Friday, January 31, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 01.02.20

திருக்குறள்


திருக்குறள் : 369

அதிகாரம் : அவாஅறுத்தல்

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

பொருள்:

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

பழமொழி

Your Actions will nail You

தன் வினை தன்னைச் சுடும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

மோசமான சூழல் ஏற்படின் சாதகமான சூழலுக்காக காத்திருப்பு அவசியமாகிறது.

------- சாக்ரடீஸ்

பொது அறிவு

1.தமிழ்நாட்டில் கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையம் எந்த இடத்தில் அமைந்துள்ளது ?

 ராணிப்பேட்டை.

2. தமிழ்நாடு அரசின் சின்னமான கோபுரம் எந்த ஊரில் அமைந்துள்ளது?

 ஸ்ரீவில்லிபுத்தூர்.

English words & meanings

Felinology – study of felines பூனை பேரினத்தை சார்ந்த விலங்குகள் குறித்த அறிவியல்.

Feeble minded - mentally weak. மன உறுதியற்ற

ஆரோக்ய வாழ்வு

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகத்தில் பொழிவு அதிகரிக்கும்.

Some important  abbreviations for students

diag. - diagram. 

disc. - discovered

நீதிக்கதை

திருக்குறள் கதை

 குறள் : தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.

குறள் விளக்கம் : ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். குறளுக்கான கதை :
👤🔫 அது ஒரு வனப்பகுதி. அங்கு பிராணிகளிடம் பிரியமுள்ள ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒருநாள் காட்டிற்கு வேட்டைக்கு போனான். அங்கு அழகிய புள்ளிமான் ஒன்றை பிடித்து வந்தான். அவன் மானின் அழகிய தோற்றத்தை கண்டு அதை வீட்டில் வளர்த்து வந்தான். ஒருநாள் மான் மாயமாய் மறைந்து விட்டது. ஆனால் அது ஓடவில்லை. காணாமல் போய்விட்டது. அவனுக்கோ ஆத்திரம். இந்த மானை யார் பிடித்து போயிருப்பார்கள்? அவன் எங்கே இருந்தாலும் அவனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் கோபமாக உருவெடுத்தது.
👤🔫 உடனே கடவுளை துதித்தான். கடவுளும் வந்தார்...! பக்தா என்னை அழைத்ததின் காரணம் என்ன? என்று கடவுள் கேட்டார். அறிவாளி பக்தன் என்ன கேட்க வேண்டும். நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மான் எனக்கு வேண்டும் என்று தானே கேட்டிருக்க வேண்டும். ஆனால் கேட்கவில்லை. கோபம் கண்ணை மறைத்தது. ஆனால் அவன் தெய்வமே! நான் ஆசையாய் ஒரு மான் வளர்த்தேன். அந்த மானை காணவில்லை. அந்த மானை திருடியவன் யாராக இருப்பினும் அவன் என் முன்னே வரவேண்டும். அவனை என் கோபம் தீர அடிக்க வேண்டும் இதுதான் பக்தன் கேட்ட வரம்.
 👤🔫 வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தரும் கடவுள் பக்தனின் கோரிக்கைக்கு தயங்கினார். பக்தா.. உன் மானை திருப்பி தருகிறேன். அது காணாமல் போனதற்கு காரணமானவர் யார் என்று கேட்காதே என்று கூறினார். அவனோ இல்லை.. என் மனம் எவ்வளவு கலங்கி இருக்கிறது என்பது எனக்குத்தான் தெரியும். அதனால் அவனை பழிவாங்காமல் விடமாட்டேன், என்று பிடிவாதமாக கேட்டான். சரி.. நீ கேட்கும் வரத்தை தருகிறேன். பின்னால் என் மீது வருத்தப் படக்கூடாது தந்தேன் வரம். உன் மானை திருடி சென்றவர் யாரோ, அவர் உன் பின்னால் நிற்கிறார். தண்டித்து கொள். என்று வரத்தை தந்த கடவுள் மறைந்து விட்டார். 👤🔫 பக்தன் திரும்பி பார்த்தான். அங்கே நின்றது சிங்கம். பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் பிடித்து கொண்டது. கை கால் எல்லாம் நடுங்க தொடங்கியது. ஓட தொடங்கினான். கடவுளே என்னை காப்பாத்து என்று கத்தினான். கடவுள் சிரித்தார்... அவன் கதை முடிந்தது. இங்கே அவன் அறிவு வேலை செய்யவில்லை. ஆத்திரம் கடைசியில் அழிவை தந்தது.
நீதி : ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

இன்றைய செய்திகள்

01.02.20

* கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் அவசர நிலையை அறிவித்து உள்ளது.

* சீனாவில் இருந்து தமிழகம் வந்துள்ள 242 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

* ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற அதன் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து ஐரோப்பிய யூனியனில் இருந்து  நேற்று பிரிட்டன் வெளியேறியது.

* இந்த ஆண்டுக்கான உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

* நியூசிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

* ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கிளப்புகளில் ஒன்றான ஸ்காட்லாந்தின் ரேஞ்சா்ஸ் எஃப்சி அணியில் ஆட இந்திய வீராங்கனை நகன்கோம் பாலதேவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா்

Today's Headlines

🌸The World Health Organization has declared a worldwide emergency on the spread of coronavirus.

🌸 Minister Vijayabaskar says that 242  Tamilians who returned  ​​from China are not affected by coronavirus

 🌸Britain's exit from the European Union has been approved by its parliament so Britain left the European Union yesterday.

 🌸Rani Rampal, captain of the Indian hockey women's team, has been selected for the World's best player of the Year award.

🌸 India won the Super Over in the 4th ODI against New Zealand.

 🌸 Indian player Nankom Baladevi has signed  to play for Scotland's Rangers , one of Europe's leading football clubs.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2GSYImx

MICE TEST - January 2020

 அன்பர்களுக்கு வணக்கம்....
            நமது தினசரி தேர்விற்கு நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவிற்கு நன்றிகள்..... இம்மாதம் முழுவதும் வந்த தேர்வில் இருந்து சில கேள்விகளை தொகுத்து இம்மாதத்திற்கான தேர்வினை தயாரித்து உள்ளோம்.... இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளிக்கே பரிசுகள் அனுபபி வைக்கப்படும்..... மாணவ செல்வங்களே தயாரா...... !!!!


இன்றைய மாதத்தேர்வில் பங்கு பெற கீழ் உள்ள லிங்கை பயன்படுத்தவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfschk_PxV4IKWb9OpyXMSozaF1a7-72ZrSdeir44KEP87C8A/viewform?usp=sf_link

_________________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

1. a) ஜனவரி 29
2. c) ஈட்டி எறிதல் ( 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்)
3. b) பெங்கால் கெஜட்
4. d) கர்நாடகா
5.  c)  பங்கஜ் அத்வானி

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. A.N. ஷிஹாப், 6-ஆம் வகுப்பு
     மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்.

2. S.கனிஷ்கா, 8-ஆம் வகுப்பு
3. P. தனுஷியா, 8-ஆம் வகுப்பு
4. B. லக்‌ஷனஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
5. K.விஷாலினி, 8-ஆம் வகுப்பு
6. D.நோயல்சோனா, 8-ஆம் வகுப்பு
7. R. சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
8. A.லட்சுமி வாசினி, 8-ஆம் வகுப்பு
9. A.ஹரிபிரியா, 9-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்......

10. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு
   St. சோபியா நர்சரி & துவக்கப்பள்ளி, திருச்சி

பல நாட்களுக்கு பிறகு வெற்றி பெற்றுள்ள எம் அரசுப் பள்ளி மாணவர் ஷிஹாப்பிற்கும் , தொடர்ந்து வெற்றி பெற்று வரும் 5-ஆம் வகுப்பு சுட்டி தமன்னாவிற்கும் சிறப்பு பாரட்டுகள்.......... திருச்சியின் சாதனை மாணவிகளுக்கு வாழ்த்துகள்......





from covaiwomenict https://ift.tt/38XqOJh

Thursday, January 30, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 31.01.20

திருக்குறள்


திருக்குறள் : 368

அதிகாரம் : அவாஅறுத்தல்

"அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

பொருள் :

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

பழமொழி

Good swimmers are sometimes drowned.

யானைக்கும்  அடி சறுக்கும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

அதீத வேலை செய்யும் போது ஏற்படாத களைப்பு அதீத கவலைப்படும் போது ஏற்படும்.எனவே கவலையை களையெடுங்கள்.

--------ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு

1. இந்தியாவின் முதல் தனியார் ரேடியோ எஃப். எம்மின் அலைவரிசை நிலையத்தின் பெயர் என்ன?

ரேடியோ சிட்டி (1.7.2001ல் துவங்கப்பட்டது)

 2.பிஸ்ஸா (pizza) என்ற சிற்றுண்டி எந்த நாட்டில் தோன்றியது?

இத்தாலி

English words & meanings

Endemiology – study of local diseases. உள்நாட்டு நோய்கள் குறித்த படிப்பு.

 Edifying - providing moral or intellectual instruction. ஒருவரை மேம்படுத்தும் காரியம்

ஆரோக்ய வாழ்வு

சிறுதானியங்கள் ட்ரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலத்தை கொண்டுள்ளதால் இது பசியின்மையைக் குறைத்து சரியான எடையை நிர்வகிக்க உதவுகிறது.

Some important  abbreviations for students

cont. -  containing,    content, continue

crit. -   criticism

நீதிக்கதை

குருவிற்கு நேர்ந்த சோதனை

குறள் :
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

விளக்கம் :
யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.

கதை :
ஒரு துறவி அவருக்கு ஐந்து சீடர்கள், ஒரு நாள் அவர் அணிந்து இருந்த காவி உடை கிழிந்து விட்டது, அதனை தைக்க வேண்டி ஐந்து சீடர்களிடமும் காசு கொடுத்து ஊசி வாங்கி வரசொன்னார்.

அந்த ஐந்து சீடர்களும் இதுவரை ஊசியை பார்த்தது இல்லை. கடைக்கு சென்றார்கள் ஊசி கேட்டார்கள், அவர்களும் கொடுத்தார்கள். ஆனால் அது ஊசி தான் என்பதை அவர்கள் நம்பவில்லை, நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று வேறு கடைக்கு சென்று விட்டார்கள். அங்கும் அதையே கொடுத்தார்கள்.

