Tuesday, September 10, 2019

தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவசப் பயிற்சி: சேர செப்.16 கடைசி

சென்னை கிண்டியில் உள்ள அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும் பயிற்சிகளில் செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
சென்னை கிண்டியில் உள்ள அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறியியல், பொறியியல் அல்லாத 8 தொழிற்பிரிவுகளில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 
இந்தப் பயிற்சிகளில் செப்டம்பர் 16-ஆம் தேதிக்குள் நேரடியாகச் சேரலாம். 
இப்பயிற்சியில் சேருவோருக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், இலவசப் பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகம், சீருடை, மாதாந்திர உதவித் தொகையாக ரூ.500 ஆகியவை வழங்கப்படும். 
இதுகுறித்த விவரங்களுக்கு 94990 55651 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

back to top

Back To Top