Sunday, December 8, 2019

BIOMETRIC- வருகைப்பதிவு நேரம்(BIOMETRIC WARNING)

BIOMETRIC- வருகைப்பதிவு நேரம்(BIOMETRIC WARNING) குறித்து மேலூர் கல்வி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.


வருகைப்பதிவேடு முறைமை சார்பாக கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை
பின்பற்றுமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


1. பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை தரும் நேரங்களான காலை 9 மணி வரை பச்சை நிறம், 9 மணி முதல் 9.15 மணி வரை - மஞ்சள் நிறம் மற்றும் 9.15 மணி முதல் 9.30 மணி வரை - சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவி பதிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2. ஒரு ஆசிரியருக்கு 3 நாட்கள் சிவப்பு நிறமாக தொட்டுணர் கருவியில் பதிவு இருப்பின் 1/2 நாள் தற்செயல் விடுப்பாக கணக்கிடப்பட வேண்டும்.

3. பள்ளியில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் காலை 10.00 மணியளவில் பணிக்கு வருபவராயின் காலை 10.00 மணிக்கும் மாலை 6.00 மணிக்கும் தொட்டுணர் கருவியில்
பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

4, சிறப்பு வகுப்பு மேற்கொள்ளும் ஆசிரியர்கள் காலை ஒரு மணி நேரம் முன்னதாகவும், மாலையில் ஒரு மணி நேரம் பின்னதாகவும் தொட்டுணர் கருவியில் பதிவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

back to top

Back To Top