இறுதியில் நீங்கள் எல்லாம் எங்களை ஏமாத்த நினைகிறீர்கள் என்று கூற, அந்த கடைக்காரன் இவைகள் முட்டாள் என புரிந்து கொண்டு, சீடர்களே உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டார்கள், நடந்ததை கூற, சரி அதை எப்படி நீங்கள் ஊசி இல்லை என சொல்கிறீர்கள் என கடைக்காரன் வினவினான்.

ஐவரும் சொன்னார்கள் எங்கள் குரு ஐந்து பேரை அனுப்பி ஒரு ஊசி வாங்கி வர சொன்னார். கண்டிப்பாக அது மிகவும் பெரியதாக தான் இருக்கும் என கூற, அவரும் ஒரு பெரிய பனை மரத்தை காண்பித்து இது தான் ஊசி தூக்கி கொண்டு போங்கள் என் கூறிவிட்டு அதற்குரிய காசுகளை வாங்கிகொண்டார்.

நீதி :
ஒருவரின் வலிமையை அறியாமல் அவரை நம்பி ஒரு செயலை ஒப்படைத்தல் மிகவும் தவறு.

வெள்ளி
சமூகவியல்

மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats)



இந்தியதுணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு
இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது.உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.

இன்றைய செய்திகள்

31.01.20

∆ கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா 23-வது இடத்தில் உள்ளது.

∆ இலங்கை பிரதமர்  மகிந்தா ராஜபக்சே அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

∆ கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக சீனாவுடனான எல்லையை ரஷ்யா மூடியுள்ளது.

∆ சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு கடந்த நிதி ஆண்டில் (2018-2019) ரூ.715 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

∆ உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

∆ ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

Today's Headlines

🌸India ranks 23rd in the list of countries which are at risk of coronavirus transmission.

 🌸Sri Lankan Prime Minister Mahinda Rajapakse to visit India next week.

 🌸Russia has closed its border with China as an attempt to prevent the spreading of the corona virus.

 🌸 Study report states that there is a loss of  Rs 715 crores for Chennai metro railway station in the last financial year (2018-2019).

 🌸Chennai city police commissioner A.K Viswanathan said that Chennai city police is taking steps to make Chennai ,the safest city in the world.

 🌸Djokovic stepped on  to the final after defeating Roger Federer at the Australian Open.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2U8eYrn

MICE TEST - 30.01.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:55
1.இந்தியாவில் "செய்தித்தாள் தினம்" எப்பொழுது கொண்டாடப்படுகிறது.?

a) ஜன.29
b)ஜன.30
c)ஜன.31
d)ஜன.27


2..நீரஜ் சோப்ரா என்ற இந்தியர் எந்த விளையாட்டு வீரர்?

a) பளு தூக்குதல்
b) சதுரங்கம்
c)ஈட்டி எறிதல்
d)தடகளம்

3.இந்தியாவில் வெளிவந்த முதல் செய்தித்தாள் எது?

a) டைம்ஸ் ஆஃப் இந்தியா
b) பெங்கால் கெஜட்
c) மும்பை மிர்ரர்
d) டெக்கான் ஹெரால்டு

4.புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பந்திப்பூர் தேசிய பூங்கா உள்ள மாநிலம் எது?

a)  AP
b) KL
c) TN
d)KN

5.Senior National Billiards Championship போட்டியில் பட்டம் வென்றவர் யார்?

 a)Saurav Kothari
 b) Dhvaj Haria
c)Pankaj Advani
d)Feet Sethi

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்....

1a. d) both b & c
2. a) நமீபியா
3. b) நெதர்லாந்து
4. a) Man vs wild நிகழ்ச்சியில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் ரஜினிகாந்த்.
5. a) ஜவான் புலி, காஸ்பியன் புலி
6. d) ஹரகேலா ஹஜப்பா ( கர்நாடகா)

நேற்று சரியான விடையினை பதிவிட்டவர்கள்

1. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
2. M.செல்வபாரதி, 8-ஆம் வகுப்பு
3. R.சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்.

4. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு, St.சோபியா நர்சரி & ஆரம்பப் பள்ளி, திருச்சி.

அனைவருக்கும் வாழ்த்துகள்.... திருச்சி மாவட்டம் தான்  அதிக எண்ணிக்கையிலான பதிவுகளையும், அதிக எண்ணிகையிலான வெற்றியாளர்களையும் கொடுத்து வருகறது.... இதற்கு தூண்டுகோலாய் இருக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துகள்


from covaiwomenict https://ift.tt/2GAbjuy

Wednesday, January 29, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 30.01.20

திருக்குறள்


திருக்குறள் : 367

அதிகாரம் : அவாஅறுத்தல்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.

பொருள்:

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

பழமொழி

Little strokes fell great oaks.

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

ஒருவரது வாழ்வியல் இன்பங்கள் அவரது சுய நடவெடிக்கைகள் மூலம் கிடைக்கிறது....

------விவேகானந்தர்.

பொது அறிவு

ஜனவரி 30- இன்று தியாகிகள் தினம்

1. தியாகிகள் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?

மகாத்மா காந்தி மறைந்த தினம் . 

2. தியாகிகளின் இளவரசன் என்று போற்றப்படுபவர் யார்?

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

English words & meanings

Desmology – study of ligaments. தசை நார் குறித்த படிப்பு மற்றும் அறிவியல்.

 Dauntless - shows fearlessness. எதற்கும் அஞ்சாத.

ஆரோக்ய வாழ்வு

சிறுதானியங்களில் பசையம் (குளுட்டன்) எனப்படும் ஒட்டும் தன்மை கொண்ட பசை போன்ற பொருள் காணப்படாத காரணத்தினால் செரிமானத் தன்மையை அதிகரிக்கிறது.

Some important  abbreviations for students

CASE - Commission for Alternative Sources of Energy

CCS - Cabinet Committee on Security

நீதிக்கதை

குரங்கை நம்பிய தோட்டக்காரன்

குறள் :
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

விளக்கம் :
அறிவில்லாதவனை அவனிடத்துள்ள அன்பு காரணமாகத் தேர்ந்தெடுத்தது பதவியில் அமர்த்துவது, அரசனுக்கு அறியாமை பலவற்றையும் தரும்.

கதை :
ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும்.

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன்.

வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள்.

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல்.

நீதி :
அறிவில்லாதவனிடம் ஒரு செயலை ஒப்படைக்கக் கூடாது.

வியாழன்
அறிவியல் & கணினி

மழை காடுகள்


 * இவை வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பிரதேசங்களில் காணப்படும்.
* உலகின் தாவரங்கள் மற்றும் விலங்குகள் 50% இங்கு தான் காணப்படுகின்றன ஆனால் இவை பூமியில் 2% இடத்திலேயே காணப்படுகின்றன.
* அண்டார்டிகா கண்டத்தில் மட்டுமே மழைக்காடுகள் காணப்படுவதில்லை.

இன்றைய செய்திகள்

30.01.20

* மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நேரு யுவகேந்திரா சங்கதன் சார்பில் 12-வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி சென்னையில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது.

* வெளிமாநிலத்தவர்களுக்கு உரிய ஆவணங்கள் இன்றி சிம்கார்டு விற்கும், விற்பனையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

* கொரோனா வைரஸ் பாதிப்பினால்  சீனாவுக்கு விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

* ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில்நோவக் ஜோகோவிச், ரோஜர்பெடரரும், மகளிர் பிரிவில்ஆஷ்லே பார்டி, சோபியாகெனினும் அரைஇறுதிக்கு முன்னேறினர்.

*  நியூசிலாந்துக்கு எதிராக பரப்பரப்பாக நடைபெற்ற 3- வது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் இரு சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற வைத்தார் ரோஹித் சர்மா. இதன் மூலம்  டி20 தொடரை வென்றது இந்தியா அணி.

Today's Headlines

🌸Central Ministry of Internal Affairs, Central Ministry of Youth Affairs, Ministry of Games and Nehru Yuvakendra Sankethan organises 12th Tribal Junior Exchange Programme to be commenced in Chennai on February 1st.

🌸Erode police department has warned that case will be filed against those who buy and sell sim cards  without proper records.

🌸Flights to China have been stopped due to the corona virus being spread.

🌸In Australian Open tennis, Novak djokovic and Roger Federer from the men's side and Ashleigh barty and Sofia kenin from the women's side progressed to semi-finals.

🌸Rohith Sharma has hit two sixes in super over of the third T-20 match against Newzealand and made India win the T-20 series.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2GE5z2J

MICE TEST - 29.01.20

 மைத்துளி வணக்கம்


MICE TEST:54

1. தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள்அமைய உள்ள மாவட்டம் எது?

 a)கோவை
 b) அரியலூர்
c) கள்ளக்குறிச்சி
d) both b) & c)

2.இந்திய சிறுத்தைகள் அழிவின் விளிம்பில் உள்ளதால்,பின்வரும் எந்த நாட்டிலிருந்து ஆப்பிரிக்க சிறுத்தைகளை இந்தியா கொண்டு வந்து நம் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றாற் போல் வளர்க்கும் சோதனை திட்டத்திற்கு  நீதி  மன்றம் அனுமதி அளித்துள்ளது?

a) நமீபியா
b)மொஸாம்பியா
c)அலாஸ்கா
d) கானா

3.Mark Rutte என்பவர் எந்த நாட்டு பிரதமர்?

a) பிரான்ஸ்
b)நெதர்லாந்து
c)இத்தாலி
d)ஆஸ்திரேலியா

4.பின்வருவனவற்றுள் ஒரு  தகவல் தவறானது.அது எது?

a)டிஸ்கவரி சேனல் நடத்தும் "Man Vs Wild" என்ற  நிகழ்ச்சியில் நரேந்திர மோடி அவர்களுக்குப் பிறகு பங்கேற்கும் 3ஆவது  இந்தியர் ரஜினி காந்த் ஆவார்.

b) அமெரிக்காவிற்கான இந்திய தூதராக  தரன்ஜித் சிங் நியமனம்

c) நம் நாட்டில் Maruthi Suzuki  நிறுவனம் கார் தயாரிப்பில் முதலிடம்

d) சர்வதேச செஸ் போட்டியில்,7 ஆவது சுற்றில் இந்திய  இளம் வீரர் ப்ரக்னானந்தா தோல்வி.

