோய் இருக்கலாம்..
கைக்குழந்தையை வீட்டில் விட்டு வந்திருக்கலாம்..
எல்லாத் தேவைகளையும் குறிப்பால் உணர்ந்து உதவி செய்யுங்கள்..
அவர்கள் நம் சகோதரிகள்..
25) முதல்நாளே தேர்தல் அலுவலர்களுக்கான மதிப்பூதியத்தைக் கணக்கிட்டு, உங்கள் கைப்பணத்திலிருந்து கவர் தயார் செய்து பிரித்து வைத்துவிட்டீர்கள் என்றால்.. தேர்தல் முடிந்தபிறகு சில்லறைக்கு என்ன செய்வது .. எப்படிப் பிரித்துக் கொடுப்பது என்ற கவலை தோன்றாமல் இருக்கும்..
அவ்வளவுதான்.. பதட்டமில்லாமல் இயங்குங்கள்..
எந்த முறைகேட்டையும் நீங்கள் செய்யாதிருங்கள்..
எந்த முறைகேட்டையும் அனுமதிக்காதிருங்கள்..
எல்லா பணிகளும் நிறைவு பெற்ற பிறகு,
Agent களுக்கும் சக பணியாளர்களுக்கும் நன்றி சொல்லி கை குலுக்கி சந்தோஷமாய் வெளியே வாருங்கள்.
Saturday, April 3, 2021
2021 தமிழ் நாடு - சட்டமன்றத் தேர்தல் வழிகாட்டி
2021 தமிழ் நாடு - சட்டமன்றத் தேர்தல் வழிகாட்டி
ஒரே பக்கத்தில் அனைத்து தகவல்கள்...
தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான வழிகாட்டி( PO,P1,P2,P3 ) கீழ்கண்ட தலைப்புகளை சொடுக்குவதன் மூலம் தகவல்களைப் பெறலாம்.
உறைகள் பற்றி (Covers Arrangement)
தேர்தல் நடத்தும் அலுவலர் கையேடு
கனம் மற்றும் கனமூலம் Cube and Cube root
கனம் கண்டறிதல் /கனமூலம் கண்டறிதல் Find the cube and cube roots
View on YouTube
Friday, April 2, 2021
பின்னங்களின் கழித்தல் / Subtraction of fractions
பின்னங்களின் கழித்தல் -ஓரின மற்றும் வேற்றின பின்னங்களின் கழித்தல் Subtraction of fractions
View on YouTube