ஆசிரியர் தின கொண்டாட்டம் 103 வயதில் கல்லூரிக்கு வந்த முன்னாள் மாணவர்
சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரிக்கு வருகை தந்த 103 வயதாகும் முன்னாள் மாணவர், தனது மலரும் நினைவுகளை இன்றைய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர், கடந்த 1917-ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தற்போது 103 வயதாகும் இவர், தன்னுடைய இளங்கலை பொருளியல் பட்டத்தை 1938-ஆம் ஆண்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் பயின்றுள்ளார். அதன் பின்னர், தில்லியில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் வேலை கிடைத்து சென்றவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றியுள்ளார்.
தற்போது சென்னையில் வசித்து வரும் அவர், ஆசிரியர் தினத்தில் தான் படித்த கல்லூரியைப் பார்ப்பதற்காக வியாழக்கிழமை காலையிலேயே ஆவலோடு வந்திருந்தார்.
தற்போது இருக்கும் கல்லூரி பேராசிரியர்களைச் சந்தித்து அவர்களோடு பேசி கருத்துக்கள் பரிமாறி மகிழ்ந்தார்.
பின்னர் தான் பயின்ற பொருளியல் துறை வகுப்புக்குச் சென்று, தான் அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்து தன்னுடைய பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார். பின்னர் தற்போதைய மாணவர்களிடம் தன்னுடைய கல்லூரி நாள் அனுபவங்கள் பற்றியும், தான் செய்த குறும்புகள் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் போட்டி நிறைந்த தற்போதைய உலகில் பாடங்கள் மட்டும் படித்தால் போதாது, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உலகத் தரத்தில் தங்களுடைய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
103 வயதாகும் தங்கள் கல்லூரியின் மிக மூத்த பழைய மாணவரை, பேராசிரியர்கள் பொன்னாடை போர்த்தியும், சந்தன மாலை அணிவித்தும் அவருக்கு சிறப்பு செய்தனர். இந்த வயதிலும் தான் படித்த கல்லூரியை நினைவில் வைத்து, கல்லூரிக்கு வருகை தந்த பார்த்தசாரதியின் செயல் தங்களுக்கு மிகவும் உற்சாகத்தை தருவதாக, கல்லூரி முதல்வர் ராவணன் தெரிவித்தார்.
103 வயதிலும் யாருடைய துணையும் இல்லாமல் கம்பீரமாக நடந்து செல்லும் பார்த்தசாரதி, முழு கல்லூரியையும் சுற்றி பார்த்த பின்பு, பசுமையான பல நினைவுகளோடு மாணவர்களிடமிருந்து பிரியா விடை பெற்று புறப்பட்டார்.

No comments:
Post a Comment