5.உலகளவில் உள்ள 9 வகையான புலி இனங்களில் முற்றிலும் அழிந்து விட்டவை எவை?

a) ஜவான் புலி,காஸ்பியன்  புலி

b) சுமித்ரன் புலி,சைபீரியன் புலி,பாலி புலி

c) வங்கப் புலி, இந்தோ-சீனப் புலி

d) தென் சீனப் புலி,மலேசியன் புலி

6.ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வதால் இந்தாண்டு "பத்ம ஸ்ரீ" விருது பெறும்   ஏழை ஆரஞ்ச் பழ வியாபாரி யார்?

a) முகமது செரீப்(உ.பி)
b) சுந்தரம் வர்மா(இராஜஸ்தான்)
c) ரவி கண்ணன்(அஸ்ஸாம்)
d)ஹரே கலா ஹஜப்பா(கர்நாடகா)

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________


 நேற்றைய சரியான விடைகள்

Ans for MT:53
1. b) தான்யா ஷெர்ஜில்
2. b) M.777, ultra light howitzer, k.9, vajra - T
3. a) மிச்செல் ஒபாமா
4. c) Billie Eillish ( 18 yrs, she is the youngest artist to receive the Grammy award)
5. c) காய்கறிகளின் அரசன் கத்தரிக்காய்

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்......

1. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
2. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
3. S.ரூபதரணி, 8-ஆம் வகுப்பு
4. B.லக்‌ஷனா ஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
5. M.ரோஷிணி சகாய மேரி, 8-ஆம் வகுப்பு

அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்.

6. P.தமன்னா, 5-ஆம் வகுப்பு,
   St. சோபியா நர்சரி& தொடக்கப்பள்ளி, திருச்சி...


அனைவருக்கும் வாழ்த்துகள்.... 5-ஆம் வகுப்பு தமன்னாவிற்கு சிறப்பு பாராட்டுகள்.....


from covaiwomenict https://ift.tt/3aOE84g

Class room English for primary Teachers

CLASS ROOM ENGLISH


1. GREETINGS:

➢  Good morning children.
➢  Good afternoon children.
➢  Good evening children.

➢  How are you children?
➢  We are fine. thank you sir.
➢  How are you sir?
➢  I am also fine thank you.
➢  What day is it today?
➢  What is the date today?

2. CHECKING ATTENDANCE:

➢  Please listen to me now I am going to call your names.
➢  Now I will take your attendance.
➢  OK. Listen while call your names.
➢  Say your names for attendance.
➢  Let me take your attendance.
➢  Answer your attendance.
➢  Ravi, can you give me your attendance.
➢  Were you present yesterday?
➢  Is Rani absent today?
➢  Where are Padma and Ravi?
➢  Look here

3. PHYSICAL CONDITIONS IN THE CLASSROOM:

➢  Come to the blackboard.
➢  Write your name on the blackboard.
➢  Write the date on the blackboard.
➢  Open the door.
➢  Shut the window.
➢  Close the door.
➢  Go back to your seat.
➢  Please listen to me carefully.
➢  Come forward.
➢  Sit in the first row.
➢  Stand up.
➢  Bring me a piece of chalk. 
➢  Please turn on the fan.
➢  Please turn off the fan.
➢  Can any one rub the black board?
➢  Form in a group.
➢  Come and sit Besides Ravi.
➢  Move a little bit.
➢  Don’t move.

4. CONTROL AND DISCIPLINE:

➢  Listen, don’t say anything.
➢  Don’t make a noise.
➢  Please keep quite.
➢  Look here.
➢  Look at the blackboard.
➢  Please listen to me carefully.
➢  Stop talking.
➢  Will you stop talking?
➢  Write with a pencil/pen.
➢  Avoid eating in the class.
➢  Come and sit here.
➢  Stand up.
➢  Raise your hand.
➢  Stop doing that.
➢  Get out.
➢  Wait outside.
➢  Don’t say like that.
➢  Stay here.
➢  Go back.
➢  Shut your mouth first.
➢  I will tell your parents/H.M.
➢  Just listen.
➢  Stretch your hand.
➢  Come to me.
➢  Listen what I say.
➢  Be silent.
➢  Talk politely.
➢  Don’t wander in the veranda.
➢  Come here.
➢  Go to the play ground.
➢  Please pay your attention.
➢  Stand in a line.
➢  Give her some space. 
➢  Don’t call her by her name.
➢  Don’t see badly.

➢  Don’t say badly.
➢  Do your work.
➢  Don’t give us disturbance.
➢  Don’t come late to school.
➢  Observe carefully.
➢  Try to come in time.
➢  Don’t be silly in the class.
➢  Go silently.
➢  Who is making a noise?
➢  What are you doing in the last?
➢  What are you eating in the class?
➢  Rani, are you sleeping in the class?
➢  Don’t you do homework in class?
➢  You must come to school before.
➢  You mustn’t come late.
➢  Why are you late?
➢  Come in.
➢  Get in.
➢  Come inside.
➢  Go to your class room.

5. THE BEGINNING OF THE LESSON:

➢ What did I say yesterday?
➢ Where did we stop the lesson yesterday?
➢ Who can say what I did yesterday?
➢  Who knows it?
➢  Can anyone read what I have written in the blackboard?
➢  Have brought your workbooks?
➢ Can anyone say what I did yesterday?
➢  What Ravi, what happened to you?
➢  What happened to you?
➢  In the morning class, I told you a story now I would like to continue.
➢  Now I am going to draw some thing on the blackboard.
➢  Watch it carefully.
➢  Have you done the homework?
➢  Show me your home work one by one.
➢  Why haven’t you done your homework?
➢  Ravi, come here write the date on the blackboard. 
➢  Show me your copy writing notebook.
➢  Take out your notebooks.
➢  Open your workbook page no.14.
➢  We discussed it yesterday.


6. While teaching the lesson:
➢  Can you see the picture?
➢  Can anyone answer this question?
➢  Have you understood it?
➢  Can I clean the blackboard?
➢  Can you give me an example?
➢  What is the picture of?
➢  What I mean……….
➢  At what time……….
➢  Which one …………..
➢  What am I telling is?
➢  Let me say first.
➢  Which ever is less ...
➢  Which ever is more.....
➢  What ever it may be.
➢  As for my knowledge.
➢  In other words.
➢  In the mean while.
➢  In the mean time.
➢  Now we are going to read these words.
➢  It's very important.



CLASSROOM  INSTRUCTIONS
➢  Has the bell rung?
➢  Has the bell gone?
➢  Read aloud.
➢ 

Read silently.
➢  Write quickly.
➢  Please say it again.
➢  Say it aloud after me.
➢  Don’t say it after me.
➢  Come and meet me after the class.
➢  Say answers this/these question/questions.
➢  Is it very clear?
➢  Is there any more doubt?
➢  Don’t say in group together.
➢  Follow me.
➢  Write down. 
➢  Take down.
➢  Don’t write, listen to me.
➢  Go and blow your nose.
➢  Underline the words with the pencil.
➢  Tell me what happened actually.
➢  It’s.... it is.
➢  Let us begin.

7. Ending the lesson:
➢  Take this as homework.
➢  Do your homework at home.
➢  Let us stop the lesson here.
➢  Listen to me, you have a class tomorrow.
➢  You will be here by 8 am tomorrow.
➢ Time is up, close your books, you may go home.

8. At the examination hall:
➢  Don’t disperse the answers.
➢  Don’t exchange answers. / Take out cheat sheets if any.
➢  Write quickly.
➢  Stop writing.
➢  Sit right.
➢  Tie your papers then write.
➢  Time is up.
➢  Check your mistakes.
➢  Please write your register number in the box given.
➢  Please write your name on your answer sheet.
➢  Write the question number in the margin.
➢  Try to write bold letters.
➢  Keep your papers on the table.
➢  Don’t peep on others papers while writing exam.
➢  Give back your answer papers.
➢  Think before you write.
➢  Don’t fold your answer sheets.
➢  Does anybody want additional sheets?
➢  Now I am closing  giving additional sheets.
➢  Stop writing.
➢  Don’t write here.
➢  Read instructions before writing.
➢  You, first go through the question paper.
➢  If you have any cheat slips, give to me.
➢  Don’t copy from others.

9.At the prayer Assembly:
➢  Those who came late, stay here.
➢  Those who are not in uniform stay here.
➢  After disperse of the prayer go to your class rooms in a line.
➢  This is Mr.Ravi would like to say a few words about the significance of
teachers day.
➢  I would like to say a good quotation.
➢  Form in a line in class wise.
➢  Here is an important announcement, please listen to me carefully.
➢  All of you go to your classes in a line after the prayer.
➢  Be silent.

10. While conducting special occasions:
➢  All of you sit calmly. sweets will be distributed.
➢  Come forward
➢  While meeting is going on, don’t make a noise.
➢  Ravi, come up  the stage and sing a song.
➢  Please give him a big hand.
➢  The first prize goes to Ravi,come forward and receive your prize.
➢  I request our honorable H.M to address this occasion.
➢  Its my pleasure and privilege on this happy occasion.
➢  I am very happy to be associated with all of you.
➢  I request Mr K.V.R.Rao, our English language teacher to speak on this occasion.
➢ I extend my heart full thanks to all the dignitaries on the dais for giving me this
opportunity.
➢  Let me take leave of you.
➢  Thank you one and all.

Tuesday, January 28, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 29.01.20

திருக்குறள்


திருக்குறள் : 366

அதிகாரம் : அவாஅறுத்தல்

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.

 பொருள்:

ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.  "

பழமொழி

Great engines turn on small pivots.

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

கஷ்டத்தை அனுபவிக்காமல் வெற்றியின் வாசத்தை சுவாசிக்க முடியாது...

......காமராசர்

பொது அறிவு

1.எந்த நாடுகளின்  கொடி நமது இந்தியா நாட்டின் கொடி போன்று இருக்கும்?

ஹங்கேரி & நைஜர் நாடுகள்

2. நமது நாட்டு தேசிய கொடியின் நீள அகல விகிதம் எவ்வளவு?

3:2

English words & meanings

 Carpology – study of fruit. பழங்கள் மற்றும் அவற்றின் விதைகள் குறித்த படிப்பு

Caged-put inside a cage. கூண்டில் அடைக்க பட்ட

ஆரோக்ய வாழ்வு

சிறுதானியங்கள் நல்ல கொழுப்பு எனப்படும் உயர் அடர்த்தி லிப்போ புரதம் கொழுப்பு அளவினை ரத்தத்தில் அதிகரிக்கச் செய்கின்றன.

Some important  abbreviations for students

SIM - Subscriber Identification Module. 

Ad - Advertisement

நீதிக்கதை

குரங்கின் தந்திரம்

குறள் :
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.

விளக்கம் :
பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காக்கும் அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வருவதான ஒரு துன்பமும் இல்லை.

கதை :
ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை, தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது.

ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று. திடீரென ஒரு யோசனை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம். அவனும் வருவான் அவனை கொன்று இதயத்தை சாப்பிடு என கூறியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம். அடுத்த நாள் ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்து முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.

நடு ஆற்றில் சென்று கொண்டிருக்கும் போது ஆண் முதலை கூறியது நான் உன்னை என்ன செய்ய போகிறேன் தெரியுமான்னு கேட்டது. அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே அழைத்தாய் என்றது.

முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னை அழைத்து செல்கிறேன் என கூறியது. சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

சற்று யோசித்த குரங்கு, அடடா என்ன நண்பா இதை முன்னாடியே சொல்லகூடாதா? நேற்று நான் என் இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருப்பதாக கூறியது.

முதலையும் அப்படியா வா திரும்பி போய் எடுத்துகொண்டு வரலாம் என திரும்பவும் கரைக்கு வந்து விட்டது. தப்பித்த குரங்கு முதலையிடம் கூறியது, முட்டாள் முதலையே நீயெல்லாம் ஒரு நண்பன் என்னையே கொள்ள பார்கிறாயான்னு சொல்லிட்டு மரத்தின் மேல் ஏறி சென்றது.

நீதி :
நமக்கு ஒரு இடத்தில் துன்பம் ஏற்படப்போகிறது என முன்னதாகவே தெரிந்தால், அந்த துன்பம் தன்னை வந்தடைவதற்கு முன்னால் சிந்தித்து அதிலிருந்து விடுபட வேண்டும்.

புதன்
கணக்கு &  கையெழுத்து

சதுரங்க வேட்டை

ஒரு நாள் மாலை, மணி மிகவும் துருதுருவென இருந்தான். அம்மா அவனது வேகத்தை சரியாக மாற்ற, காணாமல் போன சதுரங்க அட்டையை உருவாக்க முடிவெடுத்தார். மெத்தைக்கு அருகில் ஒரு கட்டம் போட்ட சதுர அட்டை இருந்தது.அதில் 100 கட்டங்கள் இருக்க ,சதுரங்கம் விளையாட கச்சிதமாக வெட்டி எடுத்து வண்ணங்கள் தீட்ட சொன்னார் அம்மா. மணியும் அவ்வாறே செய்து முடிக்க அம்மா அவனை வெகுவாகப் பாராட்டினார்...

கேள்வி:
1)வண்ணம் தீட்டிய சதுரங்க அட்டையில் எத்தனை கட்டங்கள் உள்ளன?

2)மீதமுள்ள கட்டங்கள் எத்தனை?

கையெழுத்துப் பயிற்சி - 25



விடை:
1)8 × 8 = 64 கட்டங்கள்
2)100 - 64 = 36கட்டங்கள்

இன்றைய செய்திகள்

29.01.20

* 5 மாத கால அளவிலான புள்ளிவிவர அறிவியல் படிப்புகளைக் குறைந்த கட்டணத்தில் அளிக்க உள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

* சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாகி இருக்கும் நிலையில், வுஹான் மாநிலத்தில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பூர்வாங்கப் பணிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது.

* ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

* ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் பிரிவில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலும், மகளிர் பிரிவில் ருமேனியாவின் சிமோனா ஹாலப்பும் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

* ஜிப்ரால்டா் செஸ் திருவிழாவில் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டா் பிரக்ஞானந்தாவிடம் அதிா்ச்சித் தோல்வியடைந்தாா் முன்னாள் உலக சாம்பியன் வெஸ்லின் டோபலோவ்.

Today's Headlines

🌸IIT announces that they are going to give a course on statistics for the duration of five months with low fees.

🌸 As the Wuhana District of China is infected with Corona virus central government taken the first step to recall the trapped Indians from there.

🌸 Against the Hydrocarbon Process Tamil Kaveri farmers Association filed a case in the Supreme Court.

🌸 In Australia Open Tennis in Men's league 7division First grade Spanish player Rafael Natal and in women's division Rumania's Simono Hollaf advanced to quarter finals.

🌸 Ex World Chess  Champion Veselin  Topolav was defeated by India's  Young Grandmaster Pragnanatha in Gibraltar Chess 2020 created a shock wave among the players.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2GvHQls

Monday, January 27, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.01.20

திருக்குறள்



திருக்குறள் : 365

அதிகாரம் : அவாஅறுத்தல்

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

பொருள்

ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

பழமொழி

Sadness and gladness succeed each other.

அல்லல் ஒரு காலம் செல்வம் ஒரு காலம்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

இலக்கோடு செல்லும் மக்கள் வெற்றியடைகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எவ்வழியில் செல்கிறோம் என்று தெரியும்.

 ஏர்ல் நைட்டிங்கேல்

பொது அறிவு

1. பர்டோலி சத்தியாகிரகத்தை நடத்தியவர் யார்?

சர்தார் வல்லபாய் பட்டேல்.

 2. தண்டி உப்பு சத்தியாகிரகத்தின் போது காந்தியடிகள் நடந்த தூரம் எவ்வளவு ?

24 நாட்களில் 241 மைல் தூரம்.

English words & meanings

Bionomics – study of organisms interacting in their environments. உயிரினங்களின் வாழ்க்கை சூழல் பற்றிய அறிவியல் ஆய்வு.

Bacteriological - Related to the study of bacteria or microbes. நுண்ம ஆராய்ச்சியைச் சார்ந்த
நுண் உயிரிகளின் ஆராய்ச்சியைச் சார்ந்த

ஆரோக்ய வாழ்வு

சிறுதானியங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்வதால் இவை அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கு எதிராக ஒரு வல்லமைமிக்க பாதுகாப்பை உடலில் உருவாக்குகிறது.

Some important  abbreviations for students

ITV - Independent Television. 

BBC - British Broadcasting Corporation

நீதிக்கதை

தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்

கிளியின் நட்பு

குறள் :
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

விளக்கம் :
நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

கதை :
வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது.

அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை.

அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது.

கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது.

இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும்.

நீதி :
தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.

செவ்வாய்
English & Art

💁 crazy English language fact-4

🌸If you wrote out all the numbers (e.g. one, two, three . . . ), you would not use the letter "b" until the word "billion.

🌸 English quiz

🌸The below puzzle there are two set of  blanks...... fill in the blanks with the same pair of letters to complete an English word

⚡b__ ___ kp __ __ k
⚡__ __ s __ __ de

Answers :

⚡ backpack

⚡ cascade

இன்றைய செய்திகள்

28.01.20

* கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, சீனாவில் மருத்துவ படிப்புக்கு சென்றுள்ள சென்னை மாணவர்கள் அங்கிருந்து திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

* கோயம்பேடு சந்தையில் இரு வகையான (பெல்லாரி மற்றும் சாம்பார்) வெங்காயம் வரத்து அதிகரிப்பு: சாம்பார் வெங்காயம் விலை ரூ.60 ஆக குறைந்தது.

* சீனாவின் வுஹான் நகரம் உள்ளிட்ட இடங்களுக்கு விமானங்களை அனுப்பி அங்குள்ள இந்தியர்களை, கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

* ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்பராஸ் கான் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் விளாசி அணியை முன்னிலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

* உலகப் புகழ் பெற்ற பிரபல கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரயன்ட் என்பவர் நேற்று நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக பலியாகி உள்ளது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Today's Headlines

🌸Due to corona virus attack, Chennai students who have gone to medical study in China were unable to return.

 🌸Due to the increase in the coming of two types of onion (Bellary and Sambar)  in the koyambedu market, the price of sambar onion declined to Rs.60

🌸 Kerala Chief Minister Pinarayee Vijayan has written a letter to Prime Minister Modi demanding that flights should be sent to places including China's Wuhan city to protect the Indians from the corona virus attack.

 🌸 Sarbaraz Khan, who plays for Mumbai in Ranji Trophy cricket, has taken an unbeaten double century and lead  the team to the front.

 🌸Kobe Bryant, the world famous basketball champion, was tragically killed in a helicopter crash yesterday ,that shocked his fans around the world.



Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2GonxGu

Sunday, January 26, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 27.01.20

திருக்குறள்


திருக்குறள் : 364

அதிகாரம் : அவாஅறுத்தல்

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

பொருள் :

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

பழமொழி

Measure thrice before you cut once

ஒரு செயலை செய்யும் முன் பலமுறை சிந்திக்கவும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நல்ல நண்பர்களோடு மட்டுமே சேர்வேன்.

2. எனது நண்பர்களுக்கு என்னால் முடிந்த அளவு எல்லா வகையிலும் உதவி செய்வேன்.

பொன்மொழி

மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்வது பாதுகாப்பானது அல்லது விவேகமானது அல்ல.

✒ மார்ட்டின் லூதர்

பொது அறிவு

1.இந்தியாவில் தேன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?



 பஞ்சாப்.

2.தங்கத்தை கரைக்கும் கரைப்பான் எது?

 அகுவா ரிஜியா.

English words & meanings

Abstracted - not giving attention to what is happening around. வேறு சிந்தனை உடைய

Aquarium - a glass container filled with water, in which fish and water animals can be kept- நீர்வாழினக் காட்சிக் கலன்.

ஆரோக்ய வாழ்வு

கரும்பில் பொட்டாசியம்,
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. கரும்பு சிறுநீரக தொற்று,தொண்டை புண் சரி செய்யும்,கொழுப்பை குறைக்கும்.

Some important  abbreviations for students

AQI - Air Quality Index. 

MLRS - Multiple Launch Rocket System

நீதிக்கதை

தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்

கழுதையின் தந்திரம்

குறள் :
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.

விளக்கம் :
முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

கதை :
ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.

ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம், நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது. நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும் என வேண்டிக் கொண்டது.

நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல் என உறுமியது ஓநாய். ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.

காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது. கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து, ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.

கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

நீதி :
கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாக செயல்படுத்திக் கொள்ள வேண்டும்.

திங்கள்
தமிழ்
தூய தமிழ் சொற்கள் அறிவோம்

சர்க்கார்- அரசாங்கம்
சரகம்     -எல்லை
சிப்பந்தி- வேலையாள்
சிநேகம்- நட்பு
சுமார்   - ஏறக்குறைய
சேஷ்டை- குறும்பு
கடிகாரம்- மணிக்கூடு

இன்றைய செய்திகள்

27.01.20

* தமிழக காவல்துறையைச் சோ்ந்த 24 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் விருது கிடைத்துள்ளது.

* அமெரிக்காவின் ஹாா்வாா்டு பல்கலைக்கழகத்தில் 17-ஆவது வருடாந்திர இந்திய மாநாடு அடுத்த மாதம் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

* ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தொடரும் எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் 40 ஊராட்சி கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றம்.

* நியூஸிலாந்து டெவலப்மெண்ட் ஹாக்கி அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

* நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸24 Tamil Nadu police officers have received the presidential title award.

 🌸 The 17th Annual Indian Conference is being held on the 15th and 16th of next month at Harvard University, USA.

 🌸  Resolution has been passed at 40 municipal village council meetings across Tamil Nadu against the hydrocarbon project.

 🌸The Indian women's team beat the New Zealand Development Hockey team for 4-0.

 🌸 India won the 2nd T20 match against New Zealand by 8 wickets.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2RLIL6w

Saturday, January 25, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 26.01.20

திருக்குறள்


திருக்குறள் : 544

அதிகாரம் : செங்கோண்மை

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

பொருள்:

குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப்பொருந்தி உலகம் நிலை பெறும்.

பழமொழி

Contentment is more than a kingdom

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொறுத்து தான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது -

டாக்டர். அம்பேத்கர்

பொது அறிவு

1.டெல்லியின் பழங்காலப் பெயர் எது?

 இந்திர பிரஸ்தம்.

2.உலகில் மீன்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?

ஜப்பான்

English words & meanings

Zoogeography – study of geographic distribution of animals. குறிப்பிட்ட நில பரப்புகளில் காணப்படும் விலங்குகள் குறித்த படிப்பு.

Zingaro - an Italian gypsy. இத்தாலிய நாடோடி இனத்தவர்

ஆரோக்ய வாழ்வு

தொண்டையில் ஏற்படும் அல்சர், புண், வலி மற்றும் கொப்பலங்கள் ஆகியவற்றை வெந்தயம் முற்றிலுமாக நீக்குகின்றது. இருமல் மற்றும் தொண்டை கரகரப்பிலிருந்து நல்ல நிவாரணம் தருகின்றது.

Some important  abbreviations for students

BOGOF - Buy One Get One Free.   

NAAFI - Navy, Army and Airforce Institutes

நீதிக்கதை

ஒரு #மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், 😩

தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது.

இந்தப் பள்ளியில் பத்து வருஷமா படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாசாகலை. 😡

வகுப்புல பாடம் நடத்தும் போது நீ
என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியா ? னு
கோபாமாக திட்டினார்.

அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான்.

இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார். 😭

அந்தப் பையன் தெருவில் இறங்கி நடந்தான்.

உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே?  🤔

என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான்.

அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. 😄

ஒரு புதிய சிந்தனை உருவானது.

தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான்.

ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான்.
 அதன் பெயர் இயர் மஃப் (#ear #muff)
பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள்

இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள்.

ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது.

அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது.
பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என
அதிகாரி உத்தரவிட்டார்.

போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் வடிவில் அமைத்து கொடுத்தான்.

கோடீஸ்வரனானான்.

அவர்தான் #செஸ்டர்_கீரின்_வுட்.😊

சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த #ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் 👍

இன்றைய செய்திகள்

26.01.20

*சமூக நலம் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.

*குடியரசு தின விழாவையொட்டி 2020-ம் ஆண்டுக்கான‘பத்ம’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மறைந்த முன்னாள் மத்திய மந்திரிகளான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அருண் ஜேட்லி மற்றும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட 7 ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருது, விளையாட்டுப் பிரிவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் பி.வி சிந்து , கலை இலக்கியப் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், தொழிலதிபர்  வேணு சீனிவாசன் உள்ளிட்ட 16 பேருக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ளது.

*தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கான காவலர் குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறை இன்று (ஜனவரி 26) முதல் துவக்கம்.

 *ஜோகன்ஸ்பர்க் நகரில் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்குள் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து புதிய சாதனை. 1,022 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உலகிலேயே முதன் முதலாக 5 லட்சம் ரன்கள் குவித்த அணி என்ற சாதனை படைத்து பெருமை பெற்றது.

Today's Headlines

🌸President Ramnath Govind said on his speech on Republic day that the central government is fulfilling many issues based on Social welfare.

🌸 For the Republic day celebration our government announced the list of candidates who are eligible to receive "Padhma Bhushan Award" for 2020. In that list is the previous central ministers George Fernandos (late), Arun Jaitly and Sushma Swaraj along with 7 others. For sports Mary Kom and PV Sindhu, in the Art and Literacy section Krishnambal Jeganathan from Tamil Nadu and industrialist Venu Srinivasan and 16 others are selected. For 118 people "Padhmasree" award is announced.

🌸 To apply for  the Tamil Nadu Police Officials Quarters the online application method starts from today January 26th.

🌸 In the cricket test match which is held at Johannesburg,  between South Africa and England, England made a new record. The record being the first team which played 1,022 test matches and won five lakhs runs. This is a great pride and great achievement to England team.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2RqFjzj

குடியரசு தினத்தன்று கொடி ஏற்றுவது எப்படி?......

*சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......*


*# முதல் வித்தியாசம்......*

பதினைந்து ஆகஸ்ட் சுதந்திர தினத்தன்று கொடி  ஏற்றும்போது கொடி கீழிருந்து மேலே கயிற்றால்  இழுத்து பிறகு கட்டப்பட்டுள்ள கொடி திறக்கப்பட்டு பறக்கவிடப்படும் அன்றைய தினத்திற்கு மரியாதை செய்யும் விதமாக செய்யப்படும் இந்த நிகழ்வுக்கு "கொடியேற்றம்" அதாவது Flag hoisting என்றழைக்கபடுகிறது.,

இருபத்து ஆறு ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று
கொடி கம்பத்தின் உச்சியிலே கட்டப்பட்டு இருக்கும். அந்த முடிச்சு அவிழ்க்கப்பட்டு அதாவது கொடி  திறக்கப்பட்டு பறக்கவிடப்படும்  இதை கொடியை பறக்கவிடுதல்  அதாவது flag unfurling என்பார்கள்..

*#இரண்டாவது   வித்தியாசம்......*

சுதந்திரம் கிடைத்தபோது அரசியல் சட்டம் அமுலுக்கு வரவில்லை. அப்பொழுது பிரதமர் தான் நாட்டில் முதல் மனிதராக political head  கருதப்பட்டார். குடியரசு தலைவர் ஒரு constitutional monarchy, அவர் அப்போது பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் சுதந்திர தினத்தில் பிரதமர்  கொடி ஏற்றுகிறார். குடியரசு தலைவர் மாலையில் ரேடியோ தொலைக்காட்சி மூலமாக உரையாற்றுவார்..

குடியரசு தினத்தன்று அரசியல் சட்டம் அமுலுக்கு வந்தபடியால்  அரசியல் சட்டத்தின் தலைவர் மற்றும் பாதுகாவலர் என்ற முறையில் குடியரசு தலைவர் கொடியை பறக்கவிடுவார்..

*# மூன்றாம் வித்தியாசம்.......*

சுதந்திர தினத்தன்று டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றபடுகிறது

குடியரசு தினத்தன்று டில்லி ராஜ்  பாத்தில் கொடி பறக்கவிடப்படுகிறது.......

Friday, January 24, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.01.20

திருக்குறள்


அதிகாரம்:அவாவறுத்தல்

திருக்குறள்:363

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.

விளக்கம்:

எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

பழமொழி

Do not cry for the moon.

 எட்டாத கனிக்கு ஆசைப்படாதே.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

வாழ்வியல் மதிப்பு என்பது சொல்லுக்கும் செயலுக்கும் கிடைக்கும் பரிசு ஆகும்.

------பரமஹம்சர்

பொது அறிவு

1.ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?

கர்ணம் மல்லேஸ்வரி.

2.மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு எது?

 கல்லீரல்.

English words & meanings

yew - a tree with evergreen leaves found in coniferous forests. பசுமை மாறா ஊசியிலை மரவகை.

York stone - it is Carboniferous sedimentary rock used in array of building. கட்டிடத்திற்குப் பயன்படும் கல் வகை.

ஆரோக்ய வாழ்வு

வெந்தயம் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி ஏற்படுத்தும் குணம் கொண்டது. வெந்தயத்தை தொடர்ந்து உணவில் எடுத்துக்கொண்டால் தேவையற்ற ஊளைசதை என சொல்லப்படும் கொழுப்புகள் முற்றிலுமாக குறையும்.

Some important  abbreviations for students

M.O.T - Ministry of Transport. 

 DOS - Disk Operating System

நீதிக்கதை

தமிழ் கதைகள் - திருக்குறள் நீதிக்கதைகள்

கல்வியே அழியாத செல்வம்

குறள் :
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.

விளக்கம் :
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவுமில்லை.

கதை :
கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர்.

இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார்.

கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான்.

இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான்.

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது.

ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெரும்மையை உணர்த்தினார்.

நீதி :
கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.

இன்றைய செய்திகள்

25.01.20

◆தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்றும் தேர்வு முறையில் சீர்திருத்தங்கள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

◆திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக சென்னை மாநகராட்சி உருவாக்கிய துணை விதிகளை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இனி, குப்பைகளைஅகற்ற மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

◆குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

◆சீனாவிலிருந்து பரவும் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் குறித்து உலகம் முழுவதும் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

◆மெல்போர்னில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸில் நடப்பு சாம்பியனும் ஜப்பான் வீராங்கனையுமான நவோமி ஒசாகா 15 வயது அமெரிக்க வீராங்கனை கோகோ காஃபிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

Today's Headlines

🌸The TNPSC has announced that person who are writing the exam should not lose hope as the reforms in the selection process are underway.

 🌸The Tamil Nadu Government has given permission for the implementation of the by-laws laid down by the Madras Corporation regarding the management of the disaster.  No longer have to pay the garbage disposal corporation.

 🌸The Election Commission has informed the Supreme Court that political parties who has criminal background should not be given the opportunity in the election.

 🌸Official sources says that Indian students studying in China are safe and healthy as the world is panicking over the impact of coronavirus spreading from China.

 🌸Japanese champion Naomi Osaka shock shockingly lose her match against 15-year-old American player Coko Goph at the Australian Open in Melbourne.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2vk03jD

Thursday, January 23, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.01.20

திருக்குறள்


அதிகாரம்:அவாவறுத்தல்

திருக்குறள்:362

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

விளக்கம்:

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

பழமொழி

Don't judge a book by its cover.

 புறத்தோற்றம் கண்டு மயங்காதே.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

இடியிலும் மின்னலிலும் மின்சாரம் என்ற ஆற்றல் கிடைக்கும் என்றால் நம் உழைப்பிலும் முயற்சியிலும் வெற்றியும் கிடைக்கும் ...

------ மெகல்லன்

பொது அறிவு

1.இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் யார்?

சேரன் செங்குட்டுவன்.

2.இந்தியாவின் மிக நீளமான நதி எது?

 கங்கை நதி.

English words & meanings

xylophagous - an insect feeding on wood, மரக் கட்டையை தின்று வாழ்கின்ற பூச்சி.

 Xerophyte - a plant species which grows in desert only. பாலை நிலத் தாவரம்

ஆரோக்ய வாழ்வு

சிவப்பு மற்றும் கருநீலத்தில் இருக்கும் பழங்களில் அந்தோசயனின் என்ற ஒருவகை ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோயை தடுக்கும் தன்மை உடையது.

Some important  abbreviations for students

RAF - Royal Airforce. 

Prof. - Professor

நீதிக்கதை

வேதாளத்தை சுமந்து வந்துகொண்டிருந்த விக்ரமாதித்தியனிடம் அந்த வேதாளம் ஒரு கதை சொல்லத் தொடங்கியது. இதோ அந்த கதை. “விஜய்ப்பூர்” என்ற ஊரில் ரகு என்கிற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் எல்லோருக்கும் அவர்களுக்கு தேவை இருக்கிறதா, இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் அனைவருக்கும் உதவி வந்தான். இதனால் கவலையடைந்த அவனது பெற்றோர்கள் அவனுக்கு திருமணம் செய்தால் இக்குணம் மாறும் எனக்கருதி, சிறந்த அறிவாற்றல் மிக்க “ரமா” என்கிற பெண்ணை அவனுக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து சில காலம் கழித்து தன் கணவன் ரகுவிடம் அவன் இதற்கு முன்பு உதவி செய்த அனைவருக்கும் அதனால் பயன் கிட்டியதா என்பதை அறிந்து வருமாறு கூறினாள். இதை கேட்டு அவர்கள் அனைவரிடமும் விசாரித்த ரகு அவர்களுக்கு தான் செய்த உதவியினால் எவ்வித பயனும் இல்லை என்பதை அறிந்து வந்து ரமாவிடம் கூறினான். அப்போது ரமா, பிறருக்கு நேர்மையாக உதவுவதற்கு மருத்துவத்தொழிலைக் கற்று, அதன் மூலம் உதவுமாறு கூறினாள்.   அதைக் கற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும் என்று ரகு கூறிய போது “சந்திரநகர்” என்ற ஊரில் வைத்தியநாதன் என்ற மருத்துவரிடம் ஒரு வருடத்திலேயே மருத்துவத்தொழிலை யாரும் கற்றுக்கொள்ள முடியும் என்று கூறி, ரகுவை அவரிடம் சென்று மருத்துவம் பயிலக்கூறினாள் ரமா. ரகுவும் வைத்தியநாதனிடம் ஒரு வருடம் மாணவனாக இருந்து வைத்தியமுறைகளை கற்று தேர்ந்தான். அப்போது வைத்தியநாதன் ரகு தனது வைத்திய தொழிலை நேர்மையாக செய்யும் பட்சத்தில் தன்னிடமுள்ள அனைத்து வைத்திய குறிப்பு சுவடிகளையும் தருவதாக உறுதியளித்தார்.  பின்பு ஊருக்கு திரும்பிய அவன் தினமும் தனது வீட்டிலேயே மக்கள் அனைவருக்கும் வைத்தியம் பார்க்கத்தொடங்கினான். அப்படி ஒரு முறை ஏழை ஒருவருக்கு ரகு வைத்தியம் பார்க்கும் போது செல்வந்தர் ஒருவர் குறுக்கிட்டு தனக்கு உடனடியாக வைத்தியம் பார்க்குமாறும், அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் தருவதாக கூறினான். ஆனால் ரகு மறுத்துவிட்டான். மற்றொருநாள் அந்த நாட்டு மன்னரின் தாயாருக்கு உடல்நலம் சரியில்லாததால் அரண்மனைக்கு வந்து அவருக்கு சிகிச்சை அளிக்கும் படி அரசாங்க வீரர்கள் ரகுவை அழைத்தனர். தான் அரண்மனைக்கு சென்று வைத்தியம் பார்க்கும் நேரத்தில் இங்கிருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவர் என்பதால் மன்னரின் தாயாரை தனது வீட்டிற்கு அழைத்துவந்து வைத்தியம் பார்த்துக்கொள்ளுமாறு கூறி அவர்களை அனுப்பி விட்டான்.   இதையெல்லாம் அந்த ஊருக்கு வந்திருந்த துறவி ஒருவர் கவனித்து ரகுவை பாராட்டி ஆசிர்வதித்தார். அதோடு சந்திராநகர் சென்று, அவரது குருவிடம் மீதமிருக்கும் மருத்துவ ஓலைகளை வாங்கிவந்து அதன் மூலம் மேலும் சிறந்த சிகிச்சை அளிக்குமாறு ரகுவிடம் அடிக்கடி கூறிவந்தார். ரகுவும் ஒவ்வொருமுறையும் அங்கு செல்ல காலம் தாழ்த்தி வந்தான். ரகுவை அந்த சுவடிகளை வாங்கி வர ஒருநாள் அவன் மனைவி ரமாவே தனக்கு உடல் நலம் சரியில்லாது போலும், அவள் கணவணான ரகு தரும் எம்மருந்துகளை உட்கொண்டாலும் அவள் குணமாகாத மாதிரி நடித்தாள். இதனால் வேறு வழியின்றி ரகு தனது குரு வைத்தியநாதனிடம் சென்று ஓலைகளை வாங்கிவந்து, மருந்து தயாரித்து அதை ரமாவிற்கு கொடுத்தான். அவளும் அதை உண்டு குணமடைந்தது போல் நடித்தாள். இப்போது வேதாளம் “விக்ரமாதித்தியா ரகுவின் சுயநலத்தைப் பார். பிறருக்கு சிகிச்சை அளிக்க தன் குருவிடம் சுவடிகளை வாங்கச் செல்லாதவன், தனது மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டவுடன் ஓலைகளைப் பெற்றது சரியா? மேலும் நேர்மையாக மருத்துவ தொழிலை நடத்தினால் ஓலைச்சுவடிகளை தருவதாக கூறிய வைத்தியநாதன் எப்படி ரகுவிற்கு உடனே சுவடிகளைக் கொடுத்தார்? “எனக் கேட்டது “ரகு சந்திராநகரில் இருக்கும் தன் குருவிடம் செல்லும் காலத்தில், தன்னை நாடி வரும் நோயாளிகளுக்கு தான் சிகிச்சை அளிப்பதில் தடங்கல் ஏற்படும் என்றே அவரிடம் செல்ல காலம் தாழ்த்திவந்தான். பாதிக்கப்பட்டது மனைவி எனின் எந்த கணவனும் அவளுக்காக எத்தகைய காரியத்தையும் செய்வார்கள். இதில் அவனது சுயநலம் ஏதும் இல்லை. மேலும் ரகுவின் நேர்மையை பிறர் மூலம் அறிந்த அவனது குருவும் அவன் கேட்டவுடன், அவனுக்கு ஓலைச்சுவடிகளை கொடுத்து விட்டார்”. என்ற விக்ரமாதித்தியனின் விடையைக் கேட்டு வேதாளம் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

நீதி : நேர்மையாக வாழ்வது என்றும் நன்மையை தரும்.

வெள்ளி
சமூகவியல்

 *டெல்லியின் நிலப்பரப்பில் 20% காடுகளால் சூழப்பட்டுள்ளது.

*டோக்கியோவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நகரம் இது.

*டெல்லியின் காரி பாவ்லி சந்தை ஆசியாவின் மிகப்பெரிய மொத்த மசாலா சந்தையாகும்.

*டெல்லியின் மெட்ரோ நாட்டின் முதல் நவீன போக்குவரத்து அமைப்பு. டெல்லியின் மெட்ரோ நிலையம் உலகின் 13 வது பெரிய நிலையமாகும்.

இன்றைய செய்திகள்

24.01.20

 ★10, 12-ம் வகுப்புகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் தயாரித்துள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பு, ஜனவரி 27-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

★கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 250 சதவீதம் அதிகரித்திருப்பது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

★ஒருங்கிணைந்த வைஃபை கருவியை வடிவமைத்த புதுச்சேரியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவி பாக்கியலட்சுமி தேசியப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார்.

★சீனாவை உலுக்கியது மட்டுமல்லாமல் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு இதுவரை சீனாவில் 17 பேர் பலியாகியுள்ளனர். 550க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

★பிரீமியர் பாட்மிண்டன் லீக்கில் மும்பை ராக்கெட்ஸ் அணிக்கு எதிரான மோதலை லக்சயா சென், டாமி சுகிர்தோ மற்றும் துருவ்-ஜெசிகா ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் 3-0 என வென்றது சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்.

★கடந்த வாரம் ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற சானியா மிர்சா, காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

Today's Headlines

🌸It's announced that the questions prepared for 10th and 12th by Parents Teachers Association will be on sale from January 27th.

🌸 For the past 5 years the abuse against children is increased 250 % says the statistics taken by the National Crime Records Centre.

🌸 The government school student Bakkialakshmi from Pudhucherry who designed a Coordinating  WiFi instrument was selected for National level Competition.

🌸 Not only China but shaking the whole world thec virus Carona killed 17 people in China and 550 more people were affected.

🌸 In the Premier Badminton League Chennai Super Stars won due to the awesome play of Lakshya Sen, Tommy Sugirato and Dhruv Jessica. They won by 3-0 set.

🌸 Due to her wound Sania Mirza came out of the Australian Open Competition due to her wound.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2NTQI8z

MICE TEST - 23.01.20

மைத்துளி வணக்கம்


MICE TEST:48
1. இந்தியாவின்,"ககன்யான்" திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்கு செல்லும் ஆளில்லா விண்கலத்தில் பயணிக்கும் "வியோமா மித்ரா" யார்?

 a) இந்திய விமானி
 b) பெண் ரோபோ
c)குளோனிங் நாய்
d) ISRO விஞ்ஞானி

2. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாநிலம் எது?

a)மஹாராஷ்டிர
b)ஹரியானா
 c) டெல்லி
d)தமிழகம்

3. இந்தியாவின் மிக மாசுபட்ட நகரம் என்ற பட்டியலில் முதலிடம் எது?
a) Jharia
b)Noida
c) Lucknow
d)Gurugram

4. சிறுவயதிலேயே அறிவியல் துறையில் எழுத்தாளராகி உலக சாதனையாளரானதால் பால சக்தி புரஸ்கார்  விருதைப் பெற்றிருக்கும் சிறுவன் யார்?
a) கௌரி மித்ரா
b) ஓம்கார் சிங் பாத்ரா
c) சிவ பாரதி அன்பு பாரதி
d)லிடியன் நாதஸ்வரம்

5. வருகின்ற ஏப்ரல் மாதத்தில் "உலக திருக்குறள் மாநாடு" எங்கு நடைபெற உள்ளது?
a) கம்போடியா
b) கனடா
c)பிரேசில்
d) அமெரிக்கா

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

1. a) Australian Open
2. a) பீகார்
3. a) சில்கா ஏரி
4. b) uber
5. a) கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் ( முதல் காவல் நிலையமாக கோவை நகர சி - 2 ரேஸ்கோர்ஸ் காவல் நிலையம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக திண்டுக்கல் வடக்கு டவுன் காவல் நிலையமும் மூன்றாவதாக தர்மபுரி டவுன் காவல் நிலையமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன)
6. c) amazon

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. M.பரத், 7-ஆம் வகுப்பு
2. G.சுகூஷ், 7-ஆம் வகுப்பு
3. J. அனிஷா, 7-ஆம் வகுப்பு
    மூவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஷாஜஹான் நகர் கோயம்புத்தூரை சேர்ந்தவர்கள்.

4. M.ஆனந்த ஆர்ஷிதா, 6-ஆம் வகுப்பு ,Air force school, coimbatore

5. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
6.  S.சக்திதர்ஷினி, 8-ஆம் வகுப்பு
7. B.லக்‌ஷனா, 8-ஆம் வகுப்பு
8. M.செல்வபாரதி, 8-ஆம் வகுப்பு
9. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு

    இவர்கள் அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்


பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்... மேலும் முதன் முறையாக அரசுப்பள்ளி மாணவர்கள் 3 பேர் சரியான விடைகளை பதிவிட்டுள்ளீர்கள், அம்மாணவர்களுக்கும் அவர்களை ஊக்குவித்த ஆசிரியருக்கும் பாராட்டுகளை தெரிவித்து மகிழ்கிறோம்.....


from covaiwomenict https://ift.tt/36fxLUh

Wednesday, January 22, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.02.20

திருக்குறள்


அதிகாரம்:அவாவறுத்தல்

திருக்குறள்:361

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

விளக்கம்:

எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

பழமொழி

Business  neglected is business  lost.

 பாராத செயல்   பாழாகும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

வளர்ச்சி என்ற சொல் தனிமனித வாழ்க்கையில் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்துகிறது..

-------மார்க்கோனி

பொது அறிவு

1.தேசிய ஒருமைப்பாட்டு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

 நவம்பர் 19

2.தேநீரில் அடங்கியுள்ள கரிம அமிலம் எது?

 டானிக் அமிலம்

English words & meanings

Waltzing - to dance a waltz. சுழற்சி நடனமாடுகிற.

Weeded - to remove weeds, களை எடுக்கப் பட்ட.

ஆரோக்ய வாழ்வு

மஞ்சளில் உள்ள 'குர்குமின்' என்ற உட்பொருள் சிறந்த ஆன்டி-பயாடிக்காக செயல்படுவது மட்டுமின்றி புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்டாகவும் செயல்படுகிறது.

Some important  abbreviations for students

et al. -  et alii. (and other people) 

ibid.  -ibidem. (in the same place)

நீதிக்கதை

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

“ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.

“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.
வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.
அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார்.

“ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.

அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.

அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.
அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.
ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர்.

அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா.
"குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு.

பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.
அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.
விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.
அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

“பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.
அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.

“தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.
அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.
அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.
அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.
ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.

“சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.
அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.
"அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன் “கொல்” லென்று சிரித்தனர்.
அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

நீதி : சுத்தம் சுகம் தரும்

அறிவியல்
அறிவோம் அறிவியல்

உங்களுக்கு தெரியுமா?
* தேனீக்களுக்கு 6 கால்கள் 5 கண்கள் உண்டு
* ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு கிடையாது
* ஒரே தேன் கூட்டில் 50,000 தேனீக்கள் வரை வாழும்

இன்றைய செய்திகள்

23.01.20

★2020-21 ஆம் ஆண்டுக்கான திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. இதன்படி ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

★சிறப்பு உதவித் தேவைப்படும் குழந்தைகளுக்கு மட்டும் தேர்வின் போது கால்குலேட்டரைப் பயன்படுத்திக் கொள்ள சிபிஎஸ்இ அனுமதி அளித்துள்ளது.

★மலைப்பள்ளத்தில் உருண்டு விழுந்த காரிலிருந்து வெளியே வந்து மேலும் மூன்று உயிர்களைக் காப்பாற்றிய இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவி அலைகாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

★நியூஸிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

★ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீராங்கனை மரியா ஷரபோவா தோல்வி கண்டு வெளியேறினார். ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Today's Headlines

🌸 The Teacher Selection Board has released its schedule for the year 2020-21.  Accordingly, the Teacher Eligibility Test will be held on June 27 and 28.

 🌸The CBSE has allowed the use of the calculator for children with special needs during the exam ,

 🌸Alaika, a student from Himachal Pradesh, who got out of a car that crashed into a hillside and saved three lives, has been given the National Award.

 🌸 Indian team have  announced for 3 ODI series against New Zealand.

 🌸 Maria Sharapova who was the leading player lost  the first round of the Australian Open Grand Slam.  In the first round of the men's category  Spanish player Rafael Nadal progress to the second round.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/38xy65Y

MICE TEST - 22.01.20

மைத்துளி வணக்கம்.
MICE TEST:47

1.டென்னிஸில் மொத்தம் 4 Grand Slam போட்டிகள் ஓராண்டில் நடைபெறும்.அதில் ஆண்டின் துவக்கமான ஜனவரியில் நடைபெறும் போட்டி எது?

a) AUSTRALIAN OPEN
b)US OPEN
c) FRENCH OPEN
d)WIMBLEDON

2்.நீர் சேமிப்பு,வன வள மேம்பாடு, தீய செயல்களை தடுத்தல் (வரதட்சணை,குழந்தை திருமணம்)ஆகியவற்றைப்பற்றி மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உலகின் மிக நீளமான மனித சங்கிலியை(18034 கி்மீ நீளம்,5.16 கோடி மக்கள் பங்கேற்பு) நடத்திய மாநிலம் எது?

a) பீகார்
b) குஜராத்
c) ஒடிஸா
d) மே.வங்காளம்

3.இரவாடி டால்பின்கள்  காணப்படும் ஒரே இந்திய ஏரி எது?

a) சில்கா ஏரி
b) நைனிடால் ஏரி
c) சாங்கு ஏரி
d) தால் ஏரி

4.பின்வரும் எது,டாக்ஸி சேவை மற்றும் உணவு விநியோக வணிகம் சார்ந்த நிறுவனம்?

a) Somata
 b) Uber
c)Swisky
d)Amazon

5.தமிழக முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 3 காவல் நிலையங்களில் எது முதலிடத்தில் உள்ளது?

a) கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம்

b)திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலையம்

 c) தர்மபுரி நகர காவல் நிலையம்

d) திருப்பூர் நகர காவல் நிலையம்

6.Jeff Bezos என்பவர் எந்த  நிறுவனத்தின் CEO ?

a) Apple
b)Infosys
c)Amazon
d)microsoft

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

நேற்றைய விடைகள்

1. d)நேபாளம்
2.b) இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமும் ரஷ்யாவின் சுகோய் நிறுவனமும் இணைந்து உருவாக்கியது.
3.b) தீபிகா படுகோன்
4.a) ஹாக்கி
5.b) BIOCON

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. A.M.ஆனந்தன், 12 ஆம் வகுப்பு
    Akkv Aarunadu matric higher secondary school, திருச்சி

2. M.செல்வபாரதி, 8- ஆம் வகுப்பு
3. K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
4. P.தனுஷியா, 8-ஆம் வகுப்பு
5. B.லக்‌ஷனா ஸ்ரீ, 8-ஆம் வகுப்பு
6. சந்தியா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு

அனைவரும் ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருச்சியை சேர்ந்தவர்கள்.

பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்....


from covaiwomenict https://ift.tt/2tDv69q

Tuesday, January 21, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.01.20

திருக்குறள்


அதிகாரம்: அரசியல்

திருக்குறள்: 415

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க  முடையார்வாய்ச் சொல்.

விளக்கம்:
எவ்வளவு சிறிதே ஆயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும். கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.

பழமொழி

Cut your coat according to cloth .

 விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

துன்பங்கள் எல்லாம் ஏதாவது ஒரு பாடத்தை நமக்கு கற்றுத் தரும். அதனை சரியாக புரிந்து கொண்டால் இன்பங்களை  நம்முடையதாக மாற்றலாம்.

-------ஜேம்ஸ் வாட்

பொது அறிவு

1. Politics என்ற நூலை எழுதியவர் யார்?

 அரிஸ்டாட்டில்.

 2. 'War and peace' என்ற நூலை எழுதியவர் யார்?

லியோ டால்ஸ்டாய்.

English words & meanings

Vitrics –  study of glassware and glassy materials.

Velvety -  having a smooth and soft appearance and feel. மென்மையான, மெத்தென்ற

ஆரோக்ய வாழ்வு

இரவு உணவிற்கும் தூக்கத்திற்கும் இடையே குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி விடுபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் குறைகிறது.

Some important  abbreviations for students

A.M - Ante meridiem. 

P.M - Post meridiem

நீதிக்கதை

மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி "வீரனே எங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் போரில் பங்கேற்க வந்தேன்!" என்றான் அவன். "உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது" என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, "இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்" என்றான்.

"எப்படி உன்னை நம்புவது?" என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், "சரி செய் பார்க்கலாம்" என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், "சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?" என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் "என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்" என்றான். "இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே" என்று கிருஷ்ணர் யோசித்தார்.
"வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது" என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். 'இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்" என்றார் கிருஷ்ணர். 'யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்" என்றான் வீரன்.

கிருஷ்ணர் "வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்" என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் "தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்" என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.

புதன்
கணக்கு & கையெழுத்து

ஜல்லிக்கட்டு கணக்கு

ஒரு தடுப்பறைக்குள்
12 காளைகள் அடைக்கப்பட்டிருந்தன. மைதானத்தின் பக்கங்களை
ஒரு ரவுண்ட் சுத்திவந்துப் பார்த்தால் 30 தடுப்பறைகள் இருந்தன.

கேள்வி: ஜல்லிக்கட்டு மைதானத்தில் அடைத்து
 வைத்திருக்கும் மொத்தக் காளைகள் எத்தனை???

விடை:
12 × 30 = 360 காளைகள்

கையெழுத்துப் பயிற்சி- 24



இன்றைய செய்திகள்

22.01.20

*காட்டுத்தீ, ஆலங்கட்டி மழையை அடுத்து இப்போது ஆஸ்திரேலியா மக்களின் இயல்பு வாழ்க்கையை புழுதிப்புயல் பாதித்து வருகிறது.

*சென்னை புத்தக கண்காட்சிக்கு (ஜனவரி 9 முதல் 21 வரை)
13 லட்சம் வாசகர்கள் வருகை தந்துள்ளனர் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் வெளீயீட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

*கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி,கோவையை, சாலை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற, அனைவரும் சாலை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்,'' என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

*அமெரிக்காவைப் போன்று ஜப்பானும் விண்வெளி பாதுகாப்புப் படையை உருவாக்கும் என அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

*சென்னை- கோவை வழித்தடத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 68 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

*19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தி இந்தியா இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Today's Headlines

🌸 After the wildfire and hail, the natural life of the people of Australia is now suffering from dust storm .

🌸  The South Indian Booksellers and Exporter's Association says it has reached 13 lakh readers in Chennai Book Fair (January 9 to 21)

 🌸 At the Road Safety Awareness Program held at the Central Regional Transport Office, Coimbatore, collector   Rajamani urged all people to follow road rules to make kovai as a road accident free district.

 🌸 Like the US, Japan will create a space security force said Prime Minister Shinzo .

 🌸Southern Railway has announced that 68 special trains will be operated between Chennai- Coimbatore to avoid the crowd.

 🌸 India beat Japan by 2-0 in World Cup ODI cricket for u-19. On this India registered  the 2nd victory.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/2NMdLSG

MICE TEST - 21.01.20

மைத்துளி வணக்கம்.


MICE TEST:46

1.இந்தியா எந்த நாட்டின் எல்லையில் இரண்டாவது ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியை(நேற்று) அமைத்துள்ளது?

a) மியான்மர்
b) சீனா
c) பங்களாதேஷ்
d) நேபாளம்

2.Su Khoi 30 MKI ரக போர் விமானம் பற்றிய தகவல்களில் எது தவறானது?

a) இது BrahMos ஏவுகணையை சமந்து செல்லும்

b)இதன் தயாரிப்பு நிறுவனம் ஜப்பான்

 c) தஞ்சை விமானப் படை தளத்தில் இது சேர்க்ப்பட்டுள்ளது

d)இதன் படை அணிக்கு222 _Tiger sharks என்று பெயர்

3.மக்களிடையே மனநலம் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாட்டை ஊக்குவிக்கும் வண்ணம்,Crystal Award ,பின்வரும் யாருக்கு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவரும் உலக பொருளாதார மாநாட்டில்   வழங்கப்பட்டது?

a) ப்ரியங்கா சோப்ரா
b) தீபிகா படுகோன்
c) ஷப்னா ஆஸ்மி
d) மனீஷா கொய்ராலா

4.ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக 25000 அமெரிக்க டாலர்களை கொடுத்த இந்திய விளையாட்டு அமைப்பு எது?

a) ஹாக்கி
b) கிரிக்கெட்
c) டென்னிஸ்
d) பாட்மிண்டன்

5.சமீபத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் உயரிய விருதான " Order of Australia " என்ற விருதைப் பெற்ற Kiran Mazumdar Shaw என்ற பெண்மணி பின்வரும் எந்த நிறுவனத்தின் Founder and Chairman ஆவார்?

a) PEPSI
b)  Biocon
c) ICICI
d) Adidas

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய link


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBaNN_Sf_kw_7Ly2SMQVCsx9pUDxt7Zo4hFZi5fb-ny_AuGw/viewform?usp=sf_link

______________________________________________________________________________

நேற்றைய சரியான விடைகள்

Ans for MT:45
1. b) ஜெர்மனி
2. b) விராட் கோலி
3. d) k4 ஏவுகணையை DRDO தயாரித்துள்ளது.
4. a)சுவிட்சர்லாந்து, டாவோஸ்
5. c) சாலை பாதுகாப்பு வாரம்

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1.K.விசாலினி, 8-ஆம் வகுப்பு
2. P. தனுஷியா, 8-ஆம் வகுப்பு
3. சந்திநா ஜோசப்பின், 8-ஆம் வகுப்பு
4. லக்‌ஷனா ஸ்ரீ, 8- ஆம் வகுப்பு

அனைவரும் ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சியை சார்ந்தவர்கள்.... பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்


from covaiwomenict https://ift.tt/2Rd0Mf6

Monday, January 20, 2020

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 21.01.20

திருக்குறள்


திருக்குறள் - 361

அதிகாரம் : அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.

பொருள் : எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

பழமொழி

 "The future crop is known in the germ.

 விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
 
இரண்டொழுக்க பண்புகள்

1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .

2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.

பொன்மொழி

அறிவு என்றுமே ஒரு செயலின் இருமுனைகளையும் ஆராய்வதாக இருக்க வேண்டும். நன்மை தீமைகள் தெளிதல் வேண்டும் ...

------ஏலி விட்னி

பொது அறிவு

1. முதன்முதலில் வெளிவந்த கார்ட்டூன் படம் இது?

Snow White and seven dwarfs(1937)

 2. ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்திய இயக்குனர் யார்?

 சத்யஜித் ரே.

English words & meanings

Urbanology – study of urban development of cities.
கிராமங்கள் நகரமயமாதல் குறித்த அறிவியல்.

Unalterable -not able to be changed.
மாற்றமுடியாத

ஆரோக்ய வாழ்வு

அதிக அளவு நீர் குடிக்கும்போது, உடலில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் நச்சுப் பொருள்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறி உடலை சுத்தப்படுத்தி விடுவதால் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

Some important  abbreviations for students

min - minute. 
sec - second

நீதிக்கதை

கொடுத்துப் பெறுதல்

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.
அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.
இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை!

நீதி : கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்

இன்றைய செய்திகள்

22.01.20

*தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 * நந்தனம், கிண்டி மற்றும் சின்னமலை ஆகிய  4 மெட்ரோ நிலையங்களிலும் நிமிடத்திற்கு ரூ.1 கட்டணத்தில் மின்சார ஸ்கூட்டர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

*ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் தாக்கக்கூடிய போர்விமானங்கள் தஞ்சை விமானப்படையில் இணைப்பு.!

* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

*ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.

Today's Headlines

🌸The Cabinet has approved the setting up of a crude oil refinery at Thoothukudi at a cost of Rs 40,000 crore.

  🌸 Electric scooter facility has been introduced at the four metro stations in Nandanam, Kindi and Chinnamalai at Rs.1 per minute

 🌸 Fighter jet warplanes which can hit 2.8 times faster than the sound was Linked In Tanjore air force

 🌸 Can apply in online upto January 20 for the Group-1 Examination conducted by the Tamil Nadu Government Employee Board

 🌸 ICC has released a list of ODI Cricket Batsmen.  Indian players Virat Kohli and Rohit Sharma topped the list.

Prepared by
Covai women ICT_போதிமரம்


from covaiwomenict https://ift.tt/36d1X2j

back to top

Back To